சீன திருமணச் சடங்கு
中国国际广播电台


நீண்ட வரலாறுடைய சீனாவில், திருமணச் சடங்குகள் மாற்றமடைந்து வருகின்றன. ஆனால், திருமண விழா பற்றிய உளமார்ந்த உணர்வில் எப்பொழுதும் மாற்றமில்லை.

பண்டைக் காலத்தில் சீனாவின் திருமணத்தில் ஆறு வகை சடங்குகள் இருந்தன. ஒரு பையன் ஒரு கன்னியை விரும்பினால், ஒரு நடுவர் மூலம் அன்பளிப்பை கன்னியின் வீட்டுக்கு கொடுத்து அனுப்புவார். அந்த நடுவர், இருவரின் பெயர்களையும் வயதையும் எழுதிய அட்டையை பரிமாறுவார். இரு தரப்பும் ஏற்றுக்கொண்டால், அவர்கள் சந்திக்கலாம். பையனின் குடும்பத்தினர், கன்னியின் வீட்டுக்குச் சென்று, அந்தக் குடும்பத்தின் நிலைமையை மேலும் புரிந்துகொள்வார்கள். அப்போது, பெண்கள் தமது கணவனை முன்கூட்டியே பார்க்க முடியாது.

நிச்சயதார்த்தம், திருமணச் சடங்கில் முக்கிய பகுதியாகும். நாட்டுப்புற ஒப்பந்தம் போல இது இருந்த போதிலும், ஒரு சட்டம் போலும் செயல்பட்டது. தென்சீனாவின் வென்சேள நகரில், மோதிரம் மாற்றப்பட்டது. மோதிரம் என்பதற்கு, சீனாவின் பழைய எழுத்துகளில் நீண்டகாலம் என்ற பொருளாகும். திருமணம் மாற்றப்பட முடியாது என்பதை மோதிரம் மாற்றுவது, பிரதிபலித்தது. இரு தரப்பும் பல சடங்குகளின் மூலம், திருமணம் செய்வது, திருமண விழாவின் மிகவும் பரப்பரப்பான ஆரவாரமான நிகழ்ச்சியாகும்.

திருமண விழா நாளன்று, மணமகள் பொதுவாக சிவப்பு சட்டை அணிகிறார். வீட்டிலிருந்து புறப்படும் குடும்பத்தினரிடம் பிரிந்து செல்ல விரும் பாததால் அழுகிறாள். மணமகனின் வீட்டுக்கு சென்றடைந்த பின், திருமண விழா துவங்குகிறது.

திருமண விழாவில், விருந்து மிகவும் முக்கியமானது. நாட்டுப்புறத்தில், திருமண விருந்து, திருமணத்தின் தகுதியைக் காட்டுவதாக கருதப்பட்டது. விருந்தில், மணமகள், விருந்தினர்களுக்கு உணவுப்பண்டங்களை பரிமாற வேண்டும். மண அறை இன்ப அறை என்றும் கூறப்படுகிறது. மண அறையில் நடைபெறும் வேடிகை நிகழ்ச்சி, திருமணத்தின் கடைசி சடங்காகும். திருமணத்தில் மகிழ்ச்சி நிலைமையை அதிகரிக்கும் வகையில், மணமகனும் மணமகளும் விருந்தினரின் கடினமான கேள்விகளுக்குப் பதிலளித்து சிரித்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.