ஜிங்சிங் போர்
中国国际广播电台

சீனாவின் முதலாவது ச்சின் பேரரசு கி.மு. 206இல் உழவர் கிளர்ச்சியால் வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இரண்டு பிரதான கலகப் படைகளான பியு பாங்கினுடைய ஹன் இராணுவத்துக்கும், சியாங் யுவுடைய சூ ராணுவத்துக்கும் இடையில் அதிகார போட்டி ஏற்பட்டது. அவர்களுக்கு இடையிலான போர் ஐந்து வருடங்களாக நீடத்தது. அந்தக்காலத்தில் போர் மிகவும் புகழ்பெற்றது. அதில் லியு பாங்கின் தளபதி ஹான் சின், எண்ணிக்கையில் பெருந்தொகையான சியாங் யுவின் கீழுள்ள ஜாஓ இராட்சியத்தின் ராணுவத்தை ஜிங்சிங் இனும் இடத்தில் தோற்கடித்தான். போர் நிகழ்ந்த இடம் தற்காலத்தில் ஹேபெய் மாநிலத்தில் அமைந்துள்ளது.

கி.மு. 204இல் ஹான் சின் அவருடைய 10,000 வீரர்களும் ஜாஓவை தாக்குவதற்கு நீண்ட தொலைவு அணிவகுத்து சென்றன. ஜாஓவின் கட்டளைத் தளபதியான சென் யு, ஜிங்சிங்கில் இரண்டு இலட்சம் வீரர்களைக் கொண்ட ஒரு படையினை நிறுத்தினார். ஹான் சின் மேலும் தொடர்ந்து முன்னேற வேண்டுமானால், அவர் ஒரு குறுகிய ஆபத்து நிறைந்த படை அணியை எதிர்கொள்ள வேண்டியுருந்தது.

ஜாஓவின் ராணுவம் தாக்குப்பிடித்து நிற்க வசதியான வெற்றி கொள்ள முடியாத ஒரு நிலையில் இருந்தது. அவர்கள் களைப்படைந்த ஹான் சினின் ராணுவத்தை கோற்கடிப்பதற்கு காத்துக்கொண்டு இருந்தார்கள்.

எப்படியாயினும் சென் யு தனது எதிரியுடன் நேருக்கு நேர் சண்டையிடுவதை மட்டுமே விரும்பினான். அவன் ஹான் சின்னுடைன் நேருக்கு நேர் சண்டையிடும் போது பின்னால் இருந்து ஹான் சின் படைக்கு உணவு கிடைப்பதை துண்டிக்கும் படி ராணுவ ஆலோசகர்கன் கூறிய சரியான அறிவுரைகளை நிராகரித்தான்.

ஜிங்சிங்கின் அமைப்பையும், அதே போன்று சென் யுவின் தனிப்பட்ட பலவீனங்களையும் ஹாங் சின் கவனமாக அறிந்து கொண்டான். பின்னர், எதிரியின் அணுகளுக்கு மிக அருகில் முகாமிடும் படி தனது ராணுவத்துக்குக் கட்டளையிட்டான். அவர் 2000 படை வீரர்களைத் தேர்ந்துடுத்து, ஒவ்வொருவரும் ஹன் ராணுவத்தின் கொடியைக் கொடுத்தான். அவர்கள் சென் யுவின் ராணுவத்தின் பின்புறப் பகுதிக்கு ஊடுருவிச் சென்று, இருளஇல் ஒளிந்து கொள்ள செய்தான். இரண்டாம் நாள் தனது மீதியுள்ள வீரர்களை ஜாஓவின் ராணுவத்தின் முன்புறமாக சென்று தாக்கும் படி கட்டளையிட்டான். சென் யு தனது ராணுவம் முழுவதையும் திரட்டி போரிட்டான். அதேநேரத்தில் ஜாஓ ராமுவத்தளத்துக்குப் பின்னர் மறைந்திருந்த ஹன் ராணுவவீரர்கள், படைத்தளத்தைக் கைப்பற்றி கொடியை மாற்றினார்கள். தங்களுடைய தளம் கைப்பற்றப்பட்டதை உடனடியாகக் கண்ட ஜாஓவின் ராணுவம், என்ன செய்வது எனத் தெரியாமல் சண்டை செய்வதற்கான துணிச்சலை இழந்தது. ஹான் சின்னின் ராணுவ வீரர்கள் இப்போது மேலும் துணிச்சல் பெற்று, தங்களை விட 20 மடங்கு பெரிய அளவான ராணுவத்தைத் தோற்கடித்தனர். சென் யு சிறைடியப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டான்.

இவ்வாறு இந்தப் போரானது சீனா முழுவதிலும் உலகம் முழுவதும் ராணுவ வரலாற்றில் மிகப் பிரபலமானது.