சீ சியெள விழ
中国国际广播电台


சீன சந்திர நாள் காட்டியின் ஜூலை திங்கள் 7ம் நாள், சீனாவின் சீ சியெள விழா. சீனாவின் நாட்டுப்புறக் கதையில், இந்த நாளன்று, Altair எனும் நட்சத்திரமும், Vega எனும் நட்சத்திரமும் வானில் சந்திக்கும்.

புராணக்காலத்தில், வானில் மேகம் இல்லை. வானில் இருந்த மன்னர், தமது 7 புதல்விகளிடம் வானுக்கு ஒரு ஆடையை நெசவு செய்து தருமாறு கோரினார். அவரின் 7வது மகள், திறமையுள்ளவர். பூங்காவில் 7 வண்ணங்களுடைய மலரைக் கொண்டுவந்து, சாயம் எடுத்து நிறமான சட்டைத் தயாரித்தார். சகோதரிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். வானம் சாதாரண நாளில், வெள்ளை சட்டையையும், மழை நாளில் சாம்பல் சட்டையையும், காலையிலும் இரவிலும் நிறமான சட்டையையும் அணிய வேண்டுமென முடிவு செய்தனர். இதைக் கேட்டறிந்த பின்பு, மன்னர் 7வது மகளுக்கு, நெசவு மகள் என்று பெயர் சூட்டினார்.

நெசவு மகள் நாள்தோறும் நெசவு செய்த போது, மனித உலகத்தின் காட்சியை அடிக்கடி பார்த்தார். ஒரு மேய்ப்பர் தனியாக உழவு செய்து, ஒய்வு நேரத்தில், அருகில் மாட்டுடன் பேசியதைக் கண்டார். நெசவு மகளின் வனம் ஈர்க்கப்பட்டது.

ஒரு நாள், மாடு மேய்ப்பரிடம் சொன்னது:“ஜூலை 7ம் நாளன்று, மன்னரின் 7 மகள்கள், மனித உலகத்துக்கு வந்தடைந்து குளிப்பார்கள். நெசவு மகளின் சட்டை மறைந்தால், அவள் உங்களின் மனைவியாக மாற்றுவார்என்று மாடு கூறியதைக் கேட்டு, முயற்சி செய்ய மேய்ப்பர் முடிவு செய்தார்.

குறிப்பிட்ட நாளில், மேய்ப்பர் ஆற்றின் கரையிலுள்ள நாணல் புதரில் மறைந்து காத்திருந்தார். பின்பு, 7 கன்னிப்பெண்கள், நிறமான மேகங்களுடன் தோன்றினர். அவர்கள் ஆற்றில் குளித்த போது, மேய்ப்பர் நெசவு மகளின் சட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார். வேகமாக ஒடியதால் ஏற்பட்டுள்ள நாணல் புதரின் சலசலப்பைக் கேட்டு, 7 கன்னிப்பெண்களும் ஆச்சரியம் கொண்டனர். அவர்கள் தங்களது சட்டையை அணிந்து, வானில்ப் பறந்தனர். நெசவு மகள் சட்டை இல்லாமல், கரையில் நடந்தார். மேய்ப்பர் நெசவு மகளிடம் சொன்னார், எனது மனைவியாக இருக்க விரும்பினால், சட்டை தரப்படும். நெசவு மகள் இதை ஏற்றுக்கொண்டார்.

அன்றிரவு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு ஆண்டுகளில், ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்று எடுத்தனர். அவர்கள் அன்பாக வாழ்ந்தனர்.

வானில் ஒரு நாள் என்பது, பூமியில் ஒரு ஆண்டாகும். மன்னர், 7 நாள்களுக்கு ஒரு முறை, தமது 7 புதல்விகளையும் சந்திக்கிறார். 7வது மகள், வான் மாளிகைக்கு திரும்ப வில்லை அது மட்டுமல்ல, மனிதனைத் திருமணம் செய்து கொண்டதை அறிந்த மன்னர் கோபம் கொண்டார். ஜூலை 7ம் நாளில், நெசவு மகளைக் கைதுசெய்து வரும் படி, வீரர்களை அனுப்பினார். மேய்ப்பர் மிகவும் கவலையோடு, தமது குழந்தைகளுடன் மனைவியைப் பின்தொடர்ந்தார். திடீரென்று, வானில் மன்னரின் பெரிய கை தோன்றி, மேய்ப்பருக்கும் நெசவு மகளுக்குமிடையில் ஒரு பெரிய ஆறு தோன்ற செய்தது. அப்போது, ஏராளமான பறவைகள் பறந்து வந்து உட்கார்ந்தன. இதனால் அவை ஆற்றின் மேல் ஒரு பாலமாக மாறிவிட்டன. இந்தத் தம்பதி இந்த பாலத்தில் சந்திக்க முடியும். இதைக் கண்டு, ஒவ்வொரு ஜூலை 7ம் நாளிலும், மேய்ப்பரும் நெசவு மகளும் பாலத்தில் சந்திக்கலாம் என மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அப்பொழுது முதல், ஒவ்வொரு ஆண்டின் ஜூலை திங்கள் 7ம் நாளன்று, பெண்குழந்தைகள், மேய்ப்பருக்கும் நெசவு மகளுக்குமிடையிலான காதல் வார்த்தைகளை கேட்டறிகின்றனர்.