யாங் ஹெ கொங் லாமா ஆலயம்
中国国际广播电台

யாங் ஹெ கொங் லாமா ஆலயம் பெய்சிங்கின் வட கிழக்கு பகுதியில் அமைந்திருக்கின்றது. இது. 660000 சதுர மீட்டர் பரப்பைக் கொண்டிருக்கின்றது. திபேத்துக்கு வெளியே மிகவும் புகழ்பெற்ற திபெத்திய பௌத்த ஆலயமாக இது திகழ்கிறது. பெய்சிங்கில், ஹான், மஞ்சூ, மொங்கோலிய மற்றும் திபெத் கலாச்சாரங்களின் கட்டிடக் கலைப் பண்புகளை இணைந்துக் கட்டப்பட்ட ஒரே ஒரு கட்டிடம் இதுவாகும்.

இது பெய்சிங்கில் உள்ள மஞ்சள் புத்த மத பிரிவின் மிகப் பெரிய ஆலயமாகும். இது நன்றாக பாதுகாக்கப்பட்டது. இது 1694இல் கட்டப்பட்டது. இது காங்சி (Kang Xi) சக்கரவர்த்தியின் நான்காவது மகளின் இல்லமாக இருந்தது. இன் ஜென் (Yin Zhen) சக்கரவர்த்தியாக ஆட்சிக்கு வநத பின்னர், இது தலைநகரத்துக்கு அப்பால் சிறிது காலம் தங்கி இருப்பதற்கான ஒரு அரச மாளிகையாகவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர், அவர் இம்மாளிகையின் ஒரு பகுதியை மொங்கோலிய லாமா மற்றும் சாங்சியா குறுக்குறு போன்றவற்றின் உருவமைப்பின் இருப்பிடமாக வடிவமைத்தார். இந்த மாளிகை மஞ்சள் புத்தமத பிரிவின் ஒரு ஆலயமாக மாறியது.

மஞ்சள் புத்தமதப் பிரிவு திபெத்திய பௌத்தத்தின் ஒரு கிளையாகும். இதை பின்பற்றுபவர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிவதன் காரணமாக இப்பெயரை பெற்றது. இந்த மடாலயம் மூன்று பொக்கிஷங்களுக்காக கீர்த்தி பெற்று விளங்குகின்றது.

முதலாவது, பஃலூன் மண்டபத்திற்கு பின்னால் மரத்தால் செதுக்கப்பட்ட ஐந்நூறு சிற்ப மலை ஆகும். இது 4 மீட்டர் உயரமும் 3 மீட்டர் அகலமும் கொண்டது. மரங்கள், புத்தமத ஆலயங்கள், அரங்குகள், குகைகள், பாலங்கள் ஆகியன செதுக்கப்பட்டுள்ளன. ஐந்நூறு சிற்பங்களும் மிக தெளிவாக தெரிவதோடு, ஒவ்வொன்றும் ஒரே மாதிரி காணப்படுகின்றன. தூரதிர்ஷ்டவசமாக, பல யுத்தங்களினால், இப்போது 449 சிற்பங்கள் மட்டுமே உள்ளன.

இரண்டாவது, எல்லையற்ற மகிழ்ச்சி என்ற மண்டபத்தில் இருக்கின்ற பிரமாண்டமான மைத்ரேயா வெண்சிலை. இந்த சிலை 26மீட்டர் உயரமும் 100 டன் எடையும் கொண்டதாகும். இது ஒரே முழுமையான சந்தன மரத் துண்டால் செதுக்கப்பட்டதாகும். உலகத்திலேயே மரத்தால் செதுக்கப்பட்ட மிகப் பெரிய புத்தர் சிலை இதுவாகும். சிலையின் 8 மீட்டர் பகுதி நிலத்துக்ககுள் புதைக்கப்பட்டிருக்கின்றது. இது 200 ஆண்டுகள் பழமையானதாக இருந்த போதிலும் இப்போதும் பழுதடையாமல் முழுமையாக இருக்கிறது.

மூன்றாவது, ஜாவ்போ (Zhaofo) கோபுரத்தில் உள்ள (nanmu) நன்மு மரத்தில் செதுக்கப்பட்ட பௌத்த கோவில். இது இரம்டு தூண்களால் தாங்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் மீதும் 99 டிராகன்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள புத்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும். சூரியன் மறைகின்ற போது, மங்களான சூரிய கதிர்கள் சிலையின் தலையின் பின்புறத்தில் உள்ள வெண்கல கண்ணாடியில் பட்டு பிரதிபலிக்கின்றன. அப்போது, மண்டபம் முழுவதும் தங்கம் போல் ஜொலிக்கிறது.

யொங் ஹெ கொள் லாமா கோயிலில் உள்ள கட்டிடங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய சில தனித்தன்மைகளைக் கொண்டிகுக்கிற்றந. பாஃலுன் மண்டபமானது ஹான் மற்றும் திபெத் கட்டிடக் கலைகள் இணைந்த பாணியைக் கொண்டிருக்கின்றது. இது ஐந்து பளப்பளபான முலாம்பூசப்பட்ட முகடுகளைக் கொண்டிருக்கின்றன. திபெத் பாணியை ஒத்தவை. மண்டபத்தின் உள்ளே கல் வெட்டுக்களில் சீனம், மஞ்சூரிய, மங்கோலிய மற்றும் திபெத்திய மொழிகளில் லமானிஸத்தின் தோற்றத்தை விபரிக்கப்படுகிறது. அதோடு சமயம் பற்றிய மஞ்சு அரசின் கொள்கையையும் விபரிக்கின்றது.

தற்போது, யொங் ஹெ கொங் லாமா கோயில் பௌத்த தலமாக மட்டுமல்ல, சீனர்கள், ஹான் இனத்தவர்கள், மஞ்சூரியர்கள், மொங்கோலியர்கள் மற்றும் திபெத் இனத்தவர்களின் பண்பாட்டுக் கருவூலமாகவும் திகழ்கிறது.