புகழ்பெற்ற நாடக அறிஞர் குவான் ஹென் சின்
中国国际广播电台


சீனாவின் யூவான் வம்சகாலத்தில் உருவெடுத்த நாடக அறிஞர் குவான் ஹென் சின் சீன பண்பாட்டு மற்றும் நாடக வரலாற்றில் மிக பெரிய எழுத்தாளர்களில் ஒருவராவார். தொஏ அநீதி எனும் சோக நாடகம் 700 ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டு தொடர்ந்து புகழ் பெற்றுள்ளது. அத்துடன் பல மொழிகளில் மொழியாக்கப்பட்டு உலகெங்கும் பரவியுள்ளது.

குவான் ஹென் சின் 13ம் நூற்றாண்டிலுள்ள யுவான் வம்சகாலத்தில் வாழ்ந்தார். அவர் விவேக அறிவு கொண்டவர். கவிதை, இசை இசையமைப்பது, நடனம் சதுரங்கம் விளையாடுவது வேட்டையாடுவது ஆகியவற்றில் திறமைசாலி. நீண்டகாலமாக தலைநகரில் வாழ்ந்த அவர் ரொயா மருத்துவ மனையில் பதவி வகித்தபோதிலும், மருத்துவ தத்துவத்தில் அக்கறை குறைந்து நாடகம் படைப்பதில் அவர் அக்கறை காட்டினார். அப்போது யுவான் வம்சகாலத்தில் பரவிய கலப்பு நாடகம்நாட்டுபுற கருப் பொருளை கதையாக கொண்டு சமூகத்தின் நடைமுறை நிலையைப் பிரதிபலித்தது. பணக்காரர்களும் சாதாரண மக்களும் இத்தகைய நாடகத்தை மிகவும் கண்டு ரசிக்க விரும்பினர். குவான் ஹென் சின் படைத்த நாடகம் பணக்காரர்களுக்காக இல்லை. மக்களின் துன்பத்தை அம்பலப்படுத்துவதே அவருடைய நோக்கமாகும்.

அப்போது யுவான் வம்சகாலம் கடும் சீர்கேட்டா நிலையில் இருந்தது. சமூகம் அமைதியற்றது. வர்க்க போராட்டமும் தேசிய இனப் போர்களும் கடுமையாக இருந்தன. தவறாக தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள் எண்ணற்றவை. பல்வேறு தேசிய இன தொழிலாளர்கள் துன்பமான வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களின் மீது குவான் ஹென் சின் அன்பு காட்டினார். அதிகாரி பதவியிலிருந்து விலகி மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவர்களிடையே சென்றார். நாடகம் என்ற இலக்கிய வடிவத்தின் மூலம் சமூகத்தை அம்பலப்படுத்தினார்.

மக்களின் துன்பத்தையும் உள்ளூர் மொழியையும் அறிந்த குவான் ஹென் சின்னிடம் தலைசிறந்த கலையிலக்கிய நுட்பமும் இருந்தது. இது அவரது நாடக படைப்புக்கு உயிர்த் துடிப்பு அளித்தது. அப்போது கலைநிகழ்ச்சிகளை அறங்கேற்றியவர்களின் சமூக நிலை மிகவும் தாழ்ந்திருந்தது. அவர் அடிக்கடி அவர்களுடன் பழகினார். நாடகத்துக்கு தானே வழிக்காட்டி அரங்கேற்றினார். அவர் படைத்த இசை ஒன்றில் உறுதியான குணத்தை அவர் வருணித்தார். அவருடைய படைப்பில் அடக்கப்பட்ட உழைப்பாளர்கள் துன்பத்துக்குள்ளாக்கப்பட்ட போது நியாயம், துணிச்சல் எதிர்ப்பு எழுச்சி ஆகியவற்றை சத்திரித்தார். புகழ்பெற்ற சோக நாடகமானதோ ஏ யூன் நாடகம் அவருடைய தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.