பெருஞ்சுவரின் கணவாய்களின் கதைகள்
中国国际广播电台
 

பெருஞ்சுவரின் வழியாக ஒவ்வொரு முக்கிய இடத்திலும் கணவாய்கள் கட்டப்பட்டன. பல சாவடிகளுக்கு தனித்தனி கதைகள் உண்டு.பெருஞ்சுவரின் முதலாவது சாவடியாகஅழைக்கப்பட்ட சான்ஹைய் குவான் சீனாவின் ஹோபேய் லியோநின் ஆகிய இரண்டு மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது பெருஞ்சவரின் துவக்க முனையாகும். சான்ஹைய் குவானின் வடக்கில் யேன்சான் மலை உள்ளது. அதன் தெற்கில் போஹைய் கடல் ஓடுகின்றது. பெருஞ்சுவரில் ஏறியதும் கடலும் மலைகளும் இணையும் இயல்பான காட்சி பார்வையில் விரிகின்றது. ஆகவே சான் என்றால் தமிழில் மலை, ஹைய் என்றால் கடல், குவான் என்றால் கணவாய் என்று பொருள்படுகின்றன. கடலும் மலைகளும் இணையும் இடம் சான்ஹைய்குவான் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த இயல்பான பாதுகாப்பு மிக்க இடத்தில் மிங் வம்சகாலத்தில் புகழ்பெற்ற தளபதி சியூத்தா மலையையும் கடலையும் பாதுகாக்கும் கணவாயை நிறுவினார்.

பெருஞ்சுவரின் மேற்கு பகுதியில் சியாயூ சாவடி அமைந்துள்ளது. இந்த கணவாய் சியாயூ மலையில் கட்டபு்பட்டதால் சியாயூ பெயர் அதற்கு சூட்டப்பட்டது. அதற்கு இன்னொரு அர்த்தம் சமாதானக் கணவாய் என்பதாகும். உண்மையில் அங்கு போரும் மோதலும் ஏற்படவில்லை.

சீனாவின் சான்சி மாநிலத்தின் பின்தின் மாவட்டத்தில் அமைந்த ஞாஞ்சு கணவாய் என்றால் பெண்கள் பாதுகாக்கும் கணவாய் என்று பொருளாகும். அங்கே நிலவியல் நிலை செங்குத்தானது. பாதுகாப்பது எளிது. ஆனால் தாக்குதல் தொடுத்தால் மிகவும் கடினமானது. தாங் வம்சகாலத்தில் லீயியான்சானின் மகளான பின்யான் இளவரசி சில பத்தாயிரம் படைவீர்களுக்குத் தலைமை தாங்கி அங்கே காவல்புரிந்தார். பின்யான் இளவரசி ராணுவத் திறமை மிக்கவர். பெண் என்பதால் அவர் காவல்காத்த கணவாய் ஞாஞ்சு குவான் என்ற பெயரை வழங்கினர். ஞாஞ்சு என்றால் தமிழில் பெண்கள் என்று பொருள்படுகின்றது. குவான் என்றால் தமிழில் கணவாய் என்று பொருள்.