கஞ்சியைப் பிரித்து ஊறுகாயுடன் சாப்படுதல்
中国国际广播电台

பன் ஜொங்யன் ஒரு புகழ்பெற்ற அரசியலாளராகவும் வட சொங் வமிசத்தின் போர் தந்திர கவிஞராகவும் கல்வியாளராகவும் மற்றும் பிரபலமான கட்டுரையாளராகவும் இருந்தார். யுயே யங் கோபுரத்தில் அவருடைய உழைப்பு பண்பைச் சித்திரிக்கும் இன்னல்களை ஏற்க முந்தி நிற்கணும் சுகத்தை அனுபவிக்க பிந்தி நிற்கணும் என்ற வரிகள் பொறிக்கப்பட்டு, அவை பிற்காலத்தில் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது.

பன் ஜொங்யன் கி. பி. 989இல் இன்று ஜியாங்சு என அழைக்கப்படுகின்ற மாநிலத்தில் பிறந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்த போது அவரின் தந்தை இறந்து விட்டார். இவரை வறுமை வாட்டியது. இருப்பினும் ஊக்கத்துடன் படித்தார். அவர் மிக இளவயதாக இருந்த போது இன்னொரு நகரத்துக்குப் படிப்பதற்காகச் சென்றார். அவருக்கு வறுமையின் காரணமாக தினமும் கஞ்சியே கிடைத்தது. கஞ்சி ஆறிய பிறகு அதை மூன்று பகுதிகளாக பிரித்து மூன்று வேளை சாப்பாடு போல ஊறுகாயுடன் சாப்பிட்டார்.

ஒரு நாள் அவரைப் பார்க்க வந்த ஒரு நண்பர் இதைக் கண்டார். கடினமாக உழைக்கும் தமது நண்பன் மீது இரக்கம் கொண்டார். அவர் நண்பனுக்கு சிறிது பணம் கொடுத்தார். ஆனால் அதை ஏற்க உறுதியாக மறுத்து விட்டார். இரண்டாவது நாள் நண்பர் ஒரு சுவையான உணவினை அனுப்பினார். பன் ஜொங்யான் ஒன்றும் பேசாமல் அதை ஏற்றார்.

சில நாட்களுக்கு பின்னர் அவருடைய நண்பர் மீண்டும் அவரைப் பார்க்க வந்தார். தாம் அனுப்பிய மீன், கோழி மற்றும் ஏனைய உணவு இப்பவும் அப்படியே இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அவை நாற்றம் அடித்தன. நண்பர் மணம் நொந்தார். கோபப்படாதீர்கள். இவற்றை நான் சாப்பிட விரும்பில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் சாப்பிடும் துணிச்சல் இல்லை. நான் இவற்றை சாப்பிட்டால் நான் குடிக்கின்ற கஞ்சியை மீண்டும் மறந்து விடுவேனோ என பயமாக இருக்கிறது என பான் ஜொங்யான் விவரித்தார்.

மக்கள் அவரை பார்த்து, நீர் வளர்ந்து பெரியவராகி என்னவாக வர விரும்புகிறார்? என கேட்ட போது, அவர் மக்களின் நோய்களை குணப்படுத்துகின்ற ஒரு மருத்துவராக அல்லது அரசாங்கத்தை சிறப்பாக இயங்க உதவும் ஒரு தலைமை அமைச்சராக வர விரும்புகிறேன் என ஜொங்யான் பதிலளித்தார். பின்னர் ஜொங்யான் சொங் வம்சத்திற்கு தலைமை அமைச்சராக வந்தார். அவருடைய நீண்ட அரசியல் வாழ்க்கையிலும் ஆவலுடையவனாக இருந்தார். அத்துடன் மக்களின் இன்பத்திலும் துன்பத்திலும் அக்கறை காட்டினார்.

அவர் அரசாங்கத்தில் செய்தது போன்று கல்வியில் இத்திருத்தங்களை மேற்கொள்ள முயற்சித்தார். அரசாங்கப் பள்ளிகளை உருவாக்கினார். மேலும் அவர் பல திறமைமிக்க அறிவாளிகள் முன்னுக்கு வருவதற்கு உதவி செய்தார்.

பான் ஜொங்யன் இலக்கியங்களை சீர்திருத்துவதற்கும் முற்சித்தார். இலக்கியங்கள் மக்களின் உண்மையான வாழ்க்கையை பிரதிபலிக்க வேண்டும் என விரும்பினார். முற்காலத் தலைமுறை இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்திய அழகான அதே நேரம் வெறுமையான மொழி நடையை எதிர்த்தார்.