சீன மகளிரின் உழைப்பு உரிமை
中国国际广播电台

பரந்துபட்ட மகளிர் உழைப்பு உரிமைக்கு உத்தரவாதம் செய்யும் வகையில், தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களை சீனா எப்போதுமே ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. பணிக்கு அமர்த்துவதில் ஆண்-பெண் பாகுபாட்டை தடுப்பது, மூலதனம், தொழில் நுட்பம் உள்ளிட்ட உற்பத்தி காரணிகளை பங்கிடுவதில் ஆண் பெண் சமத்துவத்தை உத்தரவாதம் செய்வது, சம வேலைக்கு சம ஊதியம், அதிகமான வேலை வாய்ப்புகளை மகளிருக்கு வழங்குவது, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் கட்டமைப்பின் சீர்திருத்தில், மகளிரின் வேலை தேவையை கருத்தில் கொண்டு, சேவை துறையை வளர்த்து, மகளிருக்காக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பெண் பணியாளருக்கு வேலை பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்காக சிறப்பு உழைப்பு பாதுகாப்பு விதிகளை பணி ஒப்பந்தத்திலும் கூட்டாண்மை ஒப்பந்தத்திலும் சேர்க்க பல்வகை நிறுவனங்களுக்கு வழிகாட்டி, மாத விலக்கும் காலம், கருவுற்றிருக்கும் காலம், பூப்படைந்த காலம், பாலூட்டும் காலம் ஆகிய 4 காலங்களில் பெண்களின் வேலையைப் பாதுகாப்பது, உடன்படிக்கை மூலம் நிலத்தை பெறுவது, உற்பத்தி மற்றும் கட்டுப்பாடு, வீட்டைப் பகிர்ந்து கொள்வது, நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை, மிகையூதியம் பெறும் உரிமை ஆகியவற்றில், கிராம மகளிர் ஆணுக்குச் சமம். கிராம பெண்களில் மிஞ்சிய உழைப்பு ஆற்றலை வேளாண் தொழில் சாரா வேறு தொழிலிலுக்கு மாற்றிட வழிகாட்டுவது, அவர்களுக்கு பல்வகை தொழில் நுட்ப பயிற்சி அளிப்பது ஆகியவை இந்த சட்டங்களில் அடங்கும்.