அக்குபங்ச்சர்
中国国际广播电台


சீன மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒரு பகுதி அக்குபங்ச்சர் ஆகும். இது முதலில் மருத்துவசிகிச்சையின் ஒரு நுட்பமாக உருவாக்கப்பட்டு படிப்படியாக ஒரு விஞ்ஞானமாக வளர்ந்தது. அக்குபங்ச்சர் அறிவியலின் நோக்கம் அதன் நுட்பங்களைப் பதிவு செய்து மருத்துவ நடவடிக்கைகளையும் அடிப்படைக் கொள்கையையும் ஒழுங்குபடுத்துவது ஆகும்..

அக்குபங்ச்சருக்கு மீன்ட நெடும் வரலாறு உண்டு. பன்டைய புத்தகங்களில் அக்குபங்ச்சர் கருவி கல்லலால் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கல் கருவி சுமார் 8000 முத்ல 4000 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்து. ஒரு முறை தொல்லியல் ஆய்வு அகழ்வுப் பணிகளின் போது கல்லினால் செய்யப்பட்ட ஊசிகள் கண்டெடுக்கப்பட்டன. வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கி.மு1770-கி.பி476மருந்துகள் மறைந்து மந்திரம் தலையெடுத்தது. மருத்துவர்கள் மிகச்சிலரே இருந்தனர். ச்சிங் மன்னனுக்கு கீல்வாதத்திற்கு சிகிச்சை அளித்த போது மூலிகைப் புகையில் ஊசியைக் காட்டி குத்தப்பட்டது மற்றும் அக்குபங்ச்சர் சிகிச்சை தரப்பட்டது பற்றி ச்சுன் ச்சியூ சுவோ ஷி சுவான் என்ற புத்தக்கத்தில் யீ ஹுவான் என்ற மருத்துவர் எழுதியுள்ளார்.

போர் சகாப்தத்திலும் மேர்கு ஹான் காலத்திலும் கி.மு476-கி.பி.25இரும்பை உருக்கும் நுட்பம் உருவாக்கப்பட்ட போது உலோக ஊசிகள் தயாரிக்கப்பட்டன. கல் ஊசி நுழைய முடியாத உடம்பின் பாகங்களில் உலோக ஊசிகள் எலிதில் நுழைந்தன. இவை அக்குபங்ச்சர் முறை மேலும் மேம்படுவதற்கு உதவின. பின்னர், கிழக்கு ஹான் மற்றும் மூன்று பேரரசு காலத்தில் அக்குபங்ச்சர் முறையை நன்கு கற்றுத் தேர்ந்த பல மருத்துவர்கள் இருந்தனர். ஹூவாங் பு மி என்பவர் எழுதிய ச்சென் சியு சியா யியிங் என்ற புத்தகத்தில் தான் முதன் முதலாக அக்குபங்ச்சர் பற்றி முறைப்படி விளக்கப்பட்டது. சின் மற்றும் தெற்கு வடக்கு காலத்தில் கி.மி 256-கி.பி 589கொலியாவுக்கும் ஜப்பானுக்கும் அக்கபங்ச்சர் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸூயி மற்றும் தாங் காலத்தில் கி.பி.581-கி.பி907அக்குபங்ச்சர் ஒரு சிறப்புப் பாடமாக ஆனது. மருத்துவக் கல்லூரிகளில் இது ஒரு முக்கியப் பாடமாகக் கற்றுத் தரப்பட்டது. 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அக்குபங்ச்சர் அறிமுக்ப்படுத்தப்ட்டது.ஆனாலும் ச்சிங் வம்சகாலத்தில் இது உயர்வாக மதிக்கப்படாததால் ஒரு நின்னடைவு ஏற்பட்டது.

1949க்குப் பிறகு அக்குபங்ச்சர் சிகிச்சை முறையில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. தற்போது சீனாவில் உள்ள 2000 சீன முறை மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் அக்குபங்ச்சர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மனித உடம்பின் வெவ்வேறு பகுதிகளுக்குள் இப்போது இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தலாம். ஒழுங்குபடுத்துவதிலும் வலியைப் போக்குவதிலும் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவதிலும் மனித உடம்பின் பாகங்களில் வழிகளை ஆராய்வதிலும் அக்கு முனைகள் மற்றும் உள் உறுப்புக்கள் பற்றிய ஆய்விலும் மதிப்புமிக்க தகவல்கள் கிடைத்துள்ளன.