வைக்கோல் படகுகள் அம்புகளைப் பெற்றன
中国国际广播电台

இக்கதை, மூன்று தேசங்களைச் சேர்ந்தது. கி.பி முதலாம் நூற்றாண்டில் சீனா வெய், சூ மற்றும் ஊ என மூன்று பலமுள்ள அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவை ஒவ்வொன்றும் முறையே வடசீனா, தென்மேற்குச்சீனா மற்றும் தென்சீனா ஆகிய பகுதிகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. ஒரு வருடம், வெய் அரசானது, ஊ அரசைத் தாக்கப்புறப்பட்டு யாங்ச்சி ஆற்றின் வடக்கரையை அடைந்தது. ஊ அரசின் இராணுவம் அடுத்த கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.

வெய் ராணுவத்தை அம்புகளால் தடுப்பது என ஊ அரசின் தலைமைத் தளபதியான ஜோ யு தீர்மானித்தார். அவருக்கு 100000 அம்புகள் தேவைப்பட்டன. ஒரு குறுகிய காலத்தில் இவ்வளவு நிறைய அம்புகளை எப்படி தயாரிப்பது என்பது, ஒரு பிரச்சினையாக இருந்தது.

அப்போது, சூ அரசின் பிறதம் மந்திரியான ஜூ ஹெ லியாங் ஒரு பயணமாக வந்தார். அவர் மூன்று நாட்களில் தன்னால் அம்புகளை எளிதில் பெற்றுத்தர முடியும் என கூறினார். இக்கட்டளையை பூர்த்தி செய்யாவிடில் அவர் தண்டனையை ஏற்பதாக தாமாகவே உறுதியளித்துக் கையொப்பமிட்டார். அவரால் மூன்று நாட்களுக்குள் அவ்வளவு ஏராளமான அம்புகளை உற்பத்தி செய்ய முடியாது என்பதை அவர் அறிவார். ஆனால், ஊ அரசவையில் அதிகாரியாக இருந்த தனது சிறந்த நண்பரான லு சு வை தமக்கு 20 படகுகளை கொடுத்து உதவும் படி கேட்டார். இப்படகுகள் ஒவ்வொன்றும் கைக்கோலால் செய்யப்பட்ட பறவை விரட்டும் மனிதப் பொம்மைகளாலும் முப்பது ராணுவ வீரர்களாலும் நிரப்பப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர் லு சு விடம் என்ன நடக்கிறது என்பதை எவரு்ககும் கூற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

ஒரு நாள் கடந்து இரண்டாம் நாள் வந்தது. மூன்றாம் நாள் இரவு, லு சுவை படகுச் சவாரிக்காக ஜூ ஹெ லியாங் அழைத்தார். இருப்பது படகுகளும் பலமான கயிறுகளினால் ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. ஜூ ஹெ லியாங்கின் படகுத்தொகுதி செள செள முகாமை நோக்கிச் சென்றது. அடர்த்தியான மூடுபனி ஆற்றின் மேற்பரப்பில் பரந்திருந்தது. மக்கள் ஆற்றில் வேறு ஒன்றையும் பார்ப்பது மிக கடினமாக இருந்தது. ஜூ ஹெ லியாங் படகுத்தொகுதி செள செள முகாமை விடியற்காலைக்கு முன்னர் நெடுங்கிய போது ஜூ ஹெ லியாங் யுத்தத்துக்கான ஒலிகளை எழுப்பி ஓர் யுத்தம் போன்ற தோற்றத்தை செய்யும் படி தனது படை வீரர்களுக்குக் கட்டளையிட்டார். ஜூ ஹெ லியாங்கும் லுசும் ஒரு படகின் உட்பகுதியில் உட்கார்ந்து மதுக் குடித்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தனர்.

செளமுகாம் யுத்த ஒலியைக் கேட்டவுடன் அவர்கள் இதை ஜோ யு முகாமின் திடீர்த் தாக்குதல் என தவறாக எடுத்துக்கொண்டனர். அவர்கள் ஆற்றில் ஒருவரும் இல்லாததைப் பார்த்தனர். அவர்கள் 10000 வில்லீரர்களை ஒன்று திரட்டி யுத்த ஒலி வந்த திசையை நோக்கி அம்புகளைச் செலுத்தும் படி வீரர்களுக்கு கட்டளையிட்டனர். முழு அம்புகளும் முன்புறத்தில் இருந்த வைக்கோல் பொம்மைகளைத் தாக்கி வீழத்தின. பின்னர், ஜூ ஹெ லியாங் தனது படகுத்தொகுதியை திரும்பி மறுபக்கத்தில் இருந்த வைக்கோல் பொம்மைகளை வெளிக்காட்டினார். இந்தப் பக்கத்தில் இருத்த பொம்மைகளும் முழு அம்புகளால் வீழ்த்தப்ப்டட போது இரவு வந்தது. ஜூ ஹெ லியாங் தனது ராணுவ வீரர்களுக்கு அவர்களுடைய படகுத் துறை தனத்துக்குத் திரும்பும் படி கட்டளையிட்டார். அவர்கள் முகாமுக்கு திரும்பிய பின்னர் வைக்கோல் பொம்மைகளிடமிருந்து 100000க்கு மேற்பட்ட அம்புகளை எசுத்தார்கள்.