சாங்பிங் போர்
中国国际广播电台

கி.மு. 4வது நூற்றாண்டில் இருந்த ஏழு தேசங்களில் ச்சின் மிகப் பலமுள்ள தேசமாகத் திகழ்ந்தது. கி.மு.260இல் நடந்த சாங்பிங் போர் ஒரு இறுதியான வெற்றியாகவும் இது ச்சின் சீனாவை ஒன்றிணைப்பதற்கு முன்னர் கடைசிப் போராகவும் இருந்தது.

ஹான், வெய், ஏன். ஜாஒ ஆகிய அனைத்தும் ச்சின்னுடைய அயல் தேசங்களாகும். கி.மு.268இல் ச்சின் தேசம் வெய் தேசத்தை தனக்குக் கூழ் கொண்டு வந்து மற்றைய ஹான் தேசத்தையும் கொண்டு வரத் திட்டமிட்டது. ஹானின் அரசன் ஷாங்தான் நகரத்தை ச்சின்னுக்கு பிரித்துக் கொடுத்து அமைதியைப் பெறவும், போரைத் தவிக்கவும் விரும்பினான். ஆனால், ஹாங்தான் நகரின் உள்ளூர் அதிகாரி ஹான்னின் ஒது தேச நாடான ஜாஒக்கு நகரத்தைக் கொடுத்தார்கள். ச்சின் பின்னர் ஷாங்தானைத் தாக்கினான். ஜாஒ இராணுவம் சாங்பிங்கிற்கு பின் வாங்கியது. ச்சின் படையெடுப்பை தடுத்து காப்பாற்ற ஜாஒ ராணுவத்தின் தளபதியாக ஜெனரல் லியாங் போ நியமிக்கப்பட்டான்.

ஜாஒ இராணுவம் சில ஆரம்பத் தோல்விகளால் கஷ்டப்பட்டது. லியாங் போ தனது தந்திரத்தை மாற்றினான். அவன் ஒரு பாதுகாப்பைப் போட்டு, ச்சின் இராணுவம்களை படையும் வரை காத்திருந்தான். அந்தத் தந்திரம் பயனைக் கொடுத்தது. ச்சின் இராணுவம் மேலும் நகர முடியாதவாறு சாங்பிங்கில் முடக்கப்பட்டது. லியாங் போ தாக்குதலுக்கான தனது சந்தர்பத்துக்குக் காத்து இருந்தார்.

எனினும், ச்சின் இராணுவமானது லியாங் போக்கும் ஜாஒவின் அரசனுக்கும் இடையில் கருத்து வேற்றுமையை ஏற்படுத்தும் தந்திரத்தைப் பயன்படுத்தியது. லியாங் போ சரணடையத் தயாராகிக் கொண்டு இருக்கிறான் என்றும், ஜாஒவில் இன்னொரு புகழ்பெற்றத தளபதியின் மகனான் ஜாஒ குஒக்கு மட்டந்தான் ச்சின் இராணுவம் பயப்படுகின்றது என்றும் வதந்தியைப் பரப்பியது.

ஜாஒ குஒ ஏறாளமான இராணுவப் புத்தகங்களைப் படித்து இருக்கின்றார். ஆனால், தனியாக எந்த ஒரு போரிலும் ஈடுபட்டதில்லை. அனுபவமில்லாதகர்வம் கொண்ட அந்த இளம் தளபதியான ஜாஒ குஒ, லியாங் போவின் தந்திரத்தை மாற்றி, முதலில் சாங்பிங்கை சென்று அடந்தான்.

அதேநேரத்தில், ச்சின் இரகசியமாக தனது தளபதியை மாற்றி, சிறந்த தளபதியான பை ச்சியை நியமித்தது. பை ச்சி தனது வீரர்களை இலகுவாக தோற்கடிக்க கூடியதாக இருக்கும் என பாவனை செய்யுமாறு கூறி ஜாஒவின் இராணுவத்தை தனது பொறிக்குள் சிக்க வைப்பதற்காக ஈர்த்தான். ச்சினின் உடைப்பதற்கு ஜாஒ குஒ முயற்சித்தார். ஆனால் அம்புகளால் தாக்கப்பட்டு இருந்தார். தலைவனில்லாமல் ஜாஒ ராணுவம் சரணடைந்தது.

இந்த வெற்றியுடன் ச்சின் தேசம் மற்றைய எல்லா தேசங்களை விட தனது ராணுவ மேலாணமையை நிலைநாட்டியது.