நாடக ஆசிரியர் லீ யூ
中国国际广播电台

சீனாவின் ஆயிரமாயிரம் ஆண்டு கால பண்பாட்டு

வரலாற்றில் புகழ்பெற்ற பல கவிஞர்களும் நாடக படைப்பாளர்களும் நாவல் எழுத்தாளர்களும் தோன்றியுள்ளனர். ஆனால் இயக்குநர் நாடக விமர்சகர் நாவல் எழுத்தாளர் ஆகிய எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கிய ஒருவரைக் காண்பது அத்தகையோரில் ஒருவரு தான் சீனாவின் பண்டைகாலத்தில் புகழ்பெற்ற பண்பாட்டு அறிஞர் லீ யூ.

லீ யூ 1610ம் ஆண்டு சீனாவின் மிங் வம்சகாலத்தில் பிறந்தவர். 30 வயதான போது வம்சகால மாற்றம் நிகழ்ந்தது. சீனாவின் கடைசி நிலப்புத்துவ வம்சமான சிங் வம்சம் தனது ஆயுதபலத்தால் மிங் வம்சத்தை தோற்கடித்தது. அப்போது சமுதாயத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஒரு காலத்தில் லீ யூ வாழ்ந்தார். 1680ம் ஆண்டில் அவர் மரணமடைந்தார்.

குழந்தை பருவத்திலேயே அவர் கன்பீயுஸச்ஸ் கல்வி பெற்றார். சீன பாரம்பரிய அறிஞர்கள் பின்பற்றும் ஒரு பாதையில் செல்ல அவர் விரும்பினார். அதாவது தேர்வு எழுதி அரசியல் பணி பெறுவது. ஆனால் கடுமையான போர்க் காலத்தில் சில முறை தேர்வுகளை எழுதிய போதிலும் அவர் வெற்றி பெற வில்லை. பின்னல் அந்த முயற்சியை கைவிட்டு அவர் வீட்டிலேயே கடையை நடத்தி புத்தகங்களை விற்பனை வாழ்க்கை நடத்தினார். அதேவேளையில் நாடகம் படைப்பதிலும் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

நாடகம் படைப்பதையும் நாடக தத்துவத்தையும் இணைத்தது அவருடைய வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியாகும். அவர் படைத்த நாடகங்களில் பீ மு மீன் , யூச்சோதௌ , லின் சியான்பென் போன்ற பத்துக்கும் மேலான நாடகங்களை இப்போது இன்னும் தொடர்ந்து அரங்கேற்றப்படுகின்றன. இந்த நாடகங்கள் அடிப்படையில் காதல் கதைகளாக உள்ளன. நடைமுறை வாழ்க்கையை கருப்பொருளாக கொண்டு ஆண் பெண் இளைஞர்கள் காதலுக்காக தியாகம் செய்வதை புகழ்ந்து பாராட்டுகின்றன. நாடகங்கள் பல திருப்பங்களுடன் மக்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளன. அரங்கேற்றி நடிப்பதற்கு ஏற்றவையாக உள்ளனன. அவருடைய நாடகங்களில் பொழுதுபோக்கு மட்டுமல்ல கண்டிப்பான சமூக அம்சங்களும் உள்ளன.

லீ யூ பெருமளவில் நாடகங்களை படைத்ததோடு அரங்கேற்றத்துக்காக நாடக குழுவையும் உருவாக்கினார். நாடகத்தை தயாரித்த போது இயக்குநராக அவர் பணிபுரிந்தார். சிலசமயத்தில் நட்கராக அரங்கேறினார். சீனாவின் பண்டைகாலத்தில் நாடகத்தில் நடிப்பதும் மிகவும் கீழான ஒரு தொழிலாக மேல்வர்க்க சமூகத்தால் கருதப்பட்டது, அறிஞர்களும் இதை பெரிதாக மதிப்பிட வில்லை. ஆனால் லீ யூக்கு தமது லட்சியம் பிடித்திருந்தது. அவருடைய தலைமையில் நாடக குழு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இடங்களுக்குச் சென்று நாடகங்களளை அரங்கேற்றியது.

நீண்டகால நாடக பயிற்சியில் ஈடுபட்ட வளமான அனுபவமும் அவருக்கு உண்டு. நாடகத்தின் ஒவ்வொரு தொடர்பும் அவருக்கு தெரிந்திருந்தது. படிப்படியாக படைப்பு இயக்குதல், நடப்பு ஆகியவை அடங்கிய ஒரு நாடக கோட்பாட்டை அவர் உருவாக்கினார். இந்த கோட்பாடு பண்டைகால சீனாவில் நாடகம் பக்குவமடைந்ததை காட்டுகின்ரது. பிற்காலத்தில் நாடகமும் பண்பாடும் வளர்வதற்கு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை இது ஏற்படுத்தியது.

நாடக படைப்பு மற்றும் தத்துவ துறையில் அவர் சாதனை பரிந்தார். இது மட்டுமல்ல லீ யூ சீனாவின் பண்பாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற நாவல் படைப்பாளராகவும் திகழ்ந்தார். அழைக்கப்பட்டார். அவர் படைத்த நாவல்கள் சிறுகதை ஆகியவற்றில் அவருடைய வாழ்க்கை அனுபவமும் கேட்ட செய்திகளும் நிறைந்துள்ளன. கதைகளில் வர்ணிக்கப்பட்ட பெண்மணிகள் நாகரிகம் நிரம்பியவர்களாக இருந்தனர். பெண்மணிகள் பல்வகை தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும், ஆண்களும் பெண்களும் சம நிலையில் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணம் அவருடைய படைப்புகளில் காணப்படுகின்றன.

லீ யூவின் திறமையை எடுத்துக்காட்டாக கவிதை, வரலாற்று விமர்சனம் முதலிய துறைகளிலும் காணபடலாம். அவர் படைத்த மிக முக்கிய படைப்புகளில் ஒன்றான பொழுது போக்கு பற்றிய குறிப்பு எனும் நூலில் நாடக தத்துவம் தவிர, உணவு, கட்டிடம், சேகரிப்பு, பொழுது போக்கு மற்றும் சாகுபடி போன்ற தத்துவங்களும் காணப்படுகின்றன. இப்போதும் காலத்தில் அவற்றை படிக்கும் போது மனதை ஈர்க்கின்றன.