திபெத்திய நாடகம்
中国国际广播电台

திபெத்திய நாடகம் திபெத் மொழியில் அஜிலாம் என அழைக்கப்படுகின்றது. லாம் என்றும் அழைக்கப்படலாம். இதன் பொருள் தேவதை என்பது, திபெத்திய நாடகம் மிகவும் நீண்ட வரலாறுடையது. பல்வேறு கிளைகள் உள்ளன. அரங்கேற்ற வடிவம் தேசிய இன தனிச்சிறப்புடையது. இளவரசி வென் செங், இளவரசர் னோசான் முதலிய 8 நாடகங்கள் இதன் முன் மாதிரிகளாகும். நாடகத்தில் பயன்படுத்தப்படும் முகமூடி, சட்டை பல்வகை நிறங்களை உடையவை. உருவம் அழகானது. ராகம் இனிமையானது. இவை எல்லாம் திபெத் நாடகத்தின் சிறந்த பண்பாட்டு அடிப்படையை வெளிப்படுத்துகின்றன.

நாட்டுப்புற நடனம் மற்றும் பாடலின் மூலம் கதையைக் காட்டும் ஒட்டுமொத்த அரங்கேற்ற கலை திபெத் நாடகமாகத் திகழ்கின்றது. 15வது நூற்றாண்டு முதல், காசுய் மதத்தின் துறவி தாங்துன் சேபு புத்த மதக் கதையை அடிப்படையாகக் கொண்டு, நடன மற்றும் பாட நாடகத்தை பதிப்பித்தார். இந்த நாடகங்கள் பல்வேறு இடங்களில் அரங்கேற்றப்பட்டன. இது திபெத் நாடகத்தின் துவக்க வடிவமாகும். பின்னர், பல நாட்டுப்புற கலைஞர்களின் முயற்சி மூலம், திபெத் நாடகம் மேம்பட்டு வருகின்றது. புதுமையான திபெத் நாடகம், நாடகக் கதை, நடனம், குறிப்பட்ட ராகம், பல்வேறு சட்டை, முகமூடி, ஆகியவை இருக்கின்றன. இசை குழு, பாடகர் ஆகியோர் நாடகத்துடன் சேர்ந்து அரங்கேற்றுகின்றனர். இது ஒட்டுமொத்த கலையாக மாறியுள்ளது.

 

திபெத் உள்ளூர் பிரதேசத்தில் திபெத் நாடகக் குழு அதிகமாக உள்ளன. கிராமப்புறத்தின் சதுக்கத்தில், கூடாரத்தில் அல்லது துணியால் சுற்றிவளைக்கப்பட்ட பிரதேசத்தில் இது அடிக்கடி நடிக்கப்படுகின்றது. இதைக் கண்டுகளிக்க மக்கள் 5 கிலோமீட்டர் தூரத்திலிருந்து கூட்டகூட்டமாக வருகின்றனர்.