சீன மகளிரின் கல்வி பெறும் உரிமை
中国国际广播电台

சீனாவின் அரசியல் அமைப்பு சட்டம், கட்டாய கல்வி சட்டம், மகளிர் உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர தொடர்பான சட்டங்களில், கல்வி பெறுவதில் ஆணுக்கு சமமான உரிமை மகளிருக்கு உண்டு என்று வகுக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டில், பள்ளி செல்லும் வயதிலான குழந்தைகள் துவக்கப்பள்ளிக்குச் செல்லும் விகிதம் 99.1 விழுக்காடாகும். பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் விகிதம் 99.01 விழுக்காடாகும். 2002ஆம் ஆண்டில், இடைநிலை பள்ளியில் 3 கோடியே 87 லட்சத்து 2 ஆயிரம் மாணவிகள் உள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் இது 46.7 விழுக்காடு வகிக்கிறது. உயர் கல்வி நிலையங்களில் மாணவிகளின் எண்ணிக்கை 39 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் இது 44 விழுக்காடு வகிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 6 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீன பெண்களின் கல்வி நிலை பெருமளவில் உயர்ந்து வருகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கல்வி இடைவெளி மேலும் குறைந்துள்ளது. சீன மகளிர் கல்வி பெறும் காலம் சராசரி 7.07 ஆண்டாகும். வயதுக்கு வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கும் இடையே கல்வி கால இடைவெளி, 1995ஆம் ஆண்டில் 1.4 ஆண்டிலிருந்து 1.07 ஆண்டாக குறைந்தது என்று 2000ஆம் ஆண்டு 5வது மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டியது.