ஹுயி மருந்து
中国国际广播电台

ஹான் மருந்தும் அரபு இஸ்லாம் மருந்தும் கலந்ததுதான் ஹுயி மருந்து. ஜின் மர்றும் யுவான் காலத்தில் எழுதப்பட்ட ஹுயி ஹுயி யாவே பாஃங் என்ற மருத்துவ நூலில் களிம்பு, மொடி, திரவம், மாத்திரை, போன்ற ஹான் முரை மருந்துகளும் வாசனைக் கூட்டுப் பொருள் பழச்சாறு கலந்த மதுபானம் மற்றும் ஸிரப் போன்ற அரபு மருந்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நீண்ட நெடும் வளர்ச்சியில் ஹுயி மருந்து தனக்கென ஒரு தனிப்பண்புகளை உருவாக்கிக் கொண்டது. அவற்றில் ஒன்ரு தான் உணவுடன் மருந்தைக் கலப்பது அல்லது உண்ணும் போதே நோயைக் குணப்படுத்துவது. எடுகத்துக்காட்டாக ஹுயி மக்கள் மலச்சிக்கலைப் போக்குவதற்கும் கணைய வீக்கத்தை அல்லது துவக்க நிலைப் புற்று நோய் போன்றவற்றைக் குணப்படுத்த நல்லெண்ணயுடன் கலந்து உட்கொள்கின்றனர்.