பை ஜு போர்
中国国际广播电台

6ஆம் நூற்றாண்டில் ஊ தேசமும் சூ தேசமும் தொடர்ந்து போரிட்டு, மேலாதிக்கத்துக்கு வருவதற்கு போராடின. 515இல் ஊவின் அரசனாக இளவரசன் ஹெ லு வந்தான். அவனஅ மிகப் புகழ்பெற்ற ஒரு தந்திரசாலியும், பண்டைய சீன ராணுவ விஞ்ஞானத்தின் ஸ்தாபகருமான சுன் ஊவை ஊவின் ராணுவ பலத்தை வளர்ப்பதற்கு தனது தளபதியாக நியமித்தான்.

அதே நேரத்தில் சூ தேசம் வீழ்ச்சியில் இருந்தது. சூ தேசத்தைச் சுற்றியுள்ள சில சிறிய தேசங்களை தோற்கடித்த பின்னர் ஊ அரசன் தனது பழைய எதிரியான சூ தேசத்திற்கு எதிராக ஒரு போரைத் துவக்க விரும்பினான். சூ தேசம் வீழ்ச்சியடைந்த போதும் தற்போதும் அது பரந்த நிலம் பரப்பு மற்றும் பெரிய ராணுவ பலத்துடன் ஒரு பெரிய சக்தியாக இருப்பதாக நம்பிய சுன் ஊ போரைத் தடுத்து நிறுத்தினான். மாற்றாக, ராணுவத்தினஅ மூன்று பிரிவுகளை சூக்கு கோபம் ஊட்டுவதற்காக அதன் எல்லைகளை மாறிமாறித் தாக்குவதற்கு அனுப்ப அவர் பரிந்துரைத்தார். சூ தேசம் தனது பிரதான படையை இதனுடன் சண்டையிடுவதற்கு அனுப்பியது. சூ படைகள் ஒரு பிரிவுடன் சண்டையிட்டு விரைவாக திரும்பியதும் ஊவின் அடுத்த பிரிவு சூவின் எல்லையை மீண்டும் ஒரு முறை தாக்க சூ ராணுவம் மீண்டும் திரும்பி வர வேண்டி இருந்தது. இது ஆறு வருடங்களுக்கு சென்றது. சூ தேசம் போலவே அதனுடைய கருவூலமும் காலியாகிக் கொண்டிருந்தது.

506இல் சூவைத் தாக்குவதற்கு ஒரு சரியான தருணம் வருந்தது. சுன் ஊ சூ எல்லையைத் தாக்குவதறஅகு சிறந்த படைகளை அனுப்பினான். இது போரை துரிதப்படுத்துவதற்காக ஆகும். சூ தேசத் தளபதிகளான நாங் வா மற்றும் ஸென் இன்சூவும் சூவினஅ முழு ராணுவத்துக்கும் தலைமை தாங்கி ஊ படைகளுடன் சண்டையிடுவதற்குச் சென்றனற். அவர்கள் இன்றைய ஹு பெய் மாநிலத்தில் உள்ள பை ஜுவில் ஒரு இறுதிப் போரைச் செய்தனர். சூவின் படைகள் 200,000 ஆக இருக்க ஊவின் படைகள் 30,000 ஆக மட்டுமே இருந்தது.

முதலில் சூவின் இரு தளபதிகளும் ஓர் தந்திரத்துக்கு உடன்பட்டனர். நாங் வா பிரதான படைக்குத் தலைமை தாங்கி ஊவின் படைகளைத் தாக்குவதும், ஸென் இன்சூ மிகுதிப் படைகளுடன் ஒரு எதிர்பாராத தாக்குதலைக் கொடுப்பதற்கு ஊன் ராணுவத்தினஅ பின்பக்கத்தைச் சுற்றிவளைப்பதும் என்பதே அத்தந்திரம் ஆகும். ஆனால் நாங்வா, ஸென் இன்சூ தன்னை விட அதிக சிறப்புகளைப் பெற்று விடுவார் என்ற பயத்தில் தன்னிச்சையாக திட்டத்தை மாற்றினார். அவர் சரியான தயார்படுத்தல் இல்லாமல் ஊவின் படைகளை முற்கூட்டியே தாக்கி, தோற்கடிக்கப்பட்டார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஸென் இன்சூ தப்புவதற்காக விரைவாக பினஅவாங்கினான். ஆனால், ஊவின் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டார். ஸென் இன்சூ தோற்கடிக்கப்பட்ட செய்தியை அவனுடைய தலையுடன் அவருடன் இருந்த ஒருவர் மூலமாக அனுப்பினார்.

சூ அரசன் உடனடியாக தப்பி ஓடினான். இந்த செய்தி முன்னிலை வீரர்களைச் சென்றடைந்தது. சூ ராணுவத்தினஅ கட்டுக்கோப்பு குலைந்து விரைவில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இந்த இறுதி வெற்றியின் பின்னர் ஊவானது சூவை அதனுடைய தலை நகரத்துக்கு துரத்திச் சென்று அவர்களை அடக்கினார்கள். இது சூவின் தலை நகரை மட்டும் காலி செய்வதகாக அமைந்தது. இனனொரு தேசமான ச்சின், சூ அதிகாரி ஒருவரின் வற்புறுத்தலில் ஊவுடன் போரில் ஈடுபட ஆரம்பித்தது.

எண்ணிக்கையில் அதிக குறைவான இராணுவமானது மிகவும் பெரிய ராணுவத்தை தோற்கடித்தது. இந்த போர் விரைவான போருக்கு ஓர் அதாரணமாக இருக்கின்றது.