ப்பெய் ஸ்சுயி நதி போர்
中国国际广播电台

நான்காவது நூற்றாண்டு காலத்தில் சீனா இரண்டு பேரரசுகளாக பிரிக்கப்பட்டிருந்ததது. ஒன்று வடக்கிலும், மற்றையது தெற்கிலும் இருந்தன. கிழக்கு ஜின், யாஞ்சி ஆற்றைச் சுற்றியுள்ள பிரதேசத்தைக் கட்டுப்படுத்தியது. முன்னாள் ச்சின் வடக்கில் மட்சள் ஆற்றைச் சுற்றியுள்ள பிரதேசத்தைக் கட்டுப்படுத்தியது.

383இல், இந்த இரண்டு பேரரசுகளும் ப்பெய் சுயி நதி போரில் சண்டையிட்டன. இந்நதியில் எண்ணிக்கையில் குறைந்த கிழக்கு ஜின்னின் கீழ்நிலை ராணுவத்தால் முன்னாள் ச்சினின் ப்பு ஜியன் இறுதியாக தோற்கடிக்கப்பட்டார். சீனாவின் வரலாற்றில் பெரிய உள்நாட்டு போருக்குள் வீழ்ந்து கொண்டிருந்த முன்னாள் ச்சினஅ பேரரசினால் இந்த போபினுடைய விளைவு குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இந்தப் போரின் இறுதியான அழிவினாலும் மற்றும் கிழக்கு ஜின், ஏனைய யாஞ்சி ஆற்றின் தெற்கு அரசுகளினஅ உயிர்வாழ்வை உறுதிப்படுத்தியதினாலும், பெரிய குறிப்பிடத்தக்க போர்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

350இல் தி இன பழங்குடியினரின் தலைமையில் இருந்த முன்னாள் ச்சின் தேசம் ஒரு தொடர் வெற்றிகளில் இருந்து விரைவாக எழுச்சியடைந்தது. பழங்குடியினரான ப்பு ஜியன் பிரமாண்டமான ஆற்றல் மற்றும் இலச்சியத்துடன் ஒரு பலம் மிக்க தலைவராக இருந்தார். 381ஆம் ஆண்டளவில் அவர் வட சீனாவை ஒருமைப்படுத்தினார். அவர் தென் சீனாவின் ஓர் ஆக்கிரமிப்புக்காக தயாராகிக் கொண்டிருந்தார். அவர் 8.7 இலட்சம் வீரர்கள் உள்ள ஒரு படைக்குத் தலைமை தாங்கி கிழக்கு ஜின்னின் தலைநகருக்கு அருகிலுள்ள லோ ஜியன் நதிக்குச் சென்றார். அவர் தனது ராணுவ வீரர்களினஅ குரிரைசாட்டைகளை ஒன்றாக ஆற்றுக்குள் வீசி எறிந்தால் ஆற்றில் ஓட்டம் உடனடியாக தடைப்படும் எனப் பெருமிதம் கொண்டார். அவர் தான் நினைத்ததைப் போன்ற ஓர் ராணுவத் தாக்குதலின் கீழ் கிழக்கு ஜின் விழும் என மிகவும் நம்பிக்கையில் இருந்தார்.

அந்த ஜின் பேரரசர் துரிதமாக பாதுகாப்புக்கு தயார்ப்படுத்தினார். ஹுவாய் நதியின் முன்னிலைப் பாதுகாப்பு சியே ஸ்சி, சியே சுவன் மற்றும் அவர்களுடைய 80 ஆயிரம் ராணுவ வீரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஜினஅ ராணுவத்தினுடைய கட்டுக்கோப்பை உயர்வாக அதிகரிக்கின்ற ஒரு சிறிய வெற்றியை லோ ஜியன் நதியில் ஒரு அதிசயப்படத்தக்க தாக்குதலினால் உருவாக்குவதற்கு நடத்தினார்கள். அடுத்து ஜின் ராணுவமானது இன்றைய மத்திய அன்குய் மாநிலத்தில் உள்ள ப்பெய் ஸ்சுயி நதியில் கிழக்குக் கரைக்கு முகாமிடுவதற்கு அணிவகுத்துச் சென்றது.

ப்பு ஜியன் தோல்வியால் திகைப்படைந்தார். அவர் ஆற்றுக்கு அப்பால் உள்ள ஜின்னுடைய ராணவத்தை வேவு பார்ப்பதற்கு ஒரு கூடாரத்தின் மீது ஏறினார். அவர் அங்கு நன்றாக விழிநடத்தப்பட்ட ராணுவத்தைக் கண்டார். அத்துடன் அவருடைய திகைப்பில் மலைக்கு அண்மையில் இருந்து செடிகளையும் மரங்களையும் கூட ஜின் ராணுவ வீரர்கள் என தவறாக புரிந்து கொண்டார்.

ஜின் ராணுவமானது நிலைமையை கவனமாக ஆராய்ந்த பின்னர் அவர்களுடைய சண்டைத் திட்டங்களைத் தயாரித்தது. அவர்கள் ப்பு ஜியன்னுக்கு அவரை ஜினஅ ராணுவம் ப்பெய் ஸ்சுயி நதியை கடக்க அனுமதிப்பதற்கு கொஞ்சம் பின்வாங்குமாறு கேட்டு கடிதம் அனுப்பினார். ஏனெனில் அவர்கள் ஒன்றாக சண்டையிடலாம். ஜின் ராணுவம் நதியை கடக்கும் போது ப்பு ஜியன் அவர்களுடைய ராணுவத்தைத் தோற்கடிக்கலாம் என நினைத்தார். எனவே அவர்கள் உடன்பட்டனர்.

எப்படியாயினும் ப்பு ஜியனுடைய ராணுவ வீரர்கள் வெவ்வேறுபட்ட இனங்களில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு வெளிப்படயான பிரச்சினையாக இருந்தது. பின் பக்கத்தில் உள்ள ராணுவ வீரர்கள் பின்வாங்கல் கட்டைளையைக் கேட்ட போது இது ஜின் ராணுவத்துக்கான ஒரு தோல்வி என அதை தவறாக எடுத்தனர். அவர்கள் தங்களுடைய உயிரைப் பாதுகாப்பதற்காக ஓடினர். அந்த ராணுவம் உடனடியாக கட்டுப்பாட்டை மீறியது. ஜின் ராணுவம் இந்தச் சந்தர்ப்பத்தை ஆற்றைக் கடப்பதற்கு எடுத்துக் கொண்டு ஒழுங்கற்ற ச்சின் ராணுவத்தை பின்பக்கத்தில் இருந்து துரத்தியடித்தது. ச்சின் ராணுவத்தினஅ ஒரு பெருந்தொகை ராணுவ வீரர்கள் தங்களுக்கு இடையே இறந்து முற்றாக அழிக்கப்பட்டனர். ப்பு ஜியன் கூட தன்னைதானே ஓர் அம்பினால் எய்து மடிந்தான். இந்த போர் ச்சினுடைய அடித்தளத்தையே உலுக்கியது. இந்து தேசம் இரண்டு வருடங்களுக்கு பின்னர் அழிந்தது.