யு கொங் மலைகளை அப்பால் அகற்றுகின்றார்
中国国际广播电台

இக்கதையை ஒவ்வொரு சீன மக்களும் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். இது, கி.மு. நானூறு அல்லைது ஐந்து நூறு ஆண்டுகளில் லி யுகோயு என்ற தத்துவ ஞானி லியேசி என்ற புத்தகத்தில் எழுதிவைத்தார்.

யு கொங் என அழைக்கப்பட்ட தொன்னூறு வயது முதியவர் ஒருவர் இருந்தார். அவரின் வீட்டுக்கு முன்னால் இரண்டு பெரிய மலைகள் இருந்தன. இம்மலைகள் அவருடைய குடும்பத்திற்கு ஒரு நாள் அவர் தனது குடும்பத்தினரை அழைத்து, இந்த இரண்டு மலைகளும் நான் வெளியே போய் வருவதற்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளன. இவற்றை அகற்றி விட்டால் என்ன?”எனக் கூறினார். அவரின் மனைவியை தவிர அவரின் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் யாவரும் உடன்பட்டனர். அவரின் மனைவி, நாம் பல தலைமுறைகளாக இப்படிப்பட்ட ஒரு சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றோம். மலைகள் அப்படியே கருக்கட்டுமே. மேலும் இந்த மலைகளில் இருந்து வருகின்ற கற்களையும் மண்ணையும் எங்கே கொண்டு போய் போடுகின்றதுஎனக் கேட்டாள். கற்களையும் மண்ணையும் கடலில் கொண்டு போய் கொட்டுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த நாள் வேலை ஆரம்பமாகியது. அவர்களிடம் தோண்டுவதற்கு கூடைகளும் மண் வெட்டியும் மட்டுமே இருந்தன. அவர்கள் கடலில் இருந்து அதிக தூரத்தில் இருந்தனர். துணிச்சலான அந்தக் குடும்பம் கஷ்ட நஷ்டங்களைக் கண்டு அஞ்சவில்லை. தினமும் மலையை வெட்டினர்.

ஒரு நாள் ஜி சோ என அழைக்கப்பட்ட ஒரு அறிவான முதியவர் இவர்களில் முயற்சியை பார்த்தார். அவர்களின் மலை அகற்றும் முயற்சியை பார்த்து ஆச்சரியப்பட்டார். நீர் திழவன். உம்மால் மலையின் உச்சிக்கும் ஏற முடியாது. எப்படி இந்த மலையை அகற்ற முடியும்?”என கூறினார். ஆம், நான் கிழவன் தான். நான் மிக விரைவில் இறந்து விடுவேன். ஆனால், எனக்கு பிள்ளைகள் உண்டு. எனது பிள்ளைகள் இறக்கும் போதும் போப்பிள்ளைகள் இருப்பார்கள். எனது குடும்பம் வளர்ந்து வளர்ந்து செல்லும். மலை சிறுத்து சிறுத்து போடும். அவ்வாறான ஓர் திடசங்கற்பத்துடன் நிச்சயமாக இந்த மலைகளை அகற்றுவது சாத்தியமாகும்என யு கொங் பதிலளித்தார். எனவே யு கொங்கும், அவரின் குடும்பமும் அவர்களுடைய வேலையை பல நாட்களாகவும் பல வருடங்களாகவும் முன்னெடுத்துச் சென்றனர். இக்கலைத்தில் வெப்பமான கோடைக்காலத்திலும், குளிர்ச்சியான குளிர்காலத்திலும் வேலை செய்தனர்.

அவர்களுடைய முயற்சியைக் கண்டு விண்ணுலகத்தில் உள்ள இறைவன் மனம் இரங்கினார். அவ்விரண்டு மலைகளையும் அப்பால் எடுப்பதற்கு இரண்டு தேவதைகளை அனுப்பினார்.

பல இலட்டியங்கள், எட்டமுடியாதது போலத் தோன்றலாம். மனதில் உறுதி மட்டும் இருந்தால் மலையைக் கூட அசைத்து விடலாம் என்பதே இந்தக் கதையின் கருத்து.