அனைத்து சீன மகளிர் சம்மேளனம்

中国国际广播电台

அனைத்து சீன மகளிர் சம்மேளனமானது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அமைத்து, பெண் விடுதலைக்கான பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் பல்வேறு வட்டாரங்களின் மகளிர் ஒன்றிணைப்பு நிறுவனமாகும். அது பரந்துபட்ட பிரதிநிதித்துவம், மக்கள் மற்றும் சமூகத்தன்மை வாய்ந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசுடன் சீன மகளிர்க்கு உள்ள தொடர்பாக அது திகழ்கிறது. நாட்டின் அதிகாரத்துக்கு அது முக்கிய சமூக ஆதாரத் தூணாகும். 1949ஆம் ஆண்டின் மார்ச் திங்களில் அது நிறுவப்பட்ட போது, அனைத்து சீன ஜனநாயக மகளிர் சம்மேளனம் என அழைக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டில், அதன் பெயர் சீன மக்கள் குடியரசின் மகளிர் சம்மேளனமாக மாற்றப்பட்டது. 1978ஆம் ஆண்டில் அனைத்து சீன மகளிர் சம்மேளனம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பொருளாதார மற்று ம் சமூக வளர்ச்சியில் பங்கெடுக்க மிக பரந்துபட்ட பெண்களை ஒன்றிணைத்து அணி திரட்டுவது, மகளிர் உரிமை மற்றும் நலனை பிரதிநிதித்துவப்படுத்தி பேணிக்காப்பது, ஆண் பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்துவது ஆகியவை அதன் அடிப்படை பணிகள்.