தேநீர் அருந்தும் பழக்கம்
中国国际广播电台

 

சீனர்களின் தேநீர் குடிக்கும் பழக்கத்திற்கு, 4000 ஆண்டுக்கு கூடுதலான வரலாறு உண்டு. சீனர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பானங்களில் தேநீர் முக்கிய இடம்பெறுகிறது. விருந்தினர்களுக்கு தேநீர் வழங்குவது, சீனர்களின் பழக்கமாகும். தேநீரைக் குடித்துக்கொண்டே பேசுவதால், மகிழ்ச்சியான நிலைமை உருவாகிறது.

கி.மு280ம் ஆண்டுக்கு முன், தென் சீனாவில் வூ என்ற சிறிய நாடு இருந்தது. அதன் மன்னர் தமது அமைச்சர்களுக்கு விருந்தளித்த போது, மது குடிக்க விரும்பினார். இதில் வே சேள எனும் அமைச்சரால் அதிகமான மது குடிக்க முடியாது. அவர் மதுவுக்கு பதிலாக தே நீரை குடிப்பதற்கு மன்னர் ஒப்புதல் அளித்தார். அதன் பின்னரே, விருந்தினரை வரவேற்று தே நீர் கொடுக்கும் பழக்கம் துவங்கியது. தாங் வமிசக்காலத்தில், தேநீர் குடிப்பு, மக்களின் பழக்கமாக மாறி விட்டது. இது, புத்த மதத்துடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்டது. 713ம் ஆண்டு முதல் 741ம் ஆண்டு வரை, கோயிலுள்ள குருமார், மூளையை சுறுசுறுப்பாக்க தேநீர் குடிக்க துவங்கினர். அத்துடன், தாங் வமிசகாலத்தின் பணக்கார வீடுகளில், தேநீர் அறை என்று சிறப்பாக கட்டப்பட்டது.

780ம் ஆண்டில், தேயிலையின் நிபுணர் லூ யியு, தேயிலையை விளைவித்து, தயாரித்து, குடிக்கும் அனுபவங்களைத் தொகுத்து ஆராய்ந்து, தேயிலை திருமறை எனும் தேயிலை பற்றய சீனாவின் முதலாவது நூலை எழுதியுள்ளார்.

சீனாவில், தேநீர் குடிப்பது என்பது, தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பண்பாடாக மாறியுள்ளது. தேநீர் குடிப்பு, ஒரு வகை கலையாக கருதப்பட்டது. நாடெங்கும் பல்வேறு வடிவமான தே நீர் அகங்கள் உள்ளன. பெய்ஜிங்கின் செழுமை மிக்க சியான்மான் சாலையின் பக்கத்தில், சிறந்த தேநீர் கடை இருக்கிறது. மக்கள் இங்கே அமர்ந்து, தே நீர் குடித்து, சிற்றுண்டி சாப்பிடுவதோடு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கின்றனர். தென் சீனாவில், அழகான இயற்கை காட்சிக்கு அருகில் தே நீர் கடைகள் உள்ளன. பயணிகள், தேநீர் குடிக்கும் போது, இயற்கை காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.

சீன மக்கள் அதிகமாக தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். பல்வேறு இடங்களில் வரவேற்கப்படும் தேயிலைகள் வேறுப்பட்டவை. பெய்ஜிங்கை சேர்ந்தவர்கள், மலர் தே நீரை குடிக்க விரும்புகின்றனர். ஷாங்காங்யை சேர்ந்தவர்கள், பச்சை தே நீரை குடிக்க விரும்புகின்றனர். புசியான் மாநிலத்தின் மக்களுக்கு, சிவப்பு தே நீர்ப் பிடிக்கின்றது. சில இடங்களில், தே நீரில் சில பொருட்களை சேர்க்க விரும்புகின்றனர். ஹுநான் மாநிலத்தில், இஞ்சி உப்பு கலந்த தே நீர் கொடுத்து விருந்தினரை வரவேற்கின்றனர். தேநீரில் தேயிலை மட்டுமல்ல, உப்பு, இஞ்சி, எள்ளு ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன.

பெய்ஜிங்கில், வரவேற்பவர் தேநீரை வழங்கும் போது, விருந்தினர்கள் உடனடியாக இரு கைகளாலும் அதை ஏற்று, நன்றி சொல்கின்றனர். தென் சீனாவின் குவான்துங் மற்றும் குவான்சி மாநிலங்களில், நன்றி தெரிவிக்கும் பொருட்டு, விருந்தினர் வலது கையால் மேசையை மூன்று முறை தட்ட வேண்டும்.