சமூக நடவடிக்கைகளில் மகளிர் பங்கெடுப்பது
中国国际广播电台

சீனப் பொருளாதார வளர்ச்சியுடன், மேலும் நிறைய மகளிர் சமூக நடவடிக்கைகளில் பங்கெடுக்கின்றனர்.

சீனாவின் மேற்குப் பகுதி வளர்ச்சி என்ற நெடுநோக்கு திட்டத்தைச் சார்ந்து, அருமையான தாயகமான மேற்குப் பகுதியை கட்டுவது என்ற நடவடிக்கையை மேற்கொள்வது, மேற்குப் பகுதியை கவனித்து அன்னையரின் அன்பை பகிர்ந்து கொள்வது என்ற திட்டத்தைத் துவக்குவது, 20 கோடி யுவானைத் திரட்டி நீர் தேக்கத்தை கட்டுவதன் மூலம் 7 லட்சம் 80 ஆயிரம் மக்களுக்கு நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பது, மகளிர்தாயகம்சுற்றுச்சூழல் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பசுமை திட்டப்பணியை விரைவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம், அனைத்து சீன மகளிர் சம்மேளனத்துக்கு உலகளாவிய 500 என்ற புகழ் ஐ.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி அலுவலகத்தினால் சூட்டப்பட்டுள்ளது.

குடி மக்களின் ஒழுக்க நிலை செயல் திட்ட வரைவுக்கு இணங்க, சீன சிறு குடி மக்கள் ஒழுக்க கட்டுமான திட்டம் நடைமுறைக்கு வந்து, இளைஞர் மற்றும் குழந்தைகளிடையே நாட்டுப்பற்று புத்தகம் படிப்பு என்ற நடவடிக்கையில் பல கோடி குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளனர். குழந்தைகளின் ஒழுக்கமும் செயல்பாடும் மேம்பட்டுள்ளது.

குடும்ப கல்வி கருத்துக்களை புதுப்பிப்பதை முக்கியமாக கொண்டு குடும்ப கல்வி பணியை ஆழமாக்குவது, ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று எடுத்து, அவர்களுக்கு மிகச் சிறந்த உடல் நல பராமரிப்பும் கல்வியும் வழங்குவது பற்றிய அறிவை பரப்புவது, 3 லட்சம் பெற்றோர் பள்ளிகளைத் துவக்குவது, 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் (நகரங்களில், மண்டலங்களில்) குடும்ப கல்வி சங்கங்களை நிறுவி, குடும்ப கல்வி நிலையை உயர்த்த அனைத்து சீன மகளிர் சம்மேளனம் பெற்றோர்களுக்கு உதவியுள்ளது.

ஏழை பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி திட்டம்(Spring Bud Project), சீன குழந்தை மற்றும் பதின்பருவத்தினரின் ஆரோக்கிய பாதுகாப்பு வளர்ச்சி திட்டம், சீன குழந்தைகளுக்கான அறநிலை நாள் உள்ளிட்ட பெரிய வகை பொது சமூக நல நடவடிக்கைகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து உற்சாக ஆதரவைப் பெற்று, 30 கோடி யுவானைத் திரட்டியுள்ளன. ஏழை பிரதேசங்களிலுள்ள குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றி அவை பங்காற்றியுள்ளன.

