சீன அந்நிய மகளிர் தொடர்பு
中国国际广播电台

1995ஆம் ஆண்டு ஜுன் திங்களில் அரசு சாரா நிறுவனமான அனைத்து சீன மகளிர் சம்மேளனம் முதல் முறையாக ஐ.நா. கூட்டங்களில் கலந்து கொள்ளும் தகுநிலையை பெற்ற பின், .நா. மற்றும் பலதரப்பு சர்வதேச நடவடிக்கைகளில் கலந்து கொண்டது. அது அனுப்பிய பிரதிநிதிகள், .நாவின் பல கூட்டங்களில் கலந்து கொண்டனர். எடுத்துக்காட்டாக, மனித உரிமை கமிட்டியின் கூட்டம், மகளிர் தகுநிலை கமிட்டியின் கூட்டம், மகளிர் பிரச்சினைகள் பற்றிய சிறப்பு ஐ.நா. பேரவை கூட்டம், தொடர்ச்சியான வளர்ச்சி பிரச்சினை பற்றிய உலக உச்சி மாநாடு ஆகிய கூட்டங்களில் அனைத்து சீன மகளிர் சம்மேளனம் தனது கருத்துக்களை எடுத்துரைத்தது. உலக அமைதி மற்றும் வளரும் நாடுகளின் நலனைப் பேணிக்காப்பதற்காகவும் உலகளாவிய மகளிர் லட்சியத்தின் வளர்ச்சிக்காகவும் பங்காற்றுகிறது.

அரசு சாரா தொடர்பில் உள்ள வசதியை பயன்படுத்திக் கொண்டு, சீனாவின் மகளிர் அமைப்புகள் பல நிலைகளில் பல்வகை தொடர்பையும் ஒத்துழைப்பையும் மேற்கொண்டுள்ளன. தற்போது, 151 நாடுகளின் 700 மகளிர் மற்றும் குழந்தை அமைப்புகளுடன் அனைத்து சீன மகளிர் சம்மேளனம் நட்புறவை நிறுவியுள்ளது. 4வது உலக மகளிர் மாநாடு, இம்மாநாட்டுக்குப் பிந்திய செயல் அனுபவம் பரிமாற்ற கூட்டம், சீன-ஐரோப்பிய ஒன்றிய மகளிர் பிரச்சினை பற்றிய கருத்தரங்கு, APEC பெண் தலைவர் கூட்டம் உள்ளிட்ட பெரிய மற்றும் பலதரப்பு சர்வதேச கூட்டங்களை அது ஏற்பாடு செய்து, முன்னின்று நடத்தியுள்ளது. சர்வதேச ஒத்துழைப்பு திட்டப்பணிகளை சீன மகளிர் அமைப்புகள் நடத்தி, சீன மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு சேவை புரிகின்றன. அவை சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க மகளிர் அமைப்புகலாக மாறியுள்ளன.