ஹுன்மென்னில் பெரிய விருந்து
中国国际广播电台

கி.மு.221இல் சீனாவின் முதலாவது பேரரசான ச்சின் தனது ஆட்சியை சீனா முழுவதும் நிலை காட்டியது. ஆனால், அதனுடைய கொடூரமான ஆட்சியால் உழவர்கள் கலகம் செய்தனர். இதனால் அதன் அடிப்படையே ஆட்டம் கண்டது. தேசத்தைச் சேர்ந்த ஒரு பிரபு வான சியாங் யுவும் மற்றும் லியு பாங்கும் தலைமை தாங்கினர். சியாங் யு ஒரு துணிச்சல் மிக்க போர் வீரன். ஆனால் கர்வமும், பிடிவாதமும் உடையவராகவும் இருந்தார். லியு பாங் அதிக தந்திரம் உடையவராகவும் சரியான நடவடிக்கைக்கு சரியான நபரை நயமிப்பதில் ஒரு சிறந்த தலைவராகவும் இருந்தார். முதலில் சியாங் யுவின் படைகள் மிகப் பலமானதாக இருந்தன. இருவரும் ச்சினுக்கு எதிராகச் சண்டை செய்வதில் ஓர் கூட்டு முன்னணியை உருவாக்கினார்கள். அவர்களில் யார் ஒருவர் முதலில் ச்சினின் தலைநகரான சியேன் யாங்கை விழுத்துகின்றார்களே அவரே நாட்டின் பேரரசராக இருக்கலாம் என உடன்பாடு செய்தனர்.

கி.மு.206இல் ச்சின் ராணுவத்தின் பரதான படையுடன் சியாங் யு சண்டை செய்து கொண்டிருந்து போது லியு பாங் ஓர் வாய்ப்பை எடுத்து சியேன் யாங் நகரை வீழ்த்தினார். அவர் ச்சின் வம்சத்தின் கொடூரமான சட்டங்களைக் கைவிட்டு நகரத்தை நன்றாக ஒழுங்கில் வைத்தார். அவர் தனது ஆலோசகர்களின் ஆலோசனைப் படி நகரத்தில் தங்கியிருக்கவில்லை. அவருடைய செயற்பாடு மக்களிடையே அவருக்கு அதிக புகழை உருவாக்கியது.

சியேன் யாங்கை லியு பாங் வீழ்த்திவிட்டான் என்ற செய்தியை சியாங் யு கேட்ட போது கடும் கோபம் கொண்டான். அவர் சியேன் யாங்கின் பனிபக்கத்துக்கு விரைந்து அவருடைய இராணுவத்தை ஹொங்மென்னில் முகாமிட்டார். அவர் லியு பாங்கிடுன் ஒரு பெரிய போருக்கா ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

லியுவின் நெருங்கிய ஆலோசகரான ஜாங் லியாங், லியு பாங்கின் படைகள் சியாங் யுவின் படைகளுடன் போரிடுவதற்கு மிகப் பலவீனமாக இருக்கின்றன என்பதைக் கவதைத்தில் எடுத்தார். இவர் தனது நண்பரும் சியாங் யுவின் சிறிய தந்தையுமாகிய சியாங் போவிடம், லியு பாங் சியேன் யாங் நகரை சியாங் யு வரும்வரை மட்டும் காத்திருந்து காத்துக் கொண்டிருக்கின்றான் என்பதை சியாங் யுவுக்கு அறிவுறுத்துமாறு கூறினார்.

சியாங் யு மிகழ்ச்சியடைந்து லியு பாங்குக்கு ஓர் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான்.

சியாங் யுவின் தலைமை ஆலோசகரான பன் செங் விருந்தின் போது, லியு பாங்கை கொலை செய்யும் படி அவருக்கு அறிவுறுத்தினார். ஏனென்றால் லியு பாங் ஒரு நாள் சியாங் யுவின் பெரிய அச்சுறுத்தலாக வருவார் என்பதையும் இதனால் அவருடைய பாதுகாப்பு மிக பலமாக இருக்கும் என்பதையும் முற்கூட்டியே பன் செங் உணர்திருந்தார். ஆனால் சியாங் யு மிகவும் தயங்கினான்.

