45 கிலோமீட்டர் தொலைவு வரை கேட்கும் யூன்லெ மணி
中国国际广播电台
 

சீனாவின் பெய்சிங்கில் அமைந்துள்ள தாச்சுன் கோயிலில் யூன்லெ என்னும் பெரிய மணி வைக்கப்பட்டுள்ளது. அதன் எடை 46.5 டன்னாகும். உயரம் 6.75 மீட்டர். அதன் வெளிப்புற சுற்றளவு 3.3 மீட்டர். இந்த மணி 500 ஆண்டுகள் பழமையானது. வெண்கலத்தை உருக்கி வார்த்து அது உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கும் போது பல அடுப்புகளில் ஒரேநேரத்தில் தீமூட்டி வெண்கலம் உருக்கப்பட்டு அந்தக் குழம்பு மண்கால்வாய் மூலம் மணி மாதிரிக்குள் பாய்ந்தது. ஒரே முறையில் இந்த மணி வடிவமைக்கப்பட்டது. அதன் தயாரிப்பு முறை மிகவும் நேர்த்தியான கைவினை நுட்பமாகும்.

இந்த மணி பல முறை இடமாற்றிவைக்கப்பட்டது. 1751ம் ஆண்டில் தாச்சுன் கோயிலில் வைக்கப்பட்ட பின் மாற்றப்பட வில்லை.

அதன் ஒலி கேட்பதற்கு இனிமையானது. ஓங்கி அடித்தால் அதன் ஓசை 45 கிலோமீட்டர் வரை கேட்கும். 2 நிமிடம் வரை ஓசை அதிர்வு நீங்கரிக்கும்.

புத்தாண்டு வரும் போதெல்லாம் யூன்லெ மணி அடிக்கப்படும். 500 ஆண்டுகளாக அடிக்கப்பட்ட போதிலும் இந்த மணி முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது. காரணம் என்ன என்ற சந்தேகத்துடன் சீன அறிவியல் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மணியின் உள்பகுதியை ஆராய்ந்தனர். இந்த மணிக்குள் வெண்கலம், வெள்ளீயம், ஈயம், இரும்பு, மெக்கனிசீயம், தங்கம், வெள்ளி போன்ற உலோக தாது பொருட்கள் கலந்து அடைக்கப்பட்டுள்ளது.

யூன்லெ மணியை உருவாக்கும் நுட்பம் உலகின் வார்ப்பு வரலாற்றில் அற்புதமானது. அறிவியல் துறை இவ்வளவாக வளர்ந்துள்ள இன்று தான் இதை நனவாக்க முடியாது என்று இத்துறையில் ஈடுபட்டுள்ள அந்நிய நிபுணர் மதிப்பிட்டுள்ளார்.