கவிர் ல பைய்யும் அவருடைய கவிதைகளும்

中国国际广播电台


லீ பைய் என்பவர் சீனாவின் தாங் வம்சகாலத்தில் புகழ்பெற்ற கவிஞர். சாதானமற்ற தனி பெருமை தன்னம்பிக்கை நிறைந்த சுதந்திர குணம் ஆகியவை அவருக்கு உண்டு. கட்டுப்பாடற்ற மனப்பாங்கு தாராளமான படைப்பும் உணர்வு ஆகியவை மிக வளர்ந்த தாங் வம்சகாலத்தில் அறிஞர்களின் எழுச்சி தோற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன.

லீ பைய் 701ம் ஆண்டில் பிறந்து 762ம் ஆண்டில் மரணமடைந்தார். அவருடைய பிறந்த ஊர் இன்றைய சீனாவின் கான்சு மாநிலத்தைச் சேர்ந்தது. அவருடைய குடும்ப வரலாறும் பிறந்த இடமும் இதுவரை கதையாக திகழ்ந்தன. அவருடைய கவிதைகளைப் படித்தால் அவருடைய குடும்பம் செழுமையானது. பண்பாட்டு அறிவு மிக்கது. குழந்தைகாலத்தில் அவர் பல பல நூல்களை படித்தவர். படிப்பது தவிர அவர் வாள் வீச்சு நன்றாக விளையாடினார். 20 வயதுக்கு மேல் அறிவைப் பெருக்கும் வகையில் லீ பைய் சீனாவின் பல்வேறு இடங்களில் சுற்று பயணம் செய்தார். விவேகமான அவர் கவிதைத் துறையில் தலைசிறந்த பங்கு ஆற்றினார். அப்போது அச்சடிக்கும் துறை போக்குவரத்து ஆகியவை மிக பினதங்கிய நிலையில் இருந்தன. என்றாலும் அறிஞர்களுக்கிடையில் அன்பளிப்பும் பரிமாற்றமும் ஒருவருக்கு ஒருவர் வழங்கியதால் லீ பைய் இளம் வயதிலேயே புகழ் பெற்றார்.

அறிவை கற்றுக் கொண்டு தேர்தலின் மூலம் அதிகாரி பதவி பெறுவது பண்டைய சீனாவில் அறிஞர்கள் எதிர்பார்க்கின்ற இலட்சியமாக இருந்தது. இளைஞரான லீ பையும் அதிகாரி பதவி துறையில் வெற்றி பெற ஆசைபட்டார். அப்போதைய தலைநகரான சான் ஆன் சென்றார். அவருடைய கவிதைகள் பிரமுகர்களின் பரிந்துரை, ஆகியவற்றின் மூலம் 742ம் ஆண்டில் அவர் மன்னராட்சியில் சேர்க்கப்பட்டு கல்வி கழக அதிகாரியாக பதவி ஏற்றார். அப்போது அவருடைய வாழ்க்கை மிகவும் சீராக நடந்தது.

நேர்மையான அவர் அதிகாரிகளின் ஊழலைக் கண்டு கோபமடைந்தார். பேராளசர் அவரை உயர் பதவிக்கு நியமிப்பார் என்று அவர் எதிர்பார்த்தார். இதன் மூலம் அரசியல் திறனை வெளிக்காட்ட முடியும். ஆனால் பேரரசரோ அவரை பயன்மிக்கவர் என கவிஞராகக் கருதினார். தவிரவும் மன்னராட்சியின் அதிகார போக்கும் அவரை துன்பப்படுத்தியது. பேரரசருக்கு அவர் மீது நம்பிக்கை குறைந்தது. விளைவாக லீ பைய் மன்னராட்சி மீது நம்பிக்கை இழந்து சான் ஆனை விட்டு கவிதையும் மதுவும் கொண்டு நாடோடி வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார்.

அவருடைய வாழ்க்கையில் பெரும் பகுதி சுற்றுப் பயணத்திலேயே கழிந்தது. இயற்கை காட்சிகளை வர்ணிக்கும் கவிதைகளை அவர் படைத்தார். சுதோ எனும் சாலையில் பயணம் செய்வது ஆகாயத்தில் ஏறுவதை விட கடினமானது. மஞ்சள் ஆற்றின் நீர் சொர்க்கத்தலிருந்து வந்து கடலில் சென்று கலந்த பிறகு திரும்வுவது இல்லை. 300 அடி உயரத்தில் இருந்து வீழ்வது நேரடியாக பறப்பது மோன்றது. ஆகாயத்தில் இருந்து வீதி இறங்கி வருகின்றதாஎன்ற கவிதைகளில் மிதமிஞ்சிய வர்ணனை மூலம் விதம் விதமான இயற்கை காட்சிகளை அவ சித்திரித்தார். அவருடைய இந்த கவிதைகள் சீன மக்களிடையில் ஆயிரம் ஆண்டுகளாக செல்வாக்கு பெற்றிருந்தன.

இதுவரை அவர் படைத்த 900க்கும் அதிகமான கவிதைகள் மக்களிடையில் பரவியிருக்கின்றன. தவிரவும் அவரின் 60க்கும் அதிகமான கட்டுரைகளும் வரவேற்பு பெற்றுள்ளன. அற்புதன கற்பனை, பிரமாண்டமான கருத்து ஆகியவற்றுடனான அவருடைய கவிதைகள் பல தலைமுறைகளுக்கு ஆழந்த செல்வாக்கை ஏற்படுத்தின. கவிதை தேவன் என அவர் பல தலைமுறை மக்களால் அழைக்கப்பட்டார்.