விருந்தின் போது, லியு பாங்கிற்காக ஒரு வாள் வீச்சு நடத்திக் காட்டும் படி சியாங் சுயாங் எனப்படும் ஓரு தளபதியிடம் பன் செங் ரகசியமாகக் கூறினான். உண்மையாகவே இது லியு பாங்கை படுகொலை செய்வதற்கான திட்டமாகும். இந்தச் சதியை முற்கூட்டியே தெரிந்து கொண்டு ஜாங் லியாங் அந்த வாள்வீச்சு நடனத்தில் பங்கு கொண்டிருந்த சியாங் போவை உதவி செய்யும் படி கேட்டார். அவருடைய நோக்கம் லியு பாங்கை பாதுகாப்பதாக இருந்தது.

அதே நேரத்தில் லியு பாங்கின் தளபதியான பன் குய்யை அவ்விருந்துக்கு ஜாங் லியாங் அழைத்தார். பயங்கரமான அந்த தளபதியோ லியு பாங் இன்னும் சியேன் யாங் நகரத்துக்குள் நுழையவில்லை ஏனென்றால் அதை அவர் உங்களுக்காக விட்டுவிட நினைக்கின்றார். நீங்கள் இன்னும் அவரைக் கொல்லுவதற்கு முயற்சிக்கிறீர்கள் என சியாங் யுவை கடிந்து பேசினான். சியாங் யு மிகவும் தாம்சங்கடமாக உணர்ந்தான். லியு பாங் பின்னர் கழிப்பறைக்கு போக வேண்டும் என்று கூறிவிட்டு, தனது ராணுவத்திடம் தப்பி ஓடினார்.

லியு பாங் தப்பிவிட்டதைப் பார்த்த பன் செங், சியாங் யு பெரிதாக எதையும் செய்ய முடியாது. லியு பாங் விரைவில் பேரரசைக் காட்டுப்பாட்டில் கொண்டு வருவார் என்று கூறினான்.

அது சரியாக இருந்தது. சியாங் யு தன்னை சூவின் அரசனாக பிரகடனப்படுத்திய போதிலும், சியாங் யு எங்கேயோ சண்டை செய்து கொண்டிருந்த போது சியேன் யாங்கை மீண்டும் கைப்பற்றினான். சியாங் யுவை இறுதியாக லியு பாங் தோற்கடிக்கும் வரை இருவரும் சண்டை செய்வதற்கு ஆரம்பித்தனர்.

கி.மு.202ம் ஆண்டில் லியு பாங் ஓர் சமாதான உடன்படிக்கையில் சியாங் யுவுடன் கையொப்பமிட்டார். அவர்கள் ஹான்னுக்கு சொந்தமாக மேற்கு இருக்கும் என்றும் சூவுக்கு கிழக்கு சூவுக்கு சொந்தமாக இருக்கும் என்றும் உடன்பட்டனர். இந்த உடன்படிக்கையுடன் சியாங் யு தனது படைகளை பெங்குக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவனது ராணுவத்தை மாட்ட வைப்பதற்காக லியு பாங், ஹான் சின் மற்றும் பெங் யு இருவரையும் அனுப்பிய லியு பாங் சியாங் வுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்.

பின்னர் லியு பாங்கின் ராணுவம் சியாங் யுவை ,ஹெ சியா என்ற இடத்தில் மடக்கியது. ஆனால், சியாங் யு வேறு வழியின்றி தப்பி ஓடிவிட்டான். அவர் இறுதியாக ஊ ஜியாங் என்னும் ஆற்றுகரையில் தற்கொலை செய்து சூவுக்கு ஹான்னுக்கும் இடையிலான நான்கு வருட போருக்கு முடிவு கட்டினான்.

சிறிது காலத்திற்குப் பின்னர் லியு பாங் தன்னை ஹான் பேரரசராக பரகடனப்படுத்தி, சியேன் யாங்கை தன்னுடைய புதிய தலை நகராக்கி, அதற்கு சாங் அன் என மறுபெயரிட்டான் அந்த நகரத்தை உலகத்திலேயே மகத்தான நகரமாக மாற்ற விரும்பி, ஒரு அரண்மனை கட்டுவதில் பெருந்தொகை நிதியை முதலீடு செய்தான். ஹான் வம்சம் சீன வரலாற்றில் இரண்டாவது ஐக்கிய பேரரசாகும்.