நரி புலியாக பாவனை செய்தது
中国国际广播电台

ஒரு பசித்த புலி, நரி ஒன்றைப் பிடித்தது. அதைப் புசிக்க விரும்பியது. தந்திரமான நரி உடனடியாக மறுதளித்துக் கூறியது. என்னை தின்னும் தைரியம் உனக்கு எப்படி வந்ததுகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நான் இந்தக் காட்டிற்கு கடவுளால் அனுப்பப்பட்டவன். இங்குள்ள எல்லா மிருகங்களுக்கும் அரசனாக இருக்கும் படி அனுப்பப்பட்டவன். நீ என்னை தின்றால் கடவுளின் கட்டளையை மீறியவனாக ஆவாய்.

புலி ஏறக்குறைய நம்பி விட்டதைப் பார்த்த நரி மேலும்நான் சொல்வதை நீ நம்பவில்லையானால் என்னைப் பின்தொடர்ந்து வர ஒவ்வொரு மிருக்கமும் எவ்வித வேறுபாருகளுமின்றி என்னைப் பார்த்து பயப்படுவதைப் பார்க்கலாம்.

இவ்வுண்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு, அந்தப் புலி அவ்வேண்டுகோளை ஏற்றது. அந்த நரி முன்னே செல்ல, அந்தப் புலி மிக நெருக்கமாகப் பின் தொடர்ந்தது. எல்லாக் காட்டு மிருகங்களும் புலி வருவதைப் பார்த்து ஓட்டமெடுத்தன.

உண்மையில் நரியைப் பார்த்துப் பயந்தே அந்த மிருகங்கள் தம் உயிருக்காக ஒருவதாக புலி நம்பியது. அந்த வகையில் அது நரியை உண்ணத் துணிவு கொள்ள வில்லை.

இந்தக் கதை சொல்வதென்ன வென்றால் மக்கள் தெளிவான மனதுடையவர்களாக இருக்க வேண்டும். வெளித் தோற்றத்தால் ஏமாத்து விடக்கூடாது. மற்றவர்களால் பலத்தை காட்டி ஏமாற்றுவதை நம்பிவிடக்கூடாது.