சிறுபான்மை இனக் குழுக்களின் மருத்துவம்
中国国际广播电台

சீன மருத்துவத்தில் ஹான் மக்களின் மருத்துவ முரை மட்டுமல்ல மற்ற சிறுவான்மைக் இனக் குழுக்கனின் மருந்துகளும் அடங்கியுள்ளன. வெவ்வேரு நிலப் பகுதிகளில் வேறுபட்ட பண்பாடுகளுடன் வாழும் இனச் சிறுபான்மைக் குழுக்கள் தங்களுக்கென தனித்தன்மை வாய்ந்த மருந்துகளை உருவாக்கினார்கள். இந்த சிறுபான்மை இனக் குழுக்களில் திபெத்தியர், சுவாங், தாய், யி, மியோ, லாஹு, ஒரோச்சென் போன்ற இனங்கள் அடங்கும்.

இந்த மருந்துகள் வேறுபட்ட வரலாறுகளையும் பண்பாடுகளையும் கொண்டிருப்பதால் இவற்றின் தற்போதைய நிலையும் வேறுபட்டதாக உள்ளது. சில இனங்களின் மருத்துவத்தில் ஏராளமான சிகிச்சை முறைகள் மட்டுமல்ல, கோட்பாடுகளும் இடம் பெற்றுள்ளன. வேறு சில இனங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்கள் மக்களிடையே பரவிக் கிடங்கின்றன. இந்தப் புத்தகங்களைத் தரம்பிரிக்க வேண்டுயுள்ளது. வேறு சில இனங்களில் இன்னமும் வாய் ம1ழியாகவே மருத்துவ முறைகள் சொல்லப்படுகின்றன.

இன்னும் சில இனங்கள், ஹான் இன மருத்துவத்தையும் வேற்று நாடுகளின் மருத்துவத்தையும் இணஐத்து தங்களுக்கென தனியாக ஒரு மருத்துவ முரையை உருவாக்கியுள்ளன. எடுத்துக் காட்டாக திபெத்திய இன மருத்துவத்தில் ஹான் மருந்துகளும் பண்டைய இந்திய மருந்துகளும் கலந்துள்ள. மங்கோலிய மருந்தில் ஹான் , திரெத், ரஷ்யா போன்ற மருத்துவ முறைகள் வேர்க்கம்பட்டுள்ளன.