சொன் வம்ச காலம்
中国国际广播电台

கி.பி.960ம் ஆண்டில் சொன் தைய் சூயான சௌக்குவாங்யின் சன் சியோ கலகம் உண்டாக்கி சொன் வம்சத்தை நிறுவினார். இதன் விளைவாக 5 வம்சங்களாக பிரிந்திருந்த 10 நாடுகளின் நிலைமை முடிவுக்கு வந்தது. 1279ம் ஆண்டில் சொன் வம்சம் யூனான் வம்சத்தால் தோற்கடிக்கப்பட்டது. அதன் ஆட்சி காலம் 319 ஆண்டுகள் மட்டுமே. சொன் வம்சகாலத்தில் வடக்கு சொன் தெற்கு சொன் ஆகிய இரண்டு ஆட்சி காலங்கள் இருந்தன. வடக்கு சொன் காலத்தில் சித்தான் இனத்தவர் சீனாவின் வடக்கு பகுதியில் லியோ நாட்டை நிறுவினர்(947-1125),சான்சியான் பழங்குடி மக்கள் சொன்னின் வட மேற்கு பகுதியில் மேற்கு சியா நாட்டை நிறுவினர்(1038-1227),1115ம் ஆண்டில் நியூச்சன் பழங்குடி மக்கள் வட பகுதியில் கிங் நாட்டை நிறுவினர்(1115-1234).கிங் நாடு 1125ம் ஆண்டில் லியோ நாட்டை கைம்பற்றியது. 1127ம் ஆண்டில் சொன் நாட்டின் தலைநகரான கைபூஃன் நகரை தாக்கி சிங்வெய் மற்றும் சிங் சியென் மன்னர்களை கடத்திச் சென்றது. வடக்கு சொன் தோல்வியடைந்தது.

வடக்கு சொன் வம்சம் வட பகுதியுடன் இணைந்த பின் சமூக பொருளாதாரம் பண்பாடு ஆகிய துறைகளில் மாபெரும் வளர்ச்சி காணப்பட்டது. வெளிநாட்டு வர்த்தகமூம் வளர்ச்சியடைந்தது. வான் ஆன் சூவின் மேற்குர்திருத்தம் அப்போதைய சமூக முரண்பாட்டை ஓரளவில் தீர்த்தது.

அப்போது அறிவியல் துறையில் சாதனைகள் குறிப்பாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. திசை காட்டும் கருவி, அச்சடிக்கும் நுட்பம், வெடிக மருந்து கண்டுபிடிப்பு ஆகிய மூன்று மாபெரும் கண்டுபிடிப்புகள் மேலும் நிகழ்த்தப்பட்ட்ன. அப்போது எழுத்துக்கள் அச்சடிப்பு முறை ஐரோப்பாவில் இருந்ததை விட 400 ஆண்டுகள் முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டது. சூ சொன் உலகில் முதலாவது வானியல் கடிகாரத்தை உருவாக்கினார். சன்குவா படைத்த “மென்சி குறிப்புகள்”எனும் நூல் அறிவியல் தொழில் நுட்ப வரலாற்றில் மிக உயரிய கௌரவம் பெற்றது. பண்டாட்டுத் துறையில் கொண்பியூஸியஸ் சிந்தனை தத்துவம் வளர்ந்தது. சூ மேற்கு, லுச்சியூஹான் முதலிய கொன்பியூசியல் சிந்தனை தத்துவ ஞானிகள் தோன்றினார்கள். தௌ மதம் புத்த மதம் மற்றும் அந்நிய நதங்கள் அப்போது பரவலாகின. வடக்கு சொன் வம்சத்தின் ஓயான்சியூ படைத்த “புதிய தாங் வம்ச நூல்”தாங் வம்சத்தின் வரலாற்றை பாதுகாப்பதற்கு மாபெரும் பங்கு ஆற்றியது. ஸ்மாக்குவாங் தொகுத்த “சுச்சிதோங்சியென்”எனும் நூல் வம்சங்களின் வரலாற்றை தொகுத்து இயற்றும் நூல்களுக்கு மாதிரியாக பாராட்டப்பட்டது. அப்போது இலக்கியத் துறையில் ஓயான்சியூ, சூ செ முதலிய உரை நடை எழுத்தாளர்கள் தோன்றினர். இத்துறையில் லீச்சின்சோ போன்ற கவிஞர்கள் மிகவும் புகழ் பெற்றனர். புகழ்பெற்ற சான்செத்தான் தீட்டிய“சின்மின் சான் ஹோ து”எனும் மிக நீளமான பெரிய ஓவியம்  சீன ஓவியக் கலையில் உன்னதமான படைப்பு ஆகும்.