இங்சியன் மர பகோடா (PAGODA)
中国国际广播电台


இது வட சீனாவிலுள்ள ஷான்சி மாநிலத்தின் இங்சியன் மாவட்டத்தில் உள்ள மர பௌத்த விகாரை ஆகும். இது 1056இல் கட்டப்பட்டது. இது சீனாவிலுள்ள மிகப் பெரிய பழமையான பௌத்த விகாரை ஆகும். இது ஏறத்தாழ 70 மீட்டர் உயரத்திலும் 30 மீட்டர் விட்டத்திலும் 300 டன்களுக்கு மேலான எடையையும் கொண்டிருக்கின்றது. இது குறைந்தது 3500 கனமீட்டர் மரப் பலகையினால் எண்கோண வடிவில் கட்டப்பட்டது. இது ஒன்பது தளங்களைக் கொண்டது. இவற்றுள் நான்கு வெளியிலிருந்து பார்க்க முடியாதவாறு உள்ளமைவாகக் கட்டப்பட்டுள்ளது. இது ஆணிகளைப் பயன்படுத்தாமல் கட்டப்பட்டு, கட்டிடம் முழுவதுமே உறுதியானதாகவும் கம்பீரமாகவும் நளினமாகவும் காட்சி தருகிறது.

இது முற்றிலும் மரப் பலகைகள் கொண்டே கட்டப்பட்ட போதிலும் இவ்விகாரையானது 900 ஆண்டுகளுக்கு மேலாக, காற்றையும் புயலையும் சந்தித்ததோடு, எண்ணற்ற வலுவான நில நடுக்கங்களுக்கும் பேரிடர்களுக்கும்(wars) தாக்குப் பிடித்து நின்றுள்ளது. இவ்விகாரை கட்டப்பட்டு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் 6.5 றிட்சர் அளவில் மிக பலமான ஓர் நலநடுக்கம் ஏற்பட்டது. இதை சுற்றியிருந்த எல்லா கட்டிடங்களும் இடிந்தன. ஆனால், விகாரையின் தாழ்வாரத்தில் இருந்த சில ஓடுகளே சேதமடைந்தன. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இராணுவத் தலைவர்களுக்கு இடையிலாந புத்த காலத்தில் இவ்விகாரை ஏறத்தாழ 200 குண்டுகளால் தாக்கப்பட்டது. ஆனாலும் இது பழுதடையாமல் அப்படியே இருக்கின்றது.

இவை அனைத்துக்கும் இதனுடைய புதுமையான கட்டி அமைப்பு காரணம். விகாரையினுடைய பல தள அமைப்பானது, நவீன கட்டிடங்களில் இருப்பது போன்ற உறுதிப்பாட்டை கொடுத்தது. இதன் மரத்தன்மை மிகவும் மிருதுவானது. வெளியிலிருந்து வரும் அமுகத்தால், மிக இலகுவில் முறுக்குப்படாதபடி உள்ளது. பல அடுக்குகள் கூட விகாரையை பலப்படுத்துகின்றன.

சீனாவில் பல மர விகாரைகள் மின்னல் தாக்கி எரிந்தன. 14 மீட்டர் உயரமான இரும்பு அலவ்காரம் விகாரையின் மேல் பகுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இது நவீன இடிதாங்கி போல செயல்படுகின்றது. இதனால், மர விகாரை இடி மின்னலால் சேதமடையவில்லை.

இந்த ஆலயம் சீனாவின் கட்டிடக் கலைக்கும் உள் அலங்கார வேலைப்பாடுகளுக்கும் மற்றும் கலையமைப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.