சியங் கர்
中国国际广播电台


சியாங் கர் என்பவர் 2 வயதில் அநாதையானார். 3 வயதான போது பல இடங்களுக்கும் சென்று போராடத் தொடங்கினார். 7 வயதில் மக்களால் வீரராக பாராட்டப்பட்டார். இவையனைத்தும் சீன வரலாற்று வீர காவியமான சியங் கர்காவியத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன.

15ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டின் நடு பகுதியி வரை மங்கோலிய இனத்தின் விலாட் வட்டாரத்தில் சியாங்கர்

காவியம் உருவாயிற்று. விலாட்என்பவர் மங்கோலிய இனத்தின் பண்டைகால பழங்குடியினமாகும். அதற்கு வன இனம்என்று பொருள்படுகின்றது. முக்கியமாக அவர்கள் சீனாவின் சிங்கியான் உய் கூர் பிரதேசத்தின் அல்தாய் மலை தொடரில் வாழ்ந்தனர்.

காவிய நாயகரான சிங்கருத்து 2 வயதான போது கொடூரமான மாங்கூஸ் என்பவர் அவனுடைய தாயகத்தின் மீது படையெடுத்தால் தாய் தந்தை கொல்லப்பட்டனர். சியங்கர் அப்போது முதல் பெற்றோருக்காக குடுபத்தின் எதிரியை தோற்கடித்துப் பழிதீர்க்க சபதம் எடுத்தார். 3 வயதில் புல் வெளியில் போரில் ஈடுபட்டார். 7 வயதில் அவர் வெற்றி பெற்றார். போமுப்பா வட்டாரத்தில் வாழ்ந்த மக்கள் அவரை மன்னராக ஏற்றார். மாங்கூஸ் தோல்வியை ஏற்காமல் போமுப்பா நாட்டை அடிக்கடி ஆக்கிரமித்தார். சியங்கர் 8000 படைவீர்களுக்கு தலைமை தாங்கி எதிரியுடன் துணிச்சலுடன் போராடினார். அவருடைய வெற்றி அப்போடைதைய 44 நாடுகளில் பாராட்டப்பட்டது. கடுமையான போருக்கு பின் சியங்கர் அசாதாரண திறமையுடன் அமைதி தவழும் ஒரு கனவுலக நாட்டை நிறுவினார். அங்கே வாழ்ந்த மக்களின் ஆயுள் என்றுமே நிலையாக இருந்தது. மக்கள் அனைவருமே 25 வயதான கட்டத்தில் இருந்தனர். அவருடைய நாட்டில் மலர்களும் செடிகளும் ஆண்டு முழுவதிலும் மலர்ந்திருந்தன. எங்கெங்கும் சிரிப்பு எதிரொலித்தது. அவருடைய தாயகத்தில் குளிர் காலம் இல்லை. கோடைகாலமும் இல்லை. எப்போதும் இலையுதிர் மண் வாசனை வீசியது என்று வரலாற்று காவியத்தில் வர்ணிக்கப்படுகின்றது.

சியங்கர் நீளமான வரலாற்று வீர காவியம் என்ற வடிவத்தில் மனிதரை வர்ணிப்பதில் சிறந்த வெற்றி பெற்றுள்ளது. கதைத் தலைவன் சிங்கரை வர்ணிக்கும் போது அவருடைய துன்பமான குழந்தைப் பருவம் கடினமாரந் போராடாட்டம் ஆகியவை பற்றி மறுபடியும் கூறப்படுகின்றன. விவேகம், மற்றும் நற்புகழுடன் ம்க்களால் மிகவும் வரவேற்கப்பட்டவராக சியங்கர் வர்ணிக்கப்படுகின்றார்.

இயற்கை காட்சிகள் பற்றி கதை கூறும் போது ஆழந்த உணர்வுடன் அல்தாய் மலைத் தொடரின் அற்புத காட்சிகளை கூறப்படுகின்றன. பண்டைகால விலாட் பழங்குடி மக்கள் வாழும் சுற்று சூழ்நிலை தேசிய தனிச்சிறப்பு மிக்க முறையில் வர்ணிக்கப்படுகின்றது. மங்கோலிய இன மக்களுக்கே வரித்தான குணமும் அழகை பாராட்டும் உணர்வும் எடுத்துக்காட்டப்படுகின்றன. கலைநயம் மிக்க தெளிவான தேசிய இனத் தனிச்சிறப்பு காணப்படுகின்றது. மற்ற வரலாற்று வீர காவியங்கள் போல சியங்கர் தேசிய இனத் தனிச்சிறப்பு மிக்கது.

சியங்கர்மங்கோலிய இனத்தின் பண்டைகால பண்பாட்டு உச்சியில் வளர்ந்த காவியமாகும். பண்பாட்டு உருவாக்கத்தில் மாபெரும் செல்வாக்கு ஏற்படுத்தியது. தற்போது இந்த வரலாற்று வீர காவியம் சீன அரசாங்கத்தின் முக்கிய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள பண்பாட்டு பொக்கிஷத்தில் ஒன்றாகும்.