சாதாரண வாழ்க்கையை பாராட்டும் நாட்டுப்புற கவிஞர் தோ யுவான் மின்
中国国际广播电台


தோ யுவான் மின் தோ சியான் என்றும் அழைக்கப்பட்டார். அவர் கி.பி 4வது நூற்றாண்டின் கிழக்கு ச்சின் காலகட்டத்தில் வாழ்ந்தார். அவர் சீன முல்லைப்பாட்டு வகையை தோற்றுவித்தவர். அவருடைய கவிதைகளில் வாழ்க்கையின் அமைதி, இன்ப துன்பம், இயற்கை, எளிமை, நேர்மை ஆகியவை நிறைந்த பண்புகள் சீன பண்பாட்டு வரலாற்றில் மிகவும் பாராட்டப்பட்டன.

தோ யிவான் மின் முப்பாட்டனார் தோக்கான் கிழக்கு சிங் வம்ச த்தை உருவாக்கியதற்கு முக்கிய பங்காற்றினார்.. அவருடைய தாத்தாவும் தந்தையும் அதிகாரியாக பணி புரிந்தனர். அவருடைய 8 வயதில் தந்தை மரணமடைந்தார். அப்போது முதல் குடும்ப வாழ்க்கை படிபடியாக நரிவடைந்தது. குழந்தைப் பருவத்திலிருந்தே தோ யுவான் மின் அரசியல் வாழ்க்கையில் முன்னேற்றத் துடித்தார்.

ஆனால் கிழக்கு ச்சிங் வம்ச காலம் கொந்தளிப்பான காலமாகும். மன்னராட்சியில் போராட்டங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. மன்னராட்சியில் சீர்கேடுகள் மிகுதி. நேர்மையான குணம் கொண்ட அவர் 29 வயதில் முதலாவதாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அரசியல் வட்டாரத்தின் சீர்கேட்டை தாங்க முடியாமல் அவர் ஊருக்கு திரும்பினார். பிறகு, வாழ்க்கையின் நெருக்கடியை எதிர்நோக்கிய நிலையில் சில முறை சிறிய அதிகாரியாக பணிபுரிந்த பின் தோல்வியடைந்து வீட்டுக்கு திரும்பினார்.

பின் அவருடைய வாழ்க்கை மேலும் வறுமைவசப்பட்டது. வேலை செய்து தனது குடும்பத்தினரை காப்பாற்றினார். 41 வயதான போது அவர் மீண்டும் மாவட்ட அதிகாரி பதவி பெற்றார். ஆனால் 80 நாட்கள் மட்டுமே அவர் பதவி வகித்தார் அதற்கு பின் அதிகாரி வட்டாரத்திலிருந்து விலகி விவயாசி வாழ்க்கையை வாழ்ந்தார்.

அவருடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. 44 வயதாகிய போது இலத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால் வாழ்க்கை மேலும் வறுமையாகியது. கோடைகாலத்தில் பட்டினியை அரவணைத்து குளிர்காலத்தில் கம்பளி இல்லாமல் இரவு கழிந்ததுஎன்ற கவிதை மூலம் அவருடைய வாழ்க்கையை பிரதிபலித்தது. ஆனால் அவருடைய எழுச்சி அமைதியானது. அப்போது அவர் கவிதை அறுவடை செய்தார். பெருமளவில் வாழ்க்கையை வர்ணிக்கும் கவிதைகளை ஏராரமாகப் படைத்தார். அவருடைய பேனாவில் கிராம வாழ்க்கை, இயற்கைகாட்சி ஆகியவை அடிக்கடி கருப்பொருளாக வர்ணிக்கப்பட்டன. கவிதை மூலம் வாழ்க்கையின் துன்பத்தை அவர் போக்கினார்.

தோ யுவான் மின்னின் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் வறுமைவாட்டியது. சில சமயங்களில் பிச்சைகாரர் போல மற்றவரிடமிருந்து தானியம் நேரிப்பட்டது அப்படிப்பட்ட நிலையிலும் மன்னராட்சியின் அழைப்பை ரத்து செய்தார். வாழ்க்கையின் பிற்காலத்தில் புகழ்பெற்ற பீச் தோட்டம் என்ற கவிதை படைத்தார். மீனவர் ஒருவர் தவறாக பீச் வளரும் தோட்டத்திற்குள் நுழைகிறார். அங்கே பலர் கவலையின்ற தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்தனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு வெளியுலகம் தெரிய வில்லை. அயரா உழைப்பின் மூலம் கவலையற்ற அமைதி வாழ்க்கையை வாழ்ந்தனர் என்று அவர் பீச் தோட்டம் கவிதையில் அருமையான கற்பனையுடன் வர்ணித்திருக்கிறார். அந்த குழப்பமான காலகட்டத்தில் பரந்துபட்ட மக்கள் அமைதியான சமூகத்தை எதிர்நோக்கும் விருப்பத்தை அவர் கவிதை மூலம் பிரதிபலித்தார்.

அவர் படைத்த கவிதைகளில் 100 மட்டும் இப்போது ிருக்கின்றன. இருந்தாலும் தோ யுவான் மின் சீன பண்பாட்டு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கவிஞர். அவருடைய கவிதைகள் எளிமையான கவிதையின் இலக்கணமாகத் திகழ்கின்றன.