நீரை அடக்கிய ஸிமென்பெள
中国国际广播电台

ஸிமென்பெள, ஒரு நேர்மையன அதிகாரியாக இருந்தார். அவர், கி.மு.5ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அவர் ஒரு முறை யெ மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர், அங்கு சென்றதும் நதிதெய்வத்தின் திருமணம் பற்றித்தான முதலில் கேள்விப்பட்டார்.

யெ மாவட்டம் அடிக்கடி வெள்ளம் பெருக்கு ஏற்படும் மஞ்சள் ஆற்றின் கரையில் இருந்தது. மஞ்சள் ஆற்றில் ஓரு தெய்வம் வசித்ததாகவும் அதற்கு வருடத்துக்கு ஒரு மனவி தேவை என்றும் உள்ளூள் மக்களிடையே ஒரு கதை பரவியிருந்தது.

இளம் பெண்ணை பலி கொடுக்காவிடில் அது கோபம் கொண்டு நாட்டை வெள்ளித்தில் மூழ்கடிக்கும் எனவும் கருதினர். உள்ளூர் அலுவலர்கள் மந்திவாதிகளுடன் சேர்ந்து வதந்தியைப் பரப்பினார்கள். ஏனென்றால் இவர்கள் நிறையவரிவிதித்து தாங்கள் பணம் சேர்க்கலாம் என்று நினைத்தார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.

வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மந்திரவாதிகள் அழகான கன்னிப்பெண் உள்ள ஏழைக்குடும்பங்களுக்குச் செல்வார்கள். ஆற்றுத்தெய்வம் அந்த இளம் பெண்ணை அவனுடைய புதிய மனைவியாக கொண்டிருக்க விரும்புவதாக கூறுவார்கள். பின்னர், உள்ளூர் அரசாங்கம் அப்பெண்ணை அழைத்துச் சென்று, அந்நாள் வரும் போது, அவளுக்கு ஆடை அணிந்து விழாவை நடத்த, அவளை ஆற்றுக்குள் மூழ்கடிப்பார்கள்.

இறுதியாக அந்த வருடத்தில் அந்நாள் வந்தது. ஸிமென்பெள தமது ஆட்களுடன் ஆற்றங்கரைக்கு சென்று விழாவுக்காக காத்திருத்தார். மிக விரைவில் நாட்டில் உள்ள பணக்காரர்கள், உள்ளூர் அலுவலர்கள், மந்திரவாதிகள், மற்றும் பெண்ணின் குடும்பம் ஆகிய எல்லோரும் அவ்விடத்தை அடைந்தனர்.

ஸிமென்பெள, மணப்பெண்ணை தமது முன்னால் வர வழைத்து, இந்தப் பெண் தெய்வத்துக்கு ஏற்ற போதிய அழகில் இருக்க வில்லை என அவர் சொன்னார். அவர், முதலில் ஆற்றுத்தெய்வத்துக்கு இதை விட ஒரு அழகான பெண்ணை அனுப்புவதாக செய்தி அனுப்பும் படி மந்திரவாதிக்கு கட்டளையிட்டார். அவர் பின்பு, மந்திரவாதியை ஆற்றுக்குள் வீசும் படி கட்டளை இட்டார். பின்னர், ஒரு கனப்பொழுதில் அவருடன் இருந்த சகாக்கள் மந்திரவாதியின் மூன்று சீடர்களை ஆற்றுக்குள் வீசச் செய்தார். அவர்களுடைய குருவை மிகவிரைவாக வரும் பிட கேட்கும் பிட அச்சீடர்களுக்கு சொன்னார்கள். இன்னும் சில வினாடிகளுக்குப் பின்னர், அவர், பொறுமையை இழந்து பணக்காரர்களையும் உள்நாட்டு அலுவலர்களையும் பார்த்து அவர்களில் ஒருவரை ஆற்றுக்குள் அனுப்பலாமா என்று யோசிப்பதாக கூறினார். அவர்கள் எல்லோரும் பய்ததில் மண்டியிட்டனர்.

பின்னர், ஸிமென்பெள, யாராவது மீண்டும் இவ்வாறான அபத்தமான செயல்களை செய்வதற்கும், மக்களின் பணத்தினை ஏமாற்றுவதற்கும் ஏற்பாடு செய்வரானால், தண்டனையாக அவர்கள் இந்த ஆற்றுக்குள் தூக்கி நீசப்படுவார்கள் எனக் கூறினார். இதன் மூலம், தெய்வத்துக்கு திருமணம் செய்வது முடிவுக்கு வந்தது. நாடு புதுப் பெரலிவு பெற்றது.