மகளிர் உரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களும் சட்ட விதிகளும்
中国国际广播电台

தற்போது, அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில், மகளிர் உரிமை மற்றும் நலனைப் பாதுகாக்கும் சட்டத்தை மையமாகக் கொண்ட, குடிமை சட்டம், குற்றவியல் சட்டம், தேர்தல் சட்டம், உழைப்பு சட்டம், திருமண சட்டம், மக்கள் தொகை மற்றும் குடும்ப நல திட்டச் சட்டம், கிராம நில குத்தகை சட்டம் ஆகியவை அடங்கும், மகளிர் உரிமையை பாதுகாத்து ஆண் பெண் சமத்துவத்தை மேம்படுத்தும் சட்ட அமைப்பு முறை சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீன குடியரசு மகளிர் உரிமை பாதுகாப்பு சட்டம் வெளியிடப்பட்ட பின், மகளிர் உரிமை பாதுகாப்பு பற்றிய 12 சட்டங்களையும் 2 தீர்மானங்களையும் சீனத் தேசிய மக்கள் பேரவை நிறைவேற்றியுள்ளது.

இதனிடையே, தேர்தல் சட்டம், குற்றவியல் சட்டம், திருமண சட்டம் உள்ளிட்ட மகளிர் உரிமையுடன் நெருக்கமான தொடர்பு உடைய 7 சட்டங்களை சீனா தீர்திருத்தியுள்ளது. மகளிர் உரிமை பாதுகாப்பு பற்றிய 7 நிர்வாக சட்ட விதிகளை சீன அரசவை வகுத்துள்ளது. 98 விதிமுறைகள் தொடர்பான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமை பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தும் வழிமுறையை பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் நகரங்கள் தயாரித்துள்ளன. மகளிர் உரிமை பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வருவதை விரைவுபடுத்துவதற்காக, கொள்கை ஆவணங்களை தொடர்புடைய அமைப்புகள் தயாரித்து, பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதனால், சட்டத்தின்படி மகளிர் உரிமையை பாதுகாக்கும் கருத்தை படிப்படியாக மக்கள் புரிந்து கொண்டனர்.