துவான் வூ திருவிழா
中国国际广播电台


சீன சந்திர நாள் காட்டியின் படி மே திங்கள் 5ம் நாள், சீனாவில் துவான் வூ திருவிழா கொண்டாடப்படுகிறது. துவான் வூ விழா, வசந்த விழா மற்றும் நிலா விழா, சீனாவின் மூன்று முக்கிய விழாகள் என கூறப்படுகின்றன.

துவான் வூ திருவிழா பற்றி பல கதைகள் உள்ளன. பழைய காலத்தின் கோடைக்கால பழக்கம் என்று சிலர் இதைக்கருதினர். பழைய காலத்தில் யாங்சி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள், drganவுக்கான மதிப்பு என்று சிலர் கருதினர். ஆனால், இந்த விழா, QU YUAN எனும் நாட்டுப்பற்று கவிஞருக்கான நினைவு நாள் என்பது, மக்களிடையே பொதுவான கூற்றாகும். QU YUAN என்பவர், கி.மு.3வது நூற்றாண்டின் CHU நாட்டில் வாழ்ந்தார். அவருடைய தாய்நாடு, எதிரி நாட்டினால் கைப்பற்றப்பட்ட பின், அதிர்ச்சியடைந்த அவர், MI LUO ஆற்றில் மூழ்கி குடித்து இறந்தார். அந்த நாள், மே திங்கள் 5ம் நாள். அதன் பிறகு, அவரின் பெருந்தன்மையை நினைவு கூடும் பொருட்டு, அதே நாளில், மக்கள் அரிசி நிறைந்திருக்கும் மூங்கில் குழாய்களை ஆற்றில் எறிய வேண்டும்.

சுன்சி சாப்பிடுவது என்பது, துவான் வூ திருவிழாவின் முக்கிய வழக்கமாகும். மூங்கில் இலை பயன்படுத்தி, பசை அரிசிகளைச் சுற்றிக் கட்டி வேகவைக்கப்பட்ட உணவு உண்ணபப்டும். விழாவுக்கு முந்திய நாளிரவு, சீன மக்கள் சுன்சி தயாரிக்க வேண்டும். விழாவின் காலத்தில் உறவினர் வரும் போது, தமது வீட்டின் சுன்சி அன்பளிப்பாக வழங்க வேண்டும்.

சுன்சி சாப்பாட்டை தவிர, தனிச்சிறப்பியல்ப்பு வாய்ந்த அலங்கார வழக்கம் இருக்கிறது. இந்த நாள், ஒவ்வொரு வீட்டு கதவிலும் ஏ சேள எனும் மூலிகையை தொங்கவிட வேண்டும். இதனால், ஒரு புறம், அரக்கனைத் தடுக்க முடியும். மறு புறம், கோடைகாலத்தில் மழை அதிகம் இருப்பதால், நோயைத் தவிர்க்க முடியும். தவிர, குழந்தைகளுக்கு 5 நிறமான நூலைக் கொண்டு கயிறு திரிக்க வேண்டும். புலி, CALABASH முதலிய வடிவமான நறுமணமுள்ள பைகளைத் தயாரிக்க வேண்டும். குழந்தைகள், இந்த நறுமணமுள்ள பைகளை தூக்கிக் கொண்டு, புலியின் தலை வடிவமான காலணி அணிய வேண்டும். இது அனைத்தும், குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக இருக்கிறது.

தென் சீனாவின் யாங்சி ஆற்றின் மத்திய மற்றும் கீழ் பள்ளத்தாக்கு பிரதேசத்தில், படகுப் போட்டி நடத்துவது, துவான் வூ திருவிழாவின் முக்கிய வழக்கம் ஆகும். இவ்வழக்கம், QU YUAN வுடன் தொடர்புடையது. அப்போது, QU YUAN ஆற்றில் வீழ்ந்ததை கண்டறிந்த பின், மக்கள், படகை ஓட்டிச்சென்றுக் காப்பாற்றினர். அதன் பிறகு, படகு போட்டி ஒரு வழக்கமாக மாறிவிட்டது. ஒவ்வொரு துவான் வூ திருவிழாவிலும், படகுப் போட்டி, பெரிய விழாவாக இருக்கிறது. சில இடங்களில், சுமார் 50 படகுகள் போட்டியில் கலந்துகொள்கின்றன. படகுப் போட்டியால், விழா விறுவிறுப்பாக நடைபெறுகிறது.