சீன மருத்துவத்தில் நோய் கண்டறியும் முற

中国国际广播电台

சீன மருத்துவத்தில் நோயாளி பற்றி முழுமையான விரிவான தகவல்களைப் பெற்று சிகிச்சையைத் தொடங்குவதற்கா பல்வேறு முறைகளை மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர். கூர்ந்து கவனித்தல், முகர்ந்து பார்த்தல், கேட்டல், தொடுதல் போன்ற பல வழி முறைகளில் நோய்க்கூறுகளை அறிகின்றனர். நோயாளிகளிடமோ அவர்களின் உறவினர்களிடமோ பேசி விசாலிக்கின்றனர். நோய்க்கு சிகிச்சை தருவதற்காக மருத்துவர்கள் நாடித் துடிப்பு மற்றும் இதயத் துடிப்பை உணர்கின்றனர். விசாரித்து அறிகின்றனர். நோயாளியை முகர்ந்து பார்க்கின்றனர். கேட்கின்றனர். கூர்ந்து கவனிக்கின்றனர். இந்த நான்கு பெரும் முறைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே செயல்பாடுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி மருத்துவர்கள் நோய் பற்றி சரியான மதிப்பீடு செய்ய முடியும்.