5 துறைகளிலும் சிறப்பான நாகரிக குடும்பத்தை நிறுவும் நடவடிக்கை

குடும்பம் என்பது, அனைத்து சீன மகளிர் சம்மேளனம் ஈடுபட்டுள்ள பாரம்பரிய துறையில் உள்ளது. கடந்த 50ஆம் ஆண்டுகள் முதல், 5 துறைகளில் சிறப்பாக இருந்த நாகரிக குடும்பங்களுக்கான மதிப்பீடு மற்றும் தெரிவு செய்வதில் அனைத்து சீன மகளிர் சம்மேளனம் ஈடுபட்டு வருகிறது. 1999ஆம் ஆண்டின் இறுதி வரை, பல்வேறு இடங்களில், பாராட்டப்பட்ட மாநில நிலைக்கு மேற்பட்ட நாகரிக குடும்பங்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியது. இந்தக் குடும்பங்களின் செயல்பாடுகள் அடிக்கடி செய்திகளில் அறிவிக்கப்படுகின்றன, அல்லது நகரங்களிலும் கிராமங்களிலும் கலை நிகழ்ச்சி மூலம் பரப்பப்படுகின்றன. குடும்பங்கள் நவீன சமூக வாழ்க்கையை ஏற்க துணை புரியும் வகையிலும் நாகரிகமான, ஆரோக்கிய மற்றும் அறிவியல் வாழ்க்கை முறையை பிரச்சாரம் செய்யும் வகையிலும், பல்வேறு இடங்களிலுள்ள மகளிர் கூட்டமைப்புகள் பல்வகையான நடவடிக்கைகளை நடத்துகின்றன. இதனால், உலகம், வாழ்வு மற்றும் மதிப்பு பற்றிய சரியான கண்ணோட்டங்களை குடும்பத்தினர் பெறுகின்றனர். தவிர, குடும்ப பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி, குடும்ப விளையாட்டு போட்டி ஆகியவற்றின் மூலம் இணக்கமான சூழ்நிலையையும் ஒற்றுமையையும் குடும்பங்களில் உருவாக்குவதற்கு பல்வேறு நிலை மகளிர் கூட்டமைப்புகள் உதவி வழங்கியுள்ளன. நேர்த்தியான கையெழுத்து, ஓவியம், கை வினை பொருட்கள் பற்றிய பொருட்காட்சிகள் இவற்றில் அடங்கும் குடும்ப கலை பரிமாற்ற நடவடிக்கையும், வீட்டு அலங்காரம், உணவு சமையல், உடை தயாரிப்பு உள்ளிட்ட அறிவியல் முறையான குடும்ப நலத் திட்ட நடவடிக்கைகளும் தன்னம்பிக்கை ஊட்டி, ஆக்கப்பூர்வமான வாழ்க்கை போக்குகளை மக்களின் மனதில் உருவாக்கியுள்ளது.

வறுமையிலிருந்து விடுவித்து வளம் காணச் செய்வது, தொழில் நுட்பத்தின் மூலம் வேளாண்மையை வளர்ப்பது ஆகியவற்றைச் சார்ந்து, பல்வேறு இடங்களின் கிராமங்களில், அருமையான விவசாயக் குடும்பம் என்ற நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது. பழைய வழக்கங்களை நீக்குவது, நல வாழ்வு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தை வலுப்படுத்துவது, உழைப்பு மூலம் வளம் அடைந்து வாழ்க்கை தரத்தை உயர்த்துவது ஆகியவற்றுக்கு இது வழிகாட்டியுள்ளது. சில மாநிலங்களில், 5 சீர்திருத்தங்களும்--நீர் சீர்திருத்தம், கால்வாய் சீர்திருத்தம், சாலை சீர்திருத்தம், கழிப்பறை சீர்திருத்தம், பட்டி சீர்திருத்தம்; 4 சுத்தமும்சுத்தமான குடிநீர், சுத்தமான வீதி, சுத்தமான குடும்பம், சுத்தமான வீடு; 3 ஒழுங்கும்ஒழுங்கான கட்டடங்கள், ஒழுங்கான சாமாங்கள், ஒழுங்கான வீடுகள் என்பவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குடும்பங்களின் தோற்றமும் ஊர்களின் தோற்றமும் பெருமளவில் மாற்றமடைந்துள்ளன. நகரங்களிலும் பேரூர்களிலும் நாகரிகமான கட்டிடங்கள் குடியிருப்பு பிரதேசங்களையும் வீடுகளையும் கவனிப்பது, கதவை திறத்து நண்பர்களையும் அயலார்களையும் வரவேற்பது முதலிய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், மக்களிடையே புரிந்துணர்வு மற்றும் பரிமாற்றத்தையும் குடும்பத்தினர்களின் பொறுப்புணர்வையும் வலுப்பட்டுள்ளன. மகளிர்குடும்பம்சுற்றுச்சூழல் என்ற தலைப்பில், பல மாநிலங்களிலும் நகரங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அறிவு பரப்பப்பட்டுள்ளது. குப்பை அள்ளுவது, எரியாற்றலை சிக்கனப்படுத்துவது, பசுமை நிலத்தை வளர்ப்பது, மரம் நட்டு காடு வளர்ப்பது உள்ளிட்ட குடும்பத்தினர்கள் முக்கிய பங்கு எடுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், குடியிருப்பு பிரதேசங்களின் பண்பாட்டு வளர்ச்சியை பயன் தரும் முறையில் மேம்படுத்தியுள்ளன.