வசந்த விழா
中国国际广播电台


சீன மக்களைப் பொறுத்தவரை, வசந்த விழா, ஒரு ஆண்டில் மிகவும் முக்கியமான விழாவாகும். காலத்தின் மாற்றத்துடன், வசந்த விழாவில் தன்மையும், கொண்டாடும் வடிவமும் மாறிவிட்ட போதிலும், சீன மக்களின் வாழ்க்கையிலும் உணர்விலும் அதன் தகுநிலை உறுதியாக இருக்கறது.

4000 ஆண்டுகள் வரலாறுடைய வசந்த விழாவுக்கு, துவக்கத்தில் ஒழுங்கான நாளும் பெயரும் இல்லாமல் இருந்தது. கி.மு. 2100ம் ஆண்டு வரை, நியான் என்ற பெயர், வசந்த விழாவுக்குத் தரப்பட்டது. அமோகம் அறுவடை என்பது, அதன் பொருள்.

சீனாவின் நாட்டுப்புற வழக்கத்தின் படி, வசந்த விழா, சந்திர நாள் காட்டியின் டிசம்பர் 23ம் நாள் முதல், புத்தாண்டின் ஜனவரி 15ம் நாள் வரை இருக்கிறது. இதில், டிசம்பர் 30ம் நாளிரவும் ஜனவரி முதலாவது நாளும் மிகவும் முக்கியமானவை.

வசந்த விழாவை வரவேற்க, நகரங்களில் அல்லது கிராமங்களில் மக்கள் பல்வேறு ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கிராமங்களில், பல்வேறு விவசாயிக் குடும்பங்கள், வீட்டைச் சுத்தம் செய்து, உடைகளைக் கழுவி, சந்தைக்குச் சென்று, இனிப்பு, கேக், இறைச்சி, பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை வாங்குகின்றனர். மாநகரங்களில், விழாவுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே துவங்கி விடுகின்றன. நாகரிக வாரியங்களும் கலை நிறுவனங்களும் எழில் மிக்க நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது, தொலைக்காட்சி நிலையங்கள் பல வகைளில் சேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துவது, பல்வேறு பூங்காகளிலும் பாரம்பரிய கோயில்களிலும் சந்தைகளிலும் தொடங்கி, பயணிகளுக்கு அதிகமான விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்குவது, மக்களின் தேவையை மன நிறைவு செய்யும் பொட்டு, கடைகள், நாடெங்கும் மற்றும் வெளிநாட்டிலிருந்து பொருட்களை கொண்டுவந்து விற்பது முதலியவை இதில் இடம்பெறுகின்றன. புள்ளிவிபரத்தின் படி, வசந்த விழா முழுவதிலும், சீன மக்களின் நுகர்வு, முழுநாட்டு நுகர்வு மதிப்பில் சுமார் 30 விழுக்காடாகும்.

பல்வேறு இடங்களிலுள்ள சீன மக்கள், வேறுபட்ட பாராம்பரிய பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளனர். ஆனால், டிசம்பர் 30ம் நாளிரவில் வடபகுதி அல்லது தென்பகுதி எதுவாயினும், குடும்பத்தினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விருந்தில் கலந்துகொள்ள வேண்டும. தென்பகுதியில், இவ்விருந்தின் உணவுப்பட்டியலில் டோபும் மீனும் கண்டிப்பாக உள்ளன. இவ்விரு வறுவல்களுக்கும் சீன மொழியில், செல்வம் என்ற பொருளாகும். வடபகுதியில், குடும்பத்தினர் ஒன்று சேரும் விருந்தில், பெரும்பாலான குடும்பங்கள் தாம்புலின் சாப்பிட வேண்டும்.

டிசம்பர் 30ம் நாளிரவு முழுவதிலும, மக்கள், மகிழ்ச்சியுடன் புதிய ஆண்டை வரவேற்கின்றனர். வசந்த விழாவின் முதல் நாளன்று, குடும்பத்தினர்கள், விழாச்சட்டையை அணிந்து, விருந்தினர்களை வரவேற்று அல்லது உறவினர் வீட்டுக்குப் போய் சந்திக்கின்றனர். புத்தாண்டு வாழ்த்துக்களை ஒவ்வொருக்கு ஒருவர் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில், உறவினர்களிடையே முரண்பாடு வந்தால், வசந்த விழாவில் சந்தித்து அதைத் தீர்த்துக்கொள்ளலாம்.

வசந்த விழாவில், சில இடங்களில் இசைநாடகத்தையும் திரைப்படத்தையும் காட்டுவது, சில இடங்களில், சிங்க நடனம், யாங்கோ ஆடல் ஆடுவது, கோலூன்றி நடப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காணலாம். நாடெங்கும் மகிழ்ச்சி நிரம்பிவழிகிறது.

சந்தையில், மக்களின் அன்பு வாழ்க்கை மற்றும் தாரளமாக உழைப்பை வெளிப்படுத்தும் பல்வேறு ஓவியங்கள் விற்கப்படுகின்றன. தவிர, வசந்த விழாவின் விளக்குப்பண்டிகை மிகவும் கிளர்ச்சியான கொண்டாட்டம். வசந்த விழா விளக்கு, சீனாவின் நாட்டுப்புற கலைப் பொருளாகும். விளக்கில் பல்வேறு விலங்குகள், இயற்கை காட்சிகள், கதாபாத்திரங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.

சீன மக்களின் வாழ்க்கை நிலைமை நாளுக்கு நாள் உயர்வதோடு, வசந்த விழாவின் வடிவமும் மாற்றிக்கொண்டிருக்கிறது. இதில், சுற்றுலா பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.