மேற்குசச் சோவும் சவுன் சியூ போரிடும் காலமும்
中国国际广播电台

சியா, சான் வம்சங்களுக்குப் பின் சீனாவின் பண்டைகாலத்தில் மூன்றாவது வம்சம் சோ ஆகும். கி.மு 1027ம் ஆண்டில் நிறுவபட்டு கி.மு256ம் ஆண்டு வரையான காலம் சோ வம்சம் ஆட்சிபுரிந்த காலமாகும். இறுதியில் சோ வம்சம் சிங் வம்சத்தால் தோற்கடிக்கப்பட்டது. அதன் ஆட்சி காலம் 770 ஆண்டுகளாகும். சோவின் தலைநகர் துங்சியென் எல்லைக் கோடானால் அதன் முற்காலம் சிச்சோயாகவும் அதன் பிற்காலம் துங்சோயாகவும் பிரிக்கப்பட்டன. துங்சோ சன்சியூ, போர் காலம் என்று இரண்டு காலங்கட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது.

சிச்சோ கி.மு1027ம் ஆண்டு முதல் கி.மு771ம் ஆண்டு வரையான 257 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. அதன் முதலாவது மன்னர் சோவூ மன்னர் தலைநகரை கோ எனும் இடத்திற்கு மாற்றிய பின் கூட்டு படைகளுக்குத் தலைமை  ஏற்ற சான் வம்சத்தை தாக்கி தோற்கடித்து சோ மன்னராட்சியை நிறுவினார். சோசன் மன்னர் பதவி ஏற்ற பின் இளம் வயதினராக இருந்ததால் நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினார். பின் அவருடைய சிற்றப்பா சோக்குன்தான் ஆட்சிபுரிய அவருக்கு உதவி செய்தார். சோக்குங் உள்நாட்டில் அமைதியை நிலைநிறுத்திய பின் படைகளுக்கு தலைமை தாங்கி கிழக்கு நோக்கி படையெடுத்து, கலகத்தை ஒடுக்கினார். சோக்குங்கின் தலைமையில் வெற்றியை வலுப்படுத்தும் பற்பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சோசன் மன்னர், சோக்காங் மன்னர் ஆட்சிபுரிந்த காலம் வரலாறு ஆசிரியர்களால் “சன்காங் ஆட்சி”என்று பாராட்டப்பட்டது.

சோ வம்சத்தின் அரசு முறைமைக்கு தெளிவான தனிச்சிறப்பு உண்டு. வயல் நிர்வாக அமைப்பு முறை, தந்தை வழி குடும்ப முறை முதலியவை இந்த வம்சத்தின் முக்கிய சட்ட விதிகளாகும்.

கி.மு 770ம் ஆண்டு முதல் கி.மு.476ம் ஆண்டு வரையான காலம் சன்சியூ காலமாகும். பொருளாதாரத்தின் வளர்ச்சி மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றுடன் பெரிய நாடுகளுக்கிடையில் அதிகாரத்தை கைபற்றும் போராட்டம் தீவிரமாகியது. சமூக கட்டமைப்பில் மாபெரும் மாற்றம் ஏற்பட்து. வேளாண் சாகுபடிக்கு இரும்பில் தயாரிக்கப்பட்ட கருவிகள் காணப்பட்டன. வயல் நிலத்தை உழுவதற்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன. நீர் சேமிப்பு வளர்க்கப்ட்டது. பயிர்களின் விளைச்சல் அதிகரித்தது. சன்சியூ காலம் சிச்சோ பாரம்பரிய அரசியல் சமூக ஒழுங்கு படிப்படியாக கலைவதற்கு அடிகோலியது.

சீன வரலாற்றில் முதலாவது சிந்தனையாளரும் மகத்தான கல்வியாளருமான குங்சி சன் சியூ காலத்தின் பிற்காலத்தில்தான் பிறந்தார். குங்சி முந்திய பண்பாட்டையும் சிந்தனையையும் தொகுப்பதன் படிப்படையில் அப்போதைய கொந்தளிப்பான சமூக நிலைமையுடன் இணைத்து ஒழுக்க அடிப்படை சமூகத்தின் அரசியல் பிரச்சினைகள் பற்றி கோவையான தத்துவ கருத்துக்களை முன்வைத்து பண்டைக்கால கன்பீசஸ் தத்துவத்தை நிறுவினார்.

