தொலை உணர்வு நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பெய்சிங் நகரின் புதிய தோற்றம்
中国国际广播电台

மின் வம்ச ஆட்சிகாலத்தில் யூலெ ஆண்டுகளில்1403-1425கட்டப்பட்ட பெய்சிங் நகர் ஒழுங்கான வடிவமைப்பு மற்றும் கம்பீரமான தோற்ரத்தால் உலகப் புகழ் பெற்றது. கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் ஆய்வாளர்கள் தொலை உணர்வு தொழில் நுட்பத்தை கொண்டு விண்வெளியில் இருந்து தரை வரை வீடியோ மூலம் பெய்சிங் நகரை படம் எடுத்த போது பெய்சிங் நகர் அமைப்பில் கிடக்கைவாக்கில் உள்ள இரண்டு டிராகன்களையும் அமர்ந்த நிலையில் உள்ள ராட்சத ஆளையும் கண்டுபிடித்துள்ளனர். இவை பெய்சிங் நகரின் இரண்டு பெரிய காட்சி இடங்களாகி அதிர்ச்சி தருகின்றன. தென் பகுதியில் இருந்து வட பகுதிக்கு இவ்விரண்டு டிராகன்கள் இணைந்து செல்வதை வண்ணப்படம் காட்டுகின்றது. இவற்றில் ஒன்று பெய்சிங் நகரில் பண்டைய கட்டிடங்களால் உருவாக்கப்படுகின்றது. இது பண்டைய கட்டிட டிராகனாகும். டி ஆன் மன் கட்டிடத்திலிருந்து சுங் க்கூ லௌ வரை நீடிக்கும். டி ஆ மன் அதன் வாய். கின்ஸூவெய் பாலம் அதன் தாடை கிழக்கு மற்றும் மேற்கு சான் ஆன் சாலை நீண்ட தாடி தைய் மியௌ கோயில், ஸேச்சிதான் அதன் கண்கள். அரண்மனை அதன் உடம்பு. சுங் க்கு லௌ அதன் வால். அரண்மனையின் கோபுரங்கள் டிராகனின் எட்டு கால்களாகும் என மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்னொரு டிராகன் பெய்சிங் நகரின் நீர் வளத்தால் உருவாக்கப்படுகின்றது. நீர் டிராகன் என அழைக்கப்படுகின்றது. அதன் தலை தெற்கு ஏரி கடல் போல் அரை வட்டமாக உள்ளது. மத்திய ஏரி இணையும் வட ஏரி வடிவம் வளைந்து செல்லும் டிராகனின் உடல் போல் இருக்கின்றது. வட மேற்கில் உள்ள ஷி ச்சா ஹாய் ஏரி டிராகனின் வாலாகும்.

பண்டைய கட்டிட டிராகனும் நீர் வள டிராகனுடன் இணைந்து நிற்கும் இயற்கை காட்சி மிக பிரமாண்டமானது. இவ்வளவு அற்புதமான மாபெரும் டிராகன்கள் கட்டிடக்கலைஞர்களின் கற்பனைத்திறநை இயற்கையிலேயே உருவானதா என்பது இது வரை தெளிவுபடுத்தப்பட வில்லை.

பெய்சிங் நகருக்கு இன்னொரு அற்புதமான காட்சியிடம் சின் சான் பூங்காவின் பூங்கா படமாகும். இந்த படம் கால்களை மடித்து அமர்ந்த நிலையில் உள்ள ராட்சத மனித வடிவம் போல் காட்சியளிக்கின்றது. சின் சான் பூங்கா மன்னராட்சி குடும்பத்தின் பூங்காவாகும். அரண்மனையின் வடக்கில் அமைந்துள்ளது. அதற்கும் மன்னராட்சி குடும்பத்தின் பூங்காவுக்குமிடையில் தொடர்பு உண்டா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்பட வில்லை.

இவ்விரண்டு கண்டுபிடிப்புகள் பண்டைய பெய்சிங் நகர் பற்றிய அதிர்ச்சியூட்டும் கதைகளை அதிகரிக்கின்றன.