சிங்ஸுகுவான் பேரரசரின் கல்லறை பற்றி
中国国际广播电台
 

சிங்ஸுகுவான் பேரரசரின் கல்லறை சீனாவின் ஷான்சீ மாநிலத்தின் லிங்துங் மாவட்ட நகரின் கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் யான்ச்சை வட்டத்தில் அமைந்துள்ளது. தெற்கில் லீசான் மலையை ஒட்டியுள்ளது. வடக்கில் வெய் ஆறு ஓடுகின்றது. ஆகாயத்திலிருந்து கல்லறையை பார்த்தால் இந்த கல்லறை மாபெரும் போல் காணப்படுகின்றது. கல்லறையின் வடிவம் சிங் வம்ச ஆட்சியின் தலைநகர் சியென்யான் மாளிகையின் படி வடிவமைக்கப்பட்டது. அதன் மொத்த நிலபரப்பு 66.25 சதுர கிலோமீட்டர். தற்போதைய சீ ஆன் நகரின் பரப்பை விட ஒரு மடங்கு கூடுதலாகும்.

சிங்ஸ்குவான் பேரரசர் 13 வயதில் மன்னராக பதவி ஏற்றதும் தமக்காக லீசான் மலையின் அடிவாரத்தில் கல்லறை கட்டத் துவங்கினார். 6 நாடுகளை ஒன்று இணைத்த பின் கல்லறை கட்டுவதற்காக மற்ற இடங்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொளிலாளர்களை அணிதிரட்டி பயன்படுத்தினார். 50 வயதில் மரணமடைந்த போது அவர் 37 ஆண்டுகளில் தமது கல்லறையை கட்டிமுடித்தாதர். கல்லறையில் முத்து செல்வம் மற்றும் இதர பொருட்கள் தாராளமாக போடப்பட்டன. திருட்டைத் தடுக்கும் வகையில் கல்லறையில் ரகசியமாக ஆயுதங்கள் வைக்கப்பட்டன. கல்லறையில் திமிங்கல எண்ணெயால் தயாரிக்கப்பட்ட விளக்கு எப்போதும் எரிகிறது. கல்லறையைச் சூழ்ந்தபடி மாபெரும் படைவீரர் சிலைகளும் குதிரைச் சிலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கி.மு.210ம் ஆண்டில் சிங்ஸுகுவான் பேரரசர் திடீரென சீனாவின் ஹுபேய் மாநிலத்தின் பின்சியானில் மரணமடைந்தார். 2 திங்களுக்கு பின் அவருடைய சடலம் சியேன் யான் கொண்டு செல்லப்பட்டு ஈமச்சடங்கு நடைபெற்றது. ஈமச்சடங்கில் அவருடைய முன்னான் அரண்மனை பெண்மணிகள் அனைவரும் அவருடன் உயிரோடு புதைக்கப்பட்டனர். கி.மு.206ம் ஆண்டு இக்கறை சியாங் யூ என்பவரால் நொறுக்கப்பட்டது.

பின் 3 லட்சம் பேர் 30 நாட்களாக கல்லறையில் வைக்கப்பட்ட மதிப்புக்குரிய நகை மற்றும் முத்து பொருட்களை வெளியேற்றினர். பின் ஆயர் ஒருவர் தீப்பந்தத்துடன் மாடுகளையும் ஆடுகளையும் தேடி கல்லறையில் நுழைந்ததால் இது முற்று முழுவதாக எரிக்கப்பட்டு 90 நாட்களாக தீ எரிந்தது என கதைகள் கூறின.

1949ம் ஆண்டில் சீனத் தொல் பொருள் ஆய்வாளர்கள் சிங்ஸ்குவான் கல்லறையை ஆராயத் துவங்கினர். குறிப்பாக சில குதிரைகள் மற்றும் படைவீரர்களின் சுடுமண்கிலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் தொல் பொருள் ஆய்வாளர்கள் தரையடியில் 200 கற்குகைகளை திறந்து வைத்து ஆராய்ந்தனர். இதற்கிடையில் திருத்தப்பட்ட 2 கற்குகைகளை கண்டுபிடித்தனர்.

தரையடியில் புதைக்கப்பட்ட முக்கிய கல்லறை கடுமையாக சீர்குலைக்கப்பட வில்லை. தரையடி மாளிகை தீப்பற்றி எரிந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. அப்படியிருந்தால் சிங்ஸ்குவான் பேரரசர் கல்லறை உலகில் ஒரேயொரு தரையடி மாளிகையாக விளங்கும் என்று சிலர் மதிப்பிட்டனர்.