ஸன்சுபின்பாஃ
中国国际广播电台
     

ஸன்சுபின்பாஃ”இது பண்டைய சீனாவின் மகத்தான ராணுவக் கோட்பாடுகளின் தொகுதியாகும். மேலும் உலகில் பெருமளவில் செல்வாக்கு பெற்ற மாபெரும் படைப்புகளில் ஒன்றாகவும் இது திகழ்ந்தது. இந்த நூலில் விளக்கப்பட்டுள்ள போர் தந்திரங்களும் தத்துவங்களும் பரந்தளவில் ராணுவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவை துறைகளில் பின்பற்றப்பட்டன. இந்த “ஸன்சுபின்பாஃ”என்ற ராணுவ நூல் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. உலகில் மிகவும் முற்கால ராணுவ தத்துவப் படைப்பாக இது திகழ்கின்றது. ஐரோப்பாவைச் சேர்ந்த கிளாஸ்விட்ஸ் என்ற அறிஞர் படைத்த “போர்பற்றி” என்னும் நூலை விட 2300 ஆண்டுகள் முந்தையது.

சன்வூ என்பவர்“ஸன்சுபின்பாஃ”தத்துவ நூலைப் படைத்தார். அவர் சீனாவின் வசந்த மற்றும் இலையுதிர் காலத் ஆட்சியில் மாபெரும் ராணுவ அறிஞராகத் திகழ்ந்தரார். சீன வரலாற்றில் படை பல நிபுணராகவும் போர்க்கலை வல்லவராகவும் பாராட்டப்பட்டார்.

 “வரலாற்றுக் குறிப்பு”என்னும் நூல் சீன வரலாற்றில் மிகப் பெரிய வரலாற்று படைப்பாகும். அதேவேளையில் இது மாபெரும் இலக்கிய வாழ்க்கை வரலாற்று குறிப்பாகவும் திகழ்கின்றது. சீனாவின் பிற்கால வரலாறு மற்றும் இலக்கியத்தில் இது ஆழந்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. “வரலாற்றுக் குறிப்பு”என்னும் நூல் கி.மு முதலாம் நூற்றாண்டில் சீனாவின் மேற்கு ஹான் வம்ச ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றுக் காலத்துக்கு முன் மேற்கு ஹான் காலம் வரையான 3000 ஆண்டுகளின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் வரலாறு இந்த படைப்பில் பதிவு செய்யப்படுள்ளன. “வரலாற்றுக் குறிப்பு”என்னும் நூல் மனிதரை வர்ணிக்கும் காவிய வடிவிலான வரலாற்று நூலாகும். இது சீனாவில் பாரம்பரியக் காவியப் பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது.

 அதன் படைப்பாளர் ஸமாசியென். அவர் சீனாவின் மேற்கு ஹான் காலத்தில் வரலாற்று அறிஞராகவும் இலக்கிய ஞானியும் திகழ்ந்தார். அவருடைய குடும்பம் வரலாற்றுச் சிறப்புமிக்க குடும்பங்களில் ஒன்றாகும். அவருடைய தந்தை அரசாங்கத்தில் அதிகாரியாக பதவி வகித்தார். குழந்தைப் பருவத்திலேயே ஸமாசியென் சிந்தனை வயப்பட்டவராகக் காணப்பட்டார். வரலாற்று ஆவணங்களில் உள்ள பிரமுகர்கள் மற்றும் சம்பவங்கள் பற்றி சொந்தக் கருத்துக்களை அவர் கொண்டிருந்தார். இளம் வயதிலே அவர் பல இடங்களுக்கும் சென்று சமூகத்தின் நடையுடைபாவனைகளையும் அங்குள்ள பொருளாதார நிலைமையையும் விளை பொருட்களையும் நேரில் கண்டறிந்தார். பின் தந்தையின் லட்சியத்தை பின்பற்றி வரலாற்று நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் அதிகாரியாக பணிபுரிந்தார். பின் நிகழ்ச்சிகளை பதிவு செய்வதில் தவறு இழைத்தார் என்று குற்றஞ்சாட்டி உடல் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய உடம்பும் உணர்வும் கடுமையாக துன்பப்பட்டன. பின் ஆட்சியாளர்கள் அவரை மீண்டும் முக்கிய தலைமைப் பதவிக்கு நியமித்த போதிலும் அவருடைய மனது முழுமையாக ஈடுபடவில்லை. “வரலாற்றுக் குறிப்பு”என்னும் நூலை எழுதி முடிப்பது அவர் கொண்டிருந்த ஒரேயொரு நோக்கமாகும். 5 லட்சம் எழுத்துக்கள் கொண்ட 103 கட்டுரைகளை எழுதிமுடிக்க அவருக்கு 13 ஆண்டுகள் பிடித்தன.