போர் காலம் கி.மு403ம் ஆண்டு முதல் கி.மு221ம் ஆண்டு சீனாவில் துங்சோ நாட்டை அடுத்து மேலாதிக்கத்துக்காக சிற்றாசுகள் போரிடும் காலம் வந்தது. சிங்சியூவுக்கும் அதற்குமிடையில் தெளிவான வரலாற்று எல்லை இல்லை. தற்போதைய வழக்கத்தின் படி, கி.மு.403ம் ஆண்டு முதல் “மூன்று அரசுகள்”தனித்தனியாக ச்சௌ, ஹான், வுயெ என்ற பெயரில் மூன்று நாடுகளை நிறுவியது முதல் கி.மு.221ம் ஆண்டு சிங் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் வரையான காலம் போர் நாடுகள் காலமாகும்.

போர் நாடுகள் காலத்தில் நுழைந்த பின் சீனாவின் மன்னராட்சி நிலைமையில் மாற்றம் காணப்பட்டது. பல சிற்றரசுகள் வல்லிணைக்கப்பட்டன. எஞ்சிய சிங், ஸு, யியென், ஹான், ச்சௌ, வுயென், மேற்கு ஆகிய 7 நாடுகள் அப்போதைய முக்கிய மன்னராட்சிகளாகும். போர் நாடுகள் காலத்தில் பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து சட்டத்தை நிறுவி மேற்குர்திருத்தம் மேற்கொண்டன. இவற்றில் சிங் வம்சத்தின் சான்யான் சட்ட மேற்குருத்திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. அதன் செல்வாக்கு மிக பெரியது.

போர் நாடுகள் காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் போர் நிகழ்த போதிலும் அப்போதைய சீனாவின் பண்டைய பண்பாட்டு வளர்ச்சி பாதிக்கப்பட வில்லை. சமூதத்தில் புதிதாக வளர்ச்சியடைந்த அறிவாளர் சமூக தட்டு ஒன்று தோன்றியது. கல்வி பெற்று சமூகத்தில் விறுவிறுப்பாக கல்வியியல் பண்பாட்டை வளர்த்தனர். இதற்கிடையில் சீனாவின் பண்டைய சிந்தனை பண்பாடு வரலாற்றில் முதலாவது உச்சகட்டத்தை அடைந்தது. இதில் குன்சி மென்ச்சு ஆகியோரை பிரதிநிதிகளாக கன்பியூசல்ஸ், லோச்சு, சுவாஞ்சி, லெச்சு ஆகியோரை பிரதிநிதிகளாக தௌ தத்துவம், ஹான்பிஃயை பிரதிநிதியாகக் கொண்ட தத்துவம், முச்சியை பிரதிநிதியாகக் கொண்ட மு தத்துவம் போன்ற தத்துவங்கள் பிந்திய தலைமுறைகளால் மதிக்கப்பட்டன. இந்த கல்வியியல் துறைகள் தோன்றியதுடன் போர் நாடுகள் காலத்தில் சிந்தனை வட்டாரத்தில் 100 மலர்கள் மலர்ந்து 100 கருத்தோட்டங்கள் மோதட்டும் எனும் விறுவிறுப்பான சூழ்நிலை காணப்பட்டது. இந்த தித்துவம் அப்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு பங்கு ஆற்றியது. இது மட்டுமல்ல அவற்றின் ஆழந்த தாக்கம் இது வரையிலும் பரவியுள்ளது. சீனாவின் சிந்தனை வரலாற்றில் அழிக்கப்பட முடியாத அத்தியாயமாகிவிட்டது.

கி.மு.230ம் ஆண்டில் சிங் மன்னரான யிங்சன் நாட்டை முழுமையாக ஒன்றிணைத்து ஆட்சி புரிய துவங்கினார். அவருடைய 9 ஆண்டு ஆட்சிகாலத்தில் சிங் நாடு மற்ற ஆறு நாடுகளை தோற்கடித்து கி.மு.221ம் ஆண்டில் ஒரே நாடாக ஒன்றிணைந்தது. ஆகவே சீனாவில் 600 ஆண்டுகளாக நீடித்திருந்த பிரிவினை நிலைமை முடிவுக்கு வந்தது.