மின் வம்சகாலம்
中国国际广播电台

கி.பி.1368ம் ஆண்டில் நாங்கிங் நகரை தலைநகராக்கி மின் வம்சகாலத்தை சுயுவான்சான் நிறுவினார். மின்தாய்சு என்ற மன்னர் 31 ஆண்டுகளாக ஆட்சி பிரிந்தார். இதற்ககிடையில் அருங்பங்காற்றிய அதிகாரிகளை அவர் கொலை செய்தார். தன் ராயல் அதிகாரத்தை உயர்த்தினார். மின்தாய்சு மறைந்த பின் அவருடைய பேரன் சியென்வென்த் பதவிக்கு வந்தார். பின்னர், அவருடைய சிற்றப்பா சூத்தி கிளர்ச்சி செய்து அவரை தோற்கடித்து மன்னரானார். 1421ம் ஆண்டில் அவர் தலைநகரை பெய்சிங்கிற்கு இடமாற்றினார்.

மின் ஆட்சி காலத்தில் மத்திய அதிகாரம் வலுப்படுத்தப்பட்ட போதிலும் பல மன்னர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர். ஆட்சி புரிவதில் அக்கறை செலுத்தாமல் இருந்ததால் சமூக முரண்பாடுகள் தீவிரமாகியின. மின் ஆட்சிகாலத்தின் நடுவில் பல முறை விவசாயிகள் கிளர்ச்சி செய்தனர்.

மின் ஆட்சிகாலத்தில் புகழ் பெற்ற அரசியல்வாதி சான் சியூ ச்சன் சமூக முரண்பாட்டை தணிவு செய்து மின் ஆட்சியை மீட்கும் வகையில் மேற்குர்திருத்தம் மேற்கொண்டார். ஆட்சி முறைமையை மேற்குர்படுத்தி, வேளாண் துறையை வளர்த்து ஆற்றை கட்டுப்படுத்தினார். பல்வகை வரிவழங்குவது பல்வகை கட்டாய உழைப்புகள் ஆகியவை ஒன்றிணைத்து குறிப்பிட்ட அளவில் மக்களின் சுமையை குறைத்தார்.