 இந்த நூல் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் மன்னர்களையும் அரசியல் வாதிகளையும் மையமாகக் கொண்டு பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிவு செய்தார். வானியல், நாள்காட்டி, நீர் சேமிப்பு, பொருளாதாரம், பண்பாடு முதலிய தலைப்புக்களில் வரலாற்றைப் பதிவு செய்தார். பல்வேறு தலைமைப் பொறுப்புக்களில் செல்வாக்கு பெற்றிருந்த மனிதர்கள் பற்றியும் சிறுபான்மை தேசிய இனங்கள் பற்றியும் அவர் எழுதி வைத்திருக்கிறார்.

வரலாற்றுக் குறிப்பு”என்னும் நூல் நிகழ்வுகளைப் பதிவு செய்த ஒரு நூலாகக் கருதப்படுகின்ரது. ஸமாசியென் கடந்த ஆட்சியில் இருந்த அதிகாரிகளை போலா ஆட்சியாளர்களின் சாதனைகளை விளக்க கூடிய வரலாற்றைத் திருத்தவில்லை. அரசியல், பொருளாதாரம், ராணுவம், பண்பாடு, வானியல் நிலை, நிலவியல், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பின்னிப்பிணைத்து ஒட்டுமொத்தமான ஓர் அமைப்பு முறையாக்கி, செழுமையான வரலாற்று உலகத்தை உருவாக்கினார். தனது தலைவிதி சரியாக இல்லை என்பதன் காரணமாக ஸமாசியென் தனிநபரின் உயிர் மற்றும் மாண்புகளில் மிகவும் கவனம் செலுத்தினார். “வரலாற்றுக் குறிப்பு”என்னும் நூலில் எதை வெறுப்பது எதை நேசிப்பது என்பது தெளிவாக காணப்பட்டன. கீழ் நிலையில் இருந்தவர்களை உற்சாகத்துடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். நாட்டுபற்றுடைய வீரர்கள் இந்த நூலில் வர்ணிக்கப்பட்டுள்ளனர். நேர்மையான வரலாற்றுக் கருத்துக்களையும் தத்துவக் கருத்துக்களையும் அத்துமீறும். நிகழ்ச்சிகள் ஸமாசியெனின் பார்வையில் தப்பாமல் அவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“வரலாற்றுக் குறிப்பு”என்னும் நூலுக்கு மிக உயர்வான இலக்கிய சிறப்பு உண்டு. முதன்முதலில் உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மையமாக்க கொண்டு தனிச்சிறப்பு மிக்க குணமுடைய மனிதர்களை வர்ணிப்பது இதன் கலைநயமாகும். எடுத்துக்காட்டாக மனம் முன்வந்து ஏழைகளுக்கு உதவுவதற்காக் கொள்ளையடித்த கிளர்ச்சியாளர்களாகிய பின் மன்னர்களாகியவர்கள் பலவீனமான ஆனால் லட்சிய வேட்கை உடைய வீரர்கள், துணிவு மிக்க தளபதிகள் போர் வீரர்கள். கொள்ளையர்கள், வளமிக்க விதவைகள் காதலனுடன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற அழகி போன்ற சாதாரண மக்கள் இந்த நூலில் சனிக் கவனம் பெற்றுள்ளனர்.

நகைச்சுவையோடு நிகழ்ச்சிகளை விளக்குவது இந்த நூலின் தனிச்சிறப்பாகும். ஆகவே படிக்கும் ஆர்வம் தூண்டப்படுகின்றது. அது மட்டுமல்ல எளிமையான மொழிகள் எளிய நடை, மாறி மாறி வரும் ுரை நடைகள் ஆகியவை இந்த நூலில் நிறைந்துள்ளன. வரவாற்றில் சீனாவின் பண்டைகால இலக்கிய வரலாற்றில் மிக உயரிய சாதனையாக இந்த நூல் பாராட்டப்படுகின்றது.