திருமணத்திலும் குடும்பத்திலும் சம உரிமை
中国国际广播电台

சீனாவின் 35 கோடி குடும்பங்களில், பெரும்பாலோர் காதல் அடிப்படையில் சுதந்திரமாகவும் சட்டப்பூர்வமாகவும் திருமணம் செய்கின்றனர். குடும்ப உறவு சமமாகவும் சுமுகமாகவும் உள்ளது. உடல் மற்றும் சொத்து உரிமையை மகளிர் அனுபவிக்கின்றனர்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் திருத்தப்பட்ட திருமண சட்டத்தை சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி வெளியிட்டது. இந்த புதிய சட்டத்தில், இருதார மணம் செய்யக் கூடாது, வாழ்க்கை துணை உடையவர் மற்றவருடன் வசிக்கக் கூடாது, குடும்ப வன்முறை கூடாது என்று கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த பயனற்ற திருமண முறையை அதிகரித்து, சொத்து முறையை மேம்படுத்தி, விவாகாரத்துக்கான இழப்பீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், திருமணம் மற்றும் குடும்பத்தை சீர்குறைக்கும் செயலுக்கான தண்டனை தீவிரமாக்கப்பட்டு, திருமணத்திலும் மற்றும் குடும்பத்திலும் மகளிரின் தகுநிலை சட்டத்தின் மூலம் பேணிக்காக்கப்படுகிறது.

சமமான, சுமுகமான மற்றும் நாகரிக திருமண மற்றும் குடும்ப உறவை உருவாக்க, 5 துறைகளில் தலைசிறந்த குடும்பத்தை உருவாக்கும் நடவடிக்கையின் அடிப்படையில், 18 அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இடம்பெற்ற, நாடு முழுவதும் 5 துறைகளில் தலைசிறந்த குடும்பத்தை உருவாக்குவதற்கான இணக்க குழுவை சீனா நிறுவியுள்ளது. இதனால், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் நாகரிக எழுச்சி பற்றிய ஒட்டுமொத்த திட்டத்தில் இந்த நடவடிக்கை வைக்கப்பட்டது. நகர மற்றும் கிராமப் பெண்களில் 93.2 விழுக்காட்டினர் திருமணம் மற்றும் குடும்பம் பற்றி மனநிறைவு அடைந்துள்ளனர் என்று 2000ஆம் ஆண்டில் அனைத்து சீன மகளிர் சம்மேளனம் மற்றும் சீன அரசு புள்ளிவிபரம் ஆணையம் கூட்டாக நடத்திய ஆய்வு காட்டுகிறது.