சீனாவில் பெயர் பண்பாடு
中国国际广播电台
 

மனிதர் பிறந்ததும் ஒரு பெயர் சூடப்படுகிறது. அதனுடன் சமூகத்தில் செயல்படுகின்றது. மற்றவரை வித்தியாசப்படுத்தும் பங்கினை இந்த பெயர் வகிக்கின்றது. ஆனால் பண்டைய சீன சமூதாயத்தில் பெயருக்கு இதை விட பல மடங்கு பயனுள்ள முக்கியத்துவம் இருந்தது.

நீண்டகால வரலாற்றில் சீனரின் பெயர் பண்பாடு சீனத் தேசம், பொருளாதார வாழ்க்கை, தார்மீக வாழ்க்கை ஆகியவற்றின் முக்கிய தொடராகும். அரசியல், பண்பாடு மற்றும் சமூக வாழ்வில் அது முக்கிய பங்கு வகித்தது. 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சொந்த பூமியில் மக்கள் வாழ்ந்தனர். ஆனால் பெயர் கொண்ட வரலாறு இன்றிலிருந்து 5000, 6000 ஆண்டுகளுக்கு முந்திய தாய்வழிச் சமூகத்தில் தான் தோன்றியது. தாய்வழிச் சமூகத்தின் தனிசிறப்பாக பெண்கள் சமூகத்தின் உள் விவகாரங்களை நிர்வகித்தனர். தலைமை வழிகாட்டியாக செயல்பட்டனர். அதேவேளையில் வெவ்வேறான இனங்களிடையில் திருமணம் செய்யலாம். சொந்த இனத்துக்குளே திருமணம் செய்யக் கூடாது என்று விதிக்கப்பட்டது. இந்த திருமண அமைப்பு முறையினால் பொது ரத்த தொடர்புறவின் சின்னமாக பெயர் என்பது உருவாக்கப்பட்டது.