சாப்ஸ்டிகஸ்
中国国际广播电台

உலகெங்கும் உணவு உண்ண மூன்று வழிமுறைகள் உள்ளன. 40 விழுக்காடு மக்கள் கையால் எடுத்துச் சாப்பிடுகின்றனர். 30 விழுக்காடு மக்கள் முள்கரண்டியை பயன்படுத்திக் குத்தி எடுத்துச் சாப்பிடுகின்றனர். 30 விழுக்காடு மக்கள் சாப்ஸ்டிகஸ் என்னும் குச்சிகளைப் பயன்படுத்துகின்றனர்.

சாப்ஸ்டிகஸ், சீனரின் கண்டுபிடிப்பாகும். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன், யின் மற்றும் சான் வமிச காலத்தில் இது தோன்றியது. பண்டைய ஆவணத்தில் உள்ள பதிவின் படி, அப்போது, சாப்ஸ்டிகஸ், சு அல்லது சியா என்று கூறினர். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில், சாப்ஸ்டிகஸ், சியின் என்று அழைக்கப்பட்டது.

பண்டைகாலத்தில் உணவைப் பொரித்து உண்ணும் போது, இரண்டு கிளைகளைப் பயன்படுத்தி பற்றி எடுத்து சாப்பிட்டனர். அதுவே, படிப்படியாக சாப்ஸ்டிகஸாக மாறியது. அதன் வடிவம், இரண்டு குச்சிகளாகும். சீனாவின் சாப்ஸ்டிகஸ், மேல் பகுதி குண்டாகவும், கீழ் பகுதி ஒல்லியாகவும் உள்ளது. இது, சிரமம் இல்லாமல் பற்றி எடுத்துச் சாப்பிட உதவுகிறது.

சாப்ஸ்டிகஸ் எளிதாக இருந்த போதிலும், அதன் மூலப்பொருட்கள் மற்றும் அலங்காரத்தில் சீனர் கவனம் செலுத்துகின்றனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், தந்தம், வெண்கலம் ஆகியவற்றை பயன்படுத்தி சாப்ஸ்டிகஸை தயாரித்தனர். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில், மன்னர் மாளிகையிலும், அதிகாரி மற்றும் பணக்கார வீடுகளிலும் தங்கத்தையும் வெள்ளியையும் பயன்படுத்தி, சாப்ஸ்டிகஸ் தயாரிக்கப்பட்டு, பச்சை வர்ணம் பூசி, சாப்ஸ்டிகஸை அலங்காரம் செய்தனர்.

சீன மக்களின் நாட்டுப்புற பழக்கத்தில், சாப்ஸ்டிகஸ், முக்கிய தகுதி பெற்றுள்ளது. சில இடங்களில் திருமணத்தின் போது, மணமகளுக்கு இரண்டு ஜோடி சாப்ஸ்டிகஸ் கண்டிப்பாக மணக்கொடையாக தரப்பட வேண்டும். இது, மணமகனும் மணமகளும் எதிர்காலத்தில் கூட்டாக வாழ்ந்து, வெகுவிரைவாக குழந்தை பெற வேண்டும் என்ற வாழ்த்தைக் காட்டுகின்றது. வட சீனாவின் கிராமங்களில், திருமண நாளன்று, மணமகனும் மணமகளும் இருக்கும் திருமண அறைக்குள் உறவினர்கள் சாசெளப்ஸ்டிகஸை எறிந்து, வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.

சீனர்கள் சாப்ஸ்டிகஸ் பயன்படுத்தும் நுட்பம், வெளிநாட்டவரை ஈர்க்கின்றது. மேலை நாடுகளில், சாப்ஸ்டிகஸ் பயன்படுத்தும் முறையைக் கற்பிப்பதற்காகவே தனியாக ஒரு பயிற்சி மையம் நிறவப்பட்டுள்ளது. சீனா, சாப்ஸ்டிகஸின் தாயகமாகும். ஆனால், உலகின் முதாலவது சாப்ஸ்டிகஸ் காட்சியகம், ஜெர்மனியில் அமைக்கப்பட்டது. பல்வேறு நாடுகள் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு அதிகமான சாப்ஸ்டிகஸ், அங்கே காட்சி வைக்கப்பட்டுள்ளன.