மியோ மருத்துவம்
中国国际广播电台

நோய்கள் ஏற்படுவதற்கு விஷம், பலவீனம், காயம், அகிதவேலை, நுண்னுயிரிக் கிருமி, பூச்சி ஆகிய ஆறு காரணங்கள் இருப்பதாக மியோ மக்கள் கருதுகின்றனர். அவர்கள் நாடி பிடித்துப் பார்த்தும், முகத்தின் நிறத்தைக் கவனித்தும், விசாரித்து அறிந்தும், தொட்டுப் பார்த்தும், அடித்தும், சுரண்டியும் அழுத்தியும் நோய்க் கூறுகளைக் கண்டறிகின்றனர். இத்தகைய முறைகள் மூலம் நோயாளிகளின் உடல் மற்றும் மனக் கோளாறுகளைக் கண்டறிய முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மியோ மருந்துகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் சில கணிமப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் தன்மைகளை சூடானவை. குளிர்ச்சியானவை. சூடும் குளிர்ச்சியும் இல்லாதவை என்று பிரித்துள்ளனர்.குளிர்ச்சியான நோய்களுக்குச் சூடான மருந்துகளும், சூடான நோய்களுக்கு குளிர்ச்சியான மருந்துகளும் தரப்படுகின்றன. 1500 பொது மருந்துகளும், 200 பொருவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் இருப்பதாக பூர்த்தியாகாத புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மியோ மருந்துகளைத் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் மியோ மக்கள் பரவிவாழும் மியோ மலை, வு மெங்மலை, வுலிங் மலை ஆகிய பகுதிகளில் கிடைக்கின்றன. வெவ்வேறு புவியியல் அமைப்புக்களுக்கும் மருந்து தயாரிக்கும் முறைகளுக்கும் ஏற்ப மருந்துகளைத் தயாரிப்பதற்கான மூலிகைகள் சமமின்றி பரவிக்கிடக்கின்றன. ஹெளட்டுனியா, பிளாட்டிகோடன், சில வகை போன்ற வேர் மூலிகைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. உஸ்னியா பார்பெட்டா போன்ற வேறு சில மூலிகைகளை உயரமான மலைப் பகுதிலளில் தான் பார்க்க முடியும். சமீபத்திய ஆண்டுகளில் மியோ மக்கள் மிகுதியாக வாழும் இடங்களில் பல மருந்து மூலிகைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு கேஸ்ட்ரோடியா கிழங்கு, போலியா,ஸ யுமோமியா பட்டை போன்ற பொதுவாகப் பயன்படும் சில மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன.