ஒரு பாம்பை வரைந்து அதற்கு காலையும் சேர்

中国国际广播电台

தென்பகுதியில் பழம்பெரும் சு நாட்டு அதிகாரி ஒரு பானை திராட்சை மதுவை வசந்தகால முன்னோர்கள் தியாக திருவிழாவின் போது தனது தொண்டர்களுக்கும் கொடுத்தான்.

ஒரு தொண்டன் கூறினான். மம்மிடம் ஒரு பானை மது மட்டுமே உள்ளது. இது அனைவருக்கும் போதுமானதல்ல. ஆனால் ஒருவன் முழுதாக குடிப்பதற்கு போதுமானது. நாம் நிலத்தில் ஒரு பாம்பை வரைவோம். எவர் முதலில் வரைந்து முடிக்கிறாரோ அவர் மது வைப்பப் பெறலாம்.

இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒருவன் மிக விரைவில் தனது பாம்பை வரைந்து முடித்தான். அவன் மதுவை குடிப்பதற்கு ஆயத்தமான போது பார்த்தான். மற்றவர்கள் யாமே அப்போதும் வரைந்து முடிக்க வில்லை. அவன் அமைதியாகக் கூறினான். நீங்கள் தாமதமானவர்கள். பாருங்கள். பாம்புக்கு பாதங்களை வரைவதற்கு கூட எனக்கு இப்போது போதுமான நேரம் உள்ளது. ஆனால் அவன் பாதங்களை வரைவதற்கு முன்னர் மற்றொருவன் தனது பாம்பை வரைந்து முடித்து, அவனிடமிருந்த மதுப் பானையை பறித்தெடுத்து கொண்டு கூறினான். எவரும் பாதங்களுடன் ஒரு போதும் பாம்பைப் பார்த்ததில்லை. உன்னுடையது பாம்பு அல்ல. இந்த மதும் இப்பொழுது என்னுடையது என்று, அதைப் பருகினான். பாம்புக்கு பாதங்களை வரைந்தவன் தன் முட்டாள் தனத்தால் மதுவை இழந்தான்.

இக்கட்டுக்கதை உணர்த்துவது, என்னவெனில் தேவைக்கு அதிகமாக சாதிக்க நினைக்கிறானோ அதற்கே தன் எண்ணங்களையும் நோக்கங்களையும் கட்டியெழுப்ப வேண்டும். நோக்கத்தை துரத்திச் செல்ல வேண்டும். சிறிய வெற்றிகளைக் கண்டு மயங்கி விடக கூடாது.