சியன்லிங்கும் எழுத்துக்கள் இல்லாத கல்லறையும்
中国国际广播电台


வடமேற்குச் சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் சி ஆனிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் லியான் ஷன் மலையில் சியான்லிங் இருக்கிறது. இது, ஒன்று மட்டுமே சீனாவில் இருவேறுவம் சங்களைச் சேர்ந்த இரம்டு மன்னர்களின் கல்லறையாக இருக்கிறது. தாங் வமிசப் பேரரசர் காவோசோங் மற்றும் பெரிய சூ வமிசத்தைச் சேர்ந்த பேரரசி வூ செதியனின் கல்லறை அது. சீனாவின் சரித்திரத்தில் வூ செதியன் மட்டுமே ஒரே பேரரசியாக இருந்தாள். அவளின் சமாதிக்கு முன்னால் பிரமாண்டமான கல்லறைக்கல் ஒன்று இருக்கிறது. அதில் எதுவும் எழுதப்பட வில்லை. அவளின் பொறிக்கப்பட வேண்டிய வரலாறு ஒன்றும் நால்லப்படவில்லை. ஒரு பெயர் கூட இல்லை.

624ல் பிறந்த வூ செதியன் காசொங்கின் தந்தையாகிய சக்கரவர்த்தி தைய் சுங்கின் முதல் வைப்பாட்டியாக இருந்தாள். அவள் அரசியலில் நுழைவதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே தன் தைரியத்தையும் உறுதியான குணத்தையும் வெளிப்படுத்தினாள். தைய் சுங் ஒரு குதிரை வைத்திருந்தார். அதை ஒருவரும் அடக்க முடியாது. சக்கரவர்த்தி தனக்கு ஒரு கத்தியும் இரும்புச் சவுக்கும் தந்தால் தன்னால் அடக்க முடியும் என்றாள் வூ. அவள் முதலில் அதை சுவுக்கால் அடிப்பாளாம். அப்படியிருந்தும் அது அவளுக்கு அடங்காவிட்டால் அவள் கத்தியை அதன் தொண்டையில் பாய்ச்சுவாலாம். இது தாய் சங்கை வெறுப்படையச்செய்தது. ஆனால் பின்னாளில் காசெங் என்று அழைக்கப்பட்ட அவருடைய மகன் லிசி, ரகசியமாக அவள் மீது காதல் வைத்திருந்தான்.

தாய் சங் இறந்த பிறகு, லி சி சிம்மாசனமேறி வூசெதியன் தனது அபிமான வைப்பாட்டியாகுனான். பிறகு அவள் சக்கரவர்த்தினியாக வந்தாள். கதையின் படி வூ செதியன் காசெங்கின் முன்னாள் சக்கரவர்த்தினியை சமாளித்து, அவளுக்கு அப்போது பிறந்த பெண் குழந்தை மூலம், கழுத்தை நெறித்து விட்டு, அதை முன்னாள் பேரரசி செய்ததாக சொல்லி வெளியேற்றினாள். பெண்கள் அரசியலில் சேர்வது வெறுக்கப்பட்டாலும் வூ படிப்படியாக நீதி நிர்வாக அதிகாரங்களை காசெங்கிடமிருந்து எடுத்துக் கொண்டாள். அத்துடன் அரசியல் கடமைகளிலும் பங்கெடுக்கத் தொடங்கினாள். அவள் தன் இரு மகன்களிடமிருந்து அரசைப் பறித்து, இறுதியாக ஒரு வமிசத்தை உருவாக்கி, பெரிய சூ வமிசத்திற்கு தாமே சீனாவின் பேரரசி என 67வது வயதில் பிரகடனம் செய்தாள்.

அவள் தன் எதிரிகளை உளவறியும் பொருட்டு ரகசியகாவல் படை ஒன்றை உருவாக்கியதுடன் அவள் வழியில் நின்றவர்களை கொடூரமாக சிருறெயிரிட்டாள் அல்லது கொண்றாள்.

தாங் வமிசத்தில் முன்னாள் ராணுவ அதிகாரியான சு ஜிங்யேக்கு கிளர்ச்சி செய்தார். அவர் லுவின் வங் என்ற அந்தக்கால பெரிய கவிஞரைக் கொண்டு வூ செதியனின் கொடுமைகளை விபரமாக கட்டுரை ஒன்று எழுதச் செய்தார். வூசெதியன், புன்னகையுடன் அக்கட்டுரையை வாசித்ததுடன் எழுதியவரின் எழுத்தாற்றலை பொருந்தன்மையாக அங்கீகரித்து கருணை காட்டினாள். இத்தகைய திறமைசாலியை புறக்கணித்தது, தனது தலைமை அமைச்சரின் தவறு என்றாள். அவள் ஆயினும் கலகக் காரர்களை ஒருவருமில்லாமல் அடக்கியதோடு கலகக்காரர்களை கொன்றாள்.

இருப்பினும், அவள் சீனாவை ஆண்டகாலம் மிகவும் அமைதியானதாகவும் விவசாயத்தை விரிவுபடுத்திய காலமுமாகவும் இருந்தது.

ஈவிரக்கம் காட்டாமல் அவள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும் அவளுடைய அட்சி நன்மை தருவதாக இருந்தது. அவள் திறமைசாலிகளைக் கண்டு ஆட்சியை புரிந்ததேமிடு தனக்கு நம்பிக்கை யானவர்களை மிக நன்றாக நடத்தினாள். வூ சிறுகுடியானவர்களை கவனித்துக் கொண்டதுடன், துன்புறுத்தும் வரிகளைக் குறைத்து விவசாய உற்பத்தியைப் பெருக்கியதுடன் பொதுப் பணிகளையும் பலப்படுத்தினாள். அவள் 82 வயதில் இறந்த போது சியான்லிங்கில் காசொங்கின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டாள். புதிரான வகையில் அவளின் சமாதிக்கு மேல் ஒரு அழகான வார்த்தைகள் பொறிக்கப்படாத சமாதிக்கல் உள்ளது. அவளது கல்லறை பற்றி விதமாகப் பேசப்படுகின்றன.

வூ, தனது சாதனைகளையும் நாட்டிற்கான பங்களிப்பினையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை என்று நாட்ட விரும்புகிறதாக சிலர் கூறிகின்றனர். வேறு சிலரோ அவள் வெட்கப்படும் வகையில் ஆண்கள் ஆட்சி மரபுமுறையை தூக்கியெறிந்து விட்டாள் என்கின்றனர். வேறு சிலரோ, அவள் தனக்கு என்ன பட்டம் சூட்டுவது காசங்கின் பேரரசி என்றா அல்லது சூ மாகாண வூ செதியன் என்றா என்று தெரியாமல் திண்டாடியராக கூறுகின்றனர்.

கடைசியாக, தனது வாழ்க்கையையும் செயல்களையும் பற்றி மக்கள் பலவிதமாக விளக்கங்களை கொண்டிருப்பார்கள் என அவளுக்குத் தெரியும் என்கிறனர். அந்த வகையில் வெறுமையான கல்லறை, சொல்லாத கதையைப் பிரதிபலிக்கின்றது.