ஊதாய் மலை
中国国际广播电台

ஷான்சி மாநிலத்தின் ஊதாய் என்ற மாவட்டத்தின் வட கிழக்கு பகுதியில் ஊதாய் மலை அமைந்துள்ளது. இதனுடன் சு ச்சுவான் மாநிலத்தில் எமெய் மலை, ஜெ ஜியாங் மாநிலத்தில் புதோ மலை, அன்ஹுய் மாநிலத்தில் ஜியு ஹுவா மலை என்பன சீனாவில் நான்கு பிரபலமான நான்கு பௌத்த மலைகள் எனப்படுகின்றன. மஞ்சு எனப்படும் போதிசத்துவர் ஊதாய் மலையில் தங்கிபௌத்தத்தை போதித்ததாக கூறப்படுகின்றது. இம்மலைகள் உல்லாசப் பயணிகளை கவரும் முக்கிய இடமாக இருக்கின்றது.

ஊதாய் மலை ஐந்து சிகரங்களை உள்ளடக்கியிருக்கின்றது. ஒவ்வொரு உச்சிகளின் மேல்பகுதி தட்டையாக ஒரு மேடை போன்று காணப்படுகின்றது. இதனால் இதன் பெயர் ஐந்து மேடை மலை என வந்தது. இது வட சீனாவில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் உள்ளது.

ஊதாய் மலையானது, தொடக்கத்தில் ஊபெங் மலை அல்லது ஐந்து சிகரமலை என அழைக்கப்பட்டது. அப்போது காலநிலை கொஞ்சம் கடுமையாக இருந்தது. குளிர்காலத்தில் குளிர் உச்சமாக இருக்கும். பின்னர் கோடைகாலத்தில் வெய்யில் வாட்டும். வசந்த காலத்தில் மலை புயல் வீசும். இங்கு வசிக்கின்ற உழவர்கள் அவர்களுடைய பண்ணை வேலைகளை கஷ்டப்பட்டு செய்தார்கள். இதைப் பார்த்த புத்த மஞ்சு இக்காலநிலையை மாற்றி இவர்களுக்கு உதவ தீர்மானித்தார்.

கழக்கு கடலில் உள்ள பறக்கும் இராச நாகம் ஒரு இராட்சத மாணிக்கக் கல்லினை வைத்திருந்ததை அவர் அறிந்தார். இந்த கல் மோசமான காலநிலையை தணிவிக்கும் பறக்கும் நாக் கல் என அழைக்கப்பட்டது. துறவி போன்று உடை அணிந்து இதை பெறுவதற்கு அவர் சென்றார்.

இருப்பினும் அந்த பறக்கும் இராச நாகம் இக்கல்லினை அவருக்கு கொடுக்க விரும்பவில்லை. தன்னுடைய பிள்ளைகள் ஓய்வெடுப்பதற்கு அக்கல் தேவை என அந்நாகம் கூறியது. மஞ்சு மலையில் உள்ள மக்களுக்கு எப்படி அக் கல் தேவைப்படுகிறது என்பதை விவரித்தார். கடைசியாக, துறவிக்கு கல்லை வெளியே எடுத்துச் செல்லும் போதிய வலு இருக்குமானால், கல்லைத் தர டிராகன் தயக்கத்துடன் உடன்பட்டது.

அப்படி அவரால் எடுத்துச் செல்ல முடியுமானால், அந்தக்கல் அவருக்கே சொந்தம் எனஅரும் கூறியது. அந்தக் கல்லை சிறு கூழாங் கல்லாக புத்தர் மாற்றினார். அதைத் தனது அந்திக்குள் வைத்துக் கொண்டு, ஊதாய் மலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அவர் மலைக்கு திரும்பிய போது, ஊதாய் வெப்பமான கோடை காலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. அவர் அக்கல்லினை ஓர் பள்ளத்தாக்கில் வைத்தார். உடனே பள்ளத்தாக்கு மிகக் குளிராக வந்தது. இவ்வாறு இப்பள்ளத்தாக்கு குளிர் பள்ளத்தாக்கு என அழைக்கப்பட்டது. ஒரு மடாலயம் கட்டப்பட்டது. இது குளிர்ச்சியான மடாலயம் என அழைக்கப்பட்டது. அவற்றிலிருந்து ஊதாய் மலை கூட குளிராக்கப்பட்ட மடாலயம் என அழைக்கப்படுகின்றது.

ஊதாய் மலையானது, இப்போது சீனாவின் ஒரு தேசிய மட்ட சுற்றுலாத் தலமாக இருக்கின்றது. இது ஒரு பிரபலமான கோடை வாசஸ்தலமாக சாந்தமான காலநிலையுடன் கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் காணப்படுகின்றது. வருடம் முழுவதிலும் சந்தோஷமான நாட்களாக காணப்படுகிறது. இப்போது மலையின்மீது இன்று கூட பழுதடையாமல் 42 புராதன ஆலயங்கள் காணப்படுகின்றன. நான்சான் ஆலயம் மற்றும் போகுவாங் ஆலயம் என்பன மிகப் பழமையானவை ஆகும். 1200 வருடங்கள் வரலாற்றுடன் இருக்கின்ற தாங் வம்ச காலத்தில் கட்டப்பட்டது. இவை சீனாவில் மரத்தால் அமைக்கப்பட்ட ஆரம்பகால ஆலயங்களாக நம்பப்படுகின்றன.