அரசியல் நடவடிக்கைகளில் மகளிர் பங்கெடுப்பது
中国国际广播电台

சீன அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, பெண்கள் ஆணுக்குச் சமமான அரசியல் உரிமையை அனுபவிக்கின்றனர். ஆணுக்குச் சமமான தேர்தல் உரிமையும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் பெண்களுக்கு உண்டு. தேசிய நிர்வாகத்திலும் பதவியேற்பதிலும் ஆண்களுடன் இணைந்து அவர்கள் சமநிலையில் பங்கெடுக்கின்றனர். 10வது சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகளில், 604 மகளிர் பிரதிநிதிகள், மொத்த பிரநிதிநிதி எண்ணிக்கையில் 20.2 விழுக்காடு வகிக்கன்றனர். 21 மகளிர் நிரந்தர உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 13.2 விழுக்காடு பெறுகின்றனர். 10வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களில், மகளிர் உறுப்பினர்களின் எண்ணிக்கை 373 ஆகும். உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் இது 16.7 விழுக்காடாக உள்ளது. மகளிர் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 ஆகும். நிரந்தர உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் இது 11.7 விழுக்காடு பெறுகிறது. அரசு விவகாரங்களில் பங்கெடுக்கும் மகளிரின் விகிதத்தை உத்தரவாதம் செய்து, அவர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்கச் செய்யும் வகையில், பெண் ஊழியர்களைப் பயிற்சி தந்து, தெரிவு செய்யும் முறைமையை சீனா மேம்படுத்தியுள்ளது. 2003ஆம் ஆண்டில் சீனாவில் 7 பெண்கள் நாட்டின் தலைமை பதவிகளில் அமர்ந்துள்ளனர். சீனத் துணைத் தலைமை அமைச்சர் ஊ யி, சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர் ஹெ லு லி, கு சியு லியான் மற்றும் உயுன்சிமுகெ, அரசவை உறுப்பினர் சென் ச்சி லி, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர் லியு யான் துங் மற்றும் ஹௌ ச்சியான் சியு ஆகியோர் இடம்பெறுகின்றனர். சீன அரசவையின் 28 துறைகளில் ஒரு பெண் அமைச்சரும், 15 பெண் துணை அமைச்சர்களும் உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள மாநில, பிரதேச மற்றும் மாவட்ட நிலை கட்சி மற்றும் அரசியல் அமைப்புகளில் தலைமைப் பதவி ஏற்ற பெண்களின் எண்ணிக்கை 5056 எட்டியுள்ளது. அவர்களில், 56 மாநில நிலை பெண் ஊழியர்களும், 500 பென் மேயர்கள் மற்றும் துணை மேயர்களும் உள்ளனர். அரசு விவகாரங்களில் பங்கெடுக்க வேண்டும் என்பதை மேலும் அதிக பெண்கள் புரிந்து கொண்டுள்ளனர். பிரதேச மக்கள் பேரவைப் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் 73.4 விழுக்காட்டு மகளிர் பங்கெடுத்துள்ளனர்.

நடைமுறைக்கு வந்துள்ள 2001ஆண் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான சீன மகளிர் வளர்ச்சி பற்றிய திட்ட உருவரைவில் வகுக்கப்பட்ட முக்கிய குறிக்கோள்களில், தேசிய மற்றும் சமூக விவகாரங்களை நிர்வகிப்பதிலும் கொள்கை தீர்மானிப்பதிலும் மகளிர் பங்கெடுக்கும் நிலையை உயர்த்துவது; பல்வேறு நிலை அரசுகளின் தலைமை குழுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் ஊழியர்களும், பல்வேறு நிலை அரசாங்க வாரியங்களிலும் 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தலைமை பீடங்களில் பெண் ஊழியர்களும் உள்ளனர்; அரசு ஊழியர்களில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது; அதிகமான துறைகளிலும் தொழில்களிலும் பெண் பொறுப்பாளர்களின் எண்ணிக்கை பெண் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றதாக உள்ளது; கிராம மக்கள் கமிட்டியிலும் நகர சமூக கமிட்டியிலும் பெண்களின் பங்கேற்பு விகிதத்திற்கு உத்தரவாதம் செய்யப்படுவது; விவகாரங்களில் மகளிர் பங்கெடுக்கும் வழிமுறையை விரிவாக்கி, பங்கெடுக்கும் நிலையை உயர்த்துவது ஆகியவை அடங்கும்.

அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கெடுப்பதற்கு நல்ல சமூக சூழ்நிலையை சீன அரசு மகளிருக்கு முழுமூச்சுடன் உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, பெண் ஊழியர்களுக்கான பயிற்சியை வலுப்படுத்தி, பல துறைகளில் திறமை கொண்ட உயர் நிலை மகளிர் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பது, அரசு விவகாரங்களை மகளிர் விவாதித்து பங்கெடுக்கும் கருத்தையும் போட்டி போடும் திறனையும் உயர்த்துவது, பயிற்சி அளிப்பதன் மூதலம் சிறப்பு தொழில் நுட்ப தொழிலாளி மற்றும் பெண் நிர்வாகிகளின் அரசியல் திறனையும் உயர்த்துவது ஆகியவை இதில் அடங்கும்.