மேற்கு நோக்கிய பயணம் 
中国国际广播电台


மேற்கு நோக்கிய பயணம் சீனவின் பண்டைகால வரலாற்றில் மிக வெற்றிகரமான கற்பனை கதையாகும். 700ம் ஆண்டில் சீனாவில் புகழ்பெற்ற பௌத்த மத குரு தாசன்சியான் சுவான்இந்தியாவில் மதக் கல்வி கற்பதற்காக கதையாக கொண்டு தமது மூன்று மாணவர்களுடன் சென்ற போது வழியில் சந்தித்த பல்வகை இடர்கள் பற்றி கதை கூறுகின்றது. எந்த வகை அதிகாரத்தை பொருட்படுத்தாமல் தீய சக்திகளுக்கு எதிரான போராட்டம் நடத்தும் மங்கிய தோற்றத்திலான சன் வூ குன் இந்த கதையில் வர்ணிக்கப்பட்டார். நடைமுறை வாழ்க்கையில் எழுத்தாளரருக்கு உள்ள ஆர்வம் இந்த கதையில் எடுத்துக்காட்டப்படுகின்றது.

எழுதாளர் வூ சன் அன் சீனாவின் சியான் சூ மாநிலத்தின் குவெய் ஆன் ஊரைச் சேர்ந்தவர். குழந்தை காலத்தில் அவர் புத்தியாலியாக அழைக்கப்பட்டார். பலவகைத் திறமை பெற்றிருந்தார். ஓவியம் வளரவது நேர்த்தியான சீன கையெழுத்து இசை, சதுரங்கம் ஆகியவற்றிலும் அக்கறை காட்டி தேர்ச்சி பெற்றார். இளமை காலத்தில் பண்பாட்டு திறமையினால் ஊரில் புகழ்பெற்றார். ஆனால் பல தடைகளுக்கு இடையே வளர்ந்த அவர் பல முறை அரசின் தேர்வில் தோல்வியடைந்தார். அப்போது அவர் வறுமைக்குள்ளாக்கப்பட்டார். அவருடைய கோபம், ஆர்வம் ஆகியவற்றை தனது மேற்கு நோக்கிய பயணம்கதையில் இணைத்தார். அவர் வாழ்க்கையின் பிற்காலத்தில் இந்த கதையை எழுதிய போதிலும் அவருடைய வாழ்நாள் முழுவதிலும் இதற்காக ஏற்பாடு செய்திருந்தார். குழந்தை காலத்தில் தந்தையுடன் கோயில்களுக்கு அவர் சென்ற போது ஒவ்வொரு இடத்திலும் தந்தை அவருக்கு அருமையான கற்பனைக் கதைகளை சொன்னார். இந்த கதைகள் அவருக்கு மிக பிடித்தன. காலம் செல்லச் செல்ல கதைகள் மீதான விருப்பம் அதிகரித்தது. 30 வயதுக்கு பின் அவர் பற்பல கற்பனை கதைகளை சேகரித்து நெடுங்கதையாக உருவாக்க திட்டமிட்டார். 50 வயதில் அவர் மேற்கு நோக்கிய பயணம்கதையின் முதல் பத்துக்கு அதிகமான பிரதிகளை படைத்தார். சில காரணத்தினால் பல ஆண்டுகள் எழுதுவதை நிறுத்தினார். வாழ்க்கையின் பிற்காலத்தில் அதிகாரி பதவியிலிருந்து விலகி பிறந்த ஊருக்கு திரும்பிய பின் தான் அவர் கதையின ஏனைய பகுதியை பூர்த்தி செய்தார்.

மேற்கு நோக்கிய பயணத்தில் பல கதைகள்உள்ளன. வ்வொரு கதையும்வும் தனிப்பட்டும் சேர்ந்தும் இயங்குகின்றன. பல்வகை கற்பனை தேவிகளும் தேவர்களும் உள்ளனர். நல்லதையும் கெட்டதையும் தனிதனியாக பிரதிநிதித்துவப்படுகின்றன. கதை முழுவதிலும் கற்பனை உலகம் காணப்டுகின்றது. இந்த உலகத்தில் மனிதர்கள் நிழலாக உலவுகின்றனர். புனித ஆகாய மாளிகை, மன்னர், நீதி மன்றம், ஊழல் மிக்க அதிகாரிகள், அப்பாவி மக்கள் முதலியோர் இந்த கதையில் வர்ணிக்கப்படுகின்றனர். வீரர் சன் வூ குன்னை உருவாக்குவதன் மூலம் சமூகத்தின் தீய தோற்றத்தையும் தீய அதிகார சக்திகளையும் நீக்கும் கடும் விருப்பத்தை அவர் எடுத்துக்காட்டினார்.

வூ சன் அன்னின் மேற்கு நோக்கிய பயணம்எனும் கதை பிற்கால உலகதிற்கு மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. சில நூறு ஆண்டுகளாக குழந்தை கலைஇலக்கிய படைபாகவும், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி திரப்பட கருபொருளாகவும் கருதப்படுகின்